Thursday, October 18, 2012

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி...



அறிந்த விளக்கம் :

யாரோ ஒரு புண்ணியவான் போன போக்கில் ஐந்தும் பெண்

பெற்றால் அரசனும் ஆண்டி தான் என சொல்லிவிட, நாளடைவில் ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி எனமாறி
பெண் பிள்ளைகள் அதிகம் உள்ள தந்தை மனதில் புயல் அடிக்க செய்து விட்டனர்..

உண்மை அதுவல்ல..
அறியாத விளக்கம் :

ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விடயங்கள்..

1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன்
பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..

இவர்களை கொண்டிருப்பவன்,
அரசனே ஆனாலும் கூட
அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் என்ற
அர்த்தத்திலேயே ஆண்டி என்ற பிரயோகம்
இங்கு பயன்படுகிறது...

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...