Saturday, October 20, 2012

வெள்ளரியின் சிறப்பு!





நம்மில் பலருக்கு வெள்ளரி சாப்பிடப் பிடிக்கும். வெள்ளரியில் காய், பிஞ்சு என்று இரு வகையுண்டு. மருத்துவக் குணங்கள் நிறைந்தது வெள்ளரி.
வெள்ளரி ஒரு நல்ல நீரிளக்கி. செரிமானத்துக்கு உதவுவது. வெள்ளரிப் பிஞ்சு பித்தத்தைத் தணித்து, குடலுக்குக் குளிர்ச்சியூட்டுகிறது. சிறுநீரகக் கோளாறைச் சரிசெய்கிறது. தலைசுற்றலைத் தடுக்கிறது.
சமீபத்திய ஓர் ஆய்வின்படி, மூட்டு வீக்க நோய்களை வெள்ளரி குணமாக்குகிறது. எனவே வெள்ளரி ஒரு முக்கிய காய்கறி வகை என்று கூறலாம்.
வெள்ளரியில் `கலோரி’கள் குறைவாக உள்ளதால், உடல் பருமனைக் குறைக்க விரும்புவோருக்கு நல்லது.
வெள்ளரிச் சாறுடன் விதைகளையும் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலன்கள் ஏற்படும். கீல்வாதத்தைப் போக்கவும் இது உதவுகிறது. சிறுநீரகத்துக்கும் நன்மை புரிகிறது.
நீரிழிவு நோயாளிகளும், உடல் பருமனைக் குறைக்க விரும்புபவர்களும் வெள்ளரிப் பிஞ்சுகளை அதிகமாகச் சாப்பிடுவது நலம் பயக்கும்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...