நன்றாக பழுத்த கொய்யா பழத்துடன் மிளகு, எலுமிச்சை
சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல்சோர்வு, பித்தம் நீங்கும்,
கொய்யாவுடன் சப்போட்ட பழத்தை சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால் உடல்
வலுப்பெறுவதோடு ரத்தம் சுத்தமாகும்.
மதிய உணவுக்கு பிறகு
கொய்யாபழம் சாப்பிட்டால் நன்றாக ஜீரணம் ஆவதோடு, மலச்சிக்கல் நீங்கும்.
வயிற்றுப்புண் குணமாகும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சக்தியும்,
வயிற்றுப்போக்கு, மூட்டுவலி,அரிப்பு, மூலநோய், சீறுநீரக கோளாறு உள்பட பல
நோய்கள் கட்டுப்படுத்தும் ஆற்றலும் அதற்கு உண்டு.
கொய்யா இலைகளை
சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, தலையில் பற்று போட்டால் கடுமையான தலைவலி,
ஒற்றைத் தலைவலி நீங்கும். இலைகளை அரைத்து தண்ணீரில் கலந்து பருகினால்
வயிற்றுவலி, தொண்டைப்புண் போன்ற நோய்கள் குணமாகும்.
கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் கொய்யாவில்
அதிக அமிலத்தன்மை இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் பல
தொந்தரவுகளை ஏற்படுத்தும். கொய்யாவில் ஆப்பிளைவிட கூடுதலான சத்துகள் உள்ளன.
இது யாருக்கும் தெரிவதில்லை. கொய்யா மலிவான விலையில் கிடைப்பதால் அதன்
மகத்துவத்தை யாரும் உணர்வதில்லை. உண்மையில் கொய்யாப்பழம் விலை உயர்ந்த
ஆப்பிளை விட கூடுதல் சக்தியும், ஆரோக்கியமும் கொண்டது.
No comments:
Post a Comment