சித்தர்களின் பாடல்கள் மற்றும் யோகமுறை நூல்களில் மூச்சை இழுக்கும், நிறுத்தும் மற்றும் வெளியேற்றும் கால அளவிற்கு “மாத்திரை” என்ற சொல்லையே பயன்படுத்துவர்.
மாத்திரை என்றால் கண்ணை ஒரு முறை இமைக்கும் நேரமாகும் அல்லது கைவிரலை ஒருமுறை நொடிக்கும் நேரமாகும்.
ஓம் சிவாய நம என்ற மந்திரத்தை மனத்திற்குள்ளே ஒரு முறை செபித்தால் 8 மாத்திரை எனக் கணக்காகும்.
யோகமுறை நூல்கள் மற்றும் சித்தர்களின் யோகமுறை பாடல்களில் பூரகம், கும்பகம் மற்றும் ரேசகம் என்ற சொல் பயன்படுத்தபட்டிருக்கும்.
பூரகம் என்பது வெளியிலுருக்கும் பிராண வாயுவை உள் சுவாசித்தலாகும்
கும்பகம் என்பது உள்ளே இழுத்த பிராண வாயுவை உள்ளேயே நிறுத்தி வைப்பது.
ரேசகம் என்பது உள்ளே நிறுத்திய பிராண வாயுவை மெதுவாக வெளியே விடுவது.
கும்பகம் என்பது உள்ளே இழுத்த பிராண வாயுவை உள்ளேயே நிறுத்தி வைப்பது.
ரேசகம் என்பது உள்ளே நிறுத்திய பிராண வாயுவை மெதுவாக வெளியே விடுவது.
ரேசகம் மற்றும் பூரகத்தின்போது 16 மாத்திரை அளவும் அதாவது இருமுறை ஓம் சிவாய நம என்று செப்பிக்கும் நேரமாகும்.
கும்பகத்தின் போது 32 மாத்திரை அளவும் அதாவது நான்கு முறை ஓம் சிவாய நம என்று செப்பிக்கும் நேரமாகும்..
பிராணாயாமத்தின் போது கும்பகத்தின் அளவை அதிகப்படுத்துவதே பயிற்சி பெருபவரின் முக்கிய குறிக்கோளாகும்.
No comments:
Post a Comment