Thursday, October 31, 2013

டென்ஷனை குறைப்பதற்கான உணவு முறைகள்



*உடல் பருமனை குறைக்க வேளைக்கீரையுடன் பூண்டு சேர்த்து வதக்கி சாப்பிடலாம். டென்ஷனுக்கு உடல் பருமனும் காரணம்.

*ரத்தசோகை காரணமாக டென்ஷன் ஏற்படலாம். இதற்கு வெறும் வயிற்றில் வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு தண்ணீர் குடிப்பதை வழக்கப்படுத்தி கொள்ளலாம்.

*மலை வேப்பம்பூவில் கஷாயம் வைத்து குடித்தால் டென்ஷன் தலைவலி குணமாகும்.பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

*வில்வ இலையை மென்று தின்று தேன் குடித்தால் மன அழுத்த பாதிப்புகள் குணமாகும்.தினமும் இரவு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

*ருத்ராட்சம், வல்லாரை இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து தினமும் கிராம் பொடியை தேனில் குழைத்து சாப்பிடுவதன் மூலம் மறதியால் உண்டாகும் டென்ஷனை தடுக்கலாம்.

*முளைக் கீரை தண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் சூடு தணியும்.முட்டைக்கோசுடன் வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

*முடக்கத்தான் கீரைச்சாற்றில் உளுந்து, கருப்பு எள் இரண்டையும் சம அளவில் ஊற வைத்து, உலர்த்தி பொடி செய்து இரண்டு ஸ்பூன் அள வுக்கு எடுத்து சின்ன வெங்கா யம் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடிக்கவும். இதனால், உடல் வலிமை பெறுவதோடு, டென்ஷனும் குறையும்

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...