Monday, October 28, 2013

திருமூலர்



அறம் மறந்தவர்க்கு அறிவுமில்லை

அன்பு மறந்தவர்க்கு ஈசனுமில்லை

ஆங்காரம் நீக்கி அதன் வழிநிற்க நீங்காத
ஆனந்த அமுதமே

ஆசைப்படபட ஆகிவரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தமே

ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்றில்லாமல்

ஆவன ஆகும் போவன போகும் காத்திடுவான் அவனே

ஆள் அஞ்சான் ஆம் பொருள் அஞ்சான்

இடும்பையில்லை இரவு பகலுமில்லை படும் பயனுமில்லை பற்றவர்க்கே

இடுவதும் ஈவதும் இன்பமென எண்ணுங்கள்

உடல் போட்ட வேடம் உயிர்க்கு ஆகாதே

உணர்வுடையார்க்கு உறுதுயர் ஏதும் இல்லை

உள் பொருள் இதுவென உணர்தலே ஞானமாம்

உள்ள நிலத்திலே உழவு செய்பருக்கு
வெள்ளம் பாய விளையுமே

உள்ளத்தின் உள்ளே உண்டு
பல பாவம் தீர்க்கும் தீர்த்தங்கள்

உள்ளத்தின் உள்ளே கள்ளத்தை நீக்குவாயே

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

உறுதுணையாவது உயிரே செருதுணையாவது கல்வியும் கேள்வியும்

ஒடுங்கி நிலைப்பெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவதுமில்லை நமனும் அங்கில்லையே

ஒன்றே குலம் ஒருவனே தேவன் நன்றே நினையுங்கள் நமனின்ல்லை பயமில்லை

கடலில் தொலைத்து விட்டு குளத்தில் தேடுவாரே மூடர்

கண் ஒன்றுதான் அதில் சிலதான் நற்காட்சி காணுமே

கண்காணி இல்லையென்று க்ள்ளம் பல செய்யாதீர் கண்காணி இல்லாத இடமில்லை

கண்ணிய நேயம் கரை ஞானம் கண்டவர் புண்ணியரே
கல்லா அரசனில் காலன் மிக நல்லவன்

கல்லா மனிதரைக் காணவும் கூடாது கேட்கவும் கூடாது

கனவது போல கசிந்தெழும் இன்பமது
நனவது போல நாட எண்ணாதே

கன்னியும் ஒர் சிறை கல்வியும் ஒர் சிறை
மண்ணிய மாதவமும் ஒர் சிறையே

காம மயக்க நோக்கமுடையார் மாதவம் செய்வதறியார்

காய்ச்ச பலா கனி உண்ணாது
ஈச்சம் பழத்துக்கு இடர் உறுவார் காமுகர்

குடம் உடைந்தாலும் வைப்பர் உடல் உடைந்தால் நொடிப்பொழு தும் வையாரே

குத்தினால் என்ன வெட்டினால் என்ன
தத்துவ வித்தகர் தன்மை குறையார்

குரு வழி சென்று குணம் ஓங்கி
கரு வழி வரும் கணக்கறுப்பரே

கொலை களவு கள் காமம் பொய்
யாவும் மலையான பாதகமாம்

சத்திய ஞானத் தனிப் பொருள் ஆனந்தம்

சத்ய ஞானானந்தம் சார்ந்தனன் ஞானியே

சாதிக்க வல்லார் தம்மை யுணர்ந்தவர்

சித்தம் கலங்காது செய்கின்றது ஆனந்தம்

சிந்தித்தார் சிறந்தார் சீர்பெற்றார்
அறிவுற்றார் அன்புற்றார்

சீற்றம் இல்லை சிந்தை செம்மையானால்

சீற்றம் ஒழிந்தவர் கூற்றத்தை வெல்லும் குற்ப்பறிந்தார்களே

சுட்டாலே பொன் சிவக்கும் கெட்டாலே கண் திறக்கும்

செல்லும் அளவு செலுத்துமின் சிந்தையை
திருந்தியவனுக்கு நரகமுமில்லை

சுவர்க்கமும் தூரமுமில்லை

தேர்ந்து அறியாமையின் சென்றன பல காலங்கள்

தேற்றத் தெளிமின் தெளிந்த பின் கலங்காதீர்

நனவில் கனவு ஒட நன் செய்திதானே

நன்றே நினையுங்கள் நமனின்றி பயமில்லை

நீயே இடர்பட்டு என்ன செய்வாய்
தளிரெள தயங்காதே நெஞ்சே

நெருப்பிலெரிந்த இரும்பென
வெறுப்பிலெரிந்த உள்ளம் கனலாடுமே

நோற்று தவம் செய்யாத ஙாலறியதவர் சோற்றுக்கு சுழல்கின்றாரே

பசித்தவருக்கு ஒருபிடி போட யாருக்கும் இயலுமே

படுவழி செய்கிற பற்று வீசி விடுவது வேட்கை தொடுவது ஞானமே

பள்ளமும் இல்லை இடர் இல்லை பாழ் இல்லை
பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்

புடவை கிழந்தது போயிற்று வாழ்க்கை

புண்ணியம் செய்வார்க்கு பூ மாலை உண்டு

பூதக் கண்ணாடியுள் காணாஅறியாதவன் நீதிக் கண்னாடியுன் வெளிப்பவொன்

பெற்றிருந்தாரையும் பேணார் கயவர்கள்

பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்

பொய் மறுத்து மெய் உரைத்தால் உலகம் தொழும் புனிதரெனவே

பொய்த்தேன் அறியும் புலன் வழி போகாதே மெய்த்தேனறிவாயே

மகிழ்கின்ற செல்வம் கவிழ்கின்ற
நீர் செல்லும் கப்பல் போலே

மண்ணில் கலங்கிய நீரென
மனிதர் எண்ணில் கலங்கலாமோ

மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை

மனத்துள்ளே மகிழ்ந்திருப்பார்க்கு
மனத்துள்ளே மனோலயம் ஆகுமே

மனமாயை தான் மாயை மற்றொன்றில்லை

மேன்மை வேண்டினால் மறந்தும் மறவாது
ஆற்ற வேண்டும் அறநெறியே

மோகியர் கள் உண்டு மூடராய் அறிவழிந்தாரே

யாரறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
அதன் அகலமும் நீளமும்

யாவர்க்கும் நாமுண்ணும் போது
ஒரு கைப்பிடி தர இயலுமே

வட்டி கொண்டு ஈட்டிய பட்டி பாதகர்
ஈகையின் பயனறியாரே

வாய் ஒன்று மனம் ஒன்று நீ ஒன்று செய்ய
தீ செய்ய தீ என்று தெளிவாயே

விரும்பிவரும் பிறர் தாரத்தையும்
விலக்கிப்போவார் தர்ம வீரரே

வேதாந்தமாவது வேட்கை ஒழிந்தவிடம்

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...