பொத்துமே பேராகப் பதக்குநீரை
உள்ளபடி ஊத்தியதில் வெடிமுத்திட்டு
ஊறியதை யவித்தெடுத்து உலர்த்திக்கொண்டு
துள்ளியிடி முன்னீரிற் கரைத்துக்காயச்சு
துடிபெறவே யெண்ணெய்கக்கும் யிருத்துக்கொள்ளு
கள்ளமற யெண்ணெய்தான் சுத்தியாச்சு
கருத்துகந்து யாகோபு சொன்னார்தாமே – வைத்திய சிந்தாமணி – 700
கொட்டை முத்து = ஆமணக்கு விதை பிள்ளைமகனிளையோன் = இளநீர்
இளநீரைச்
சீவி ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொட்டை முத்துப் போட்டு ஊறவைத்து வேக வைத்து
பின்னர் உலர்த்தி எடுத்துக்கொண்டு நன்றாக இடித்து மறுபடியும் இளநீர்
விட்டுக் கரைத்து அடுப்பில் விட்டு காயச்சவேண்டுமாம்.அப்படி காயச்ச எண்ணெய்
கக்கும் என்கிறார். இந்த எண்ணெயை இருத்து எடுத்துக் கொள்ளவும். இது சுத்தி
செய்த எண்ணெயாகும்.
கொட்டை முத்து = ஆமணக்கு விதை பிள்ளைமகனிளையோன் = இளநீர்
No comments:
Post a Comment