Monday, October 28, 2013

மலச்சிக்கலைத் தடுக்க



அதிகாலையில் பல்துல்க்கியபின் இரண்டு மூன்று டம்ளர் தண்ணீர் பருகிவர மலச்சிக்கல் தீரும் அதிகாலை மட்டுமின்றி தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருகுங்கள். முடிந்தளவு பழச்சாறு அருந்தலாம்.

மிளகு ஜீரணப் பையில் நன்றாக வேலை செய்வதால் மிளகும் வெல்லமும் சமபாகம் கலந்து அரை ஸ்பூன் உண்டு வர நன்றாக ஜீரணமாகும், மலச்சிக்கலைத் தடுக்கலாம்

மிளகு சீரகம் கலந்து பொடித்து 10-20 கிராம் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் மற்றும் மந்த ஏப்பம் போன்றவை குணமாகும்.
 
அத்திப்பழம் மலத்தை வெளியேற்றுவதில் சிறந்த பங்கு வகிக்கிறது.

சுக்கு பொடியை சிறிது உணவில் கலநது உண்டால் அஜீரணம் குணமாகும் மலமும் நன்றாக வெளியேறும். சுக்கு பொடியை ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் கலந்து கொதிக்க வைத்து, பின் தேவையான அளவு பாலும் சரக்ரையும் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

வெந்தய கீரையை உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் தீரும்.
கோதுமை, தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற நார்சத்துள்ள உணவுவகைகளை சேர்த்துக்கொள்வதால் இறுக்கமான மலத்தை இளக்கப் பயன்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தினமும் முறையான உடற்பயிற்சி செய்வது நல்லது. தேவையற்ற மருந்துகளையும்,மாத்திரைகளையும் நீங்களே சாப்பிடுவதை தவிர்த்து மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளுங்கள்.

மலச்சிக்கலுக்காக தொடர்ந்து பேதி மருந்துகளை எடுக்கக்கூடாது அது நல்லதல்ல. குறித்த நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...