Wednesday, October 23, 2013

கருட தரிசனம் செய்வதால் ஏற்படும் பலன்கள்



மகாவிஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள்பாலித் தாலும் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பானதாகும். விஷ்ணு ஸ்தலங்களில் கருடாழ்வார் `பெரிய திருவடி' என்று அழைக்கப்படுகிறார். இவர் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறார்.

பெருமாள் கருடனை வாகனமாக ஏற்றபோது, `வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்' என்று வரமளித்தார். கருட தரிசனம் சுப சகுனமாகும்.

கருடன் மங்கள வடிவினன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோயிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோயிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.

அவ்வளவு எளிதில் எல்லோரும் கருடனை காண முடியாது. எந்த தினத்தில் காணுகிறோமோ அந்த தினத்திற்கு என்று பலன்கள் உண்டு. உலகலந்த பெருமானின் வாகனம், உலகை காக்க தர்மத்தை நிலை நாட்ட பிறவி எடுக்கும் பகவானின் அமர்வு பீடம் கருட தேவன்.

கருட தேவனுக்கு என்று காயத்ரி மந்திரமும் உண்டு.

இங்கே நான் சொலவது என்ன வென்றால், கூட்டம் சேரும் இடத்தில் கருடன் வருவார் என்கிறார்கள்,

அப்படியானால் ஏன் அரசியல் கூட்டம் போடும் இடங்களிலும் திருவிழாக்காலங்களில் மக்கள் அலை மோதும் இடங்களிலும் கருடன் வருவதில்லை.

ஏன் கிரிக்கெட் மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி இருக்கும்பொது ஏன் அங்கே கருடன் வட்டமடிக்க வருதில்லை.. அவர்கள் சொல்வதுபடி பார்த்தால் இது நடக்க வேண்டுமல்லவா?

ஆனால் கோயில் கும்பாபிசேகம் நடைபெரும் இடங்களில் கருடன் வருகிறார் என்றால் அதுதான் தெய்வத்தின் அருள் என்பது. இதில் சிறிய கோயில் பெரிய கோயில் என்பதில்லை.

கருட தரிசனம் காணும்போதெல்லாம் பாப விமோசனம்.

ஞாயிறு அன்று தரிசித்தால் நோய் அகலும்

திங்கள் அன்று தரிசனம் செய்தால் குடுமப நலம்

செவ்வாய் அன்று தரிசனம் செய்தால் தைரியம் கிடைக்கும்

புதன் அன்று தரிசனம் செய்தால் எதிரிகள் ஒழிவார்கள்.

வியாழன் அன்று தரிசனம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்

வெள்ளி அன்று தரிசனம் செய்தால் பணவரவு கிடைக்கும்

சனி அன்று தரிசனம் செய்தால் நற்கதி கிடைக்கும்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...