Thursday, October 31, 2013

மாணிக்கம் (Ruby)

பாம்பு மாணிக்ககல்லை உமிழும் என்பது முழுக்க முழுக்க கற்பனையே, இதில் துளி கூட உண்மையில்லை என்பதுதான் உண்மை. உண்மையில் மாணிக்கக்கல் (Gemstone) என்பது அலுமினியம் ஆக்சைடு (Aluminum Oxide) மற்றும் குரோமியம் (Chromium) கலந்த ஒரு கனிமப்பொருள் (Minerals) ஆகும்.

ஆங்கிலத்தில் ரூபி (Ruby) என்று அழைக்கப்படும் இந்த மாணிக்கக்கல் இளம் அல்லது அடர் சிவப்பு நிறத்திலுள்ள ஒரு படிக்கக்கல் (Crystals) ஆகும். இயற்கையாக கிடைக்கும் மாணிக்கம் தூய்மையாக இருக்காது. வைரத்தை போலவே இதுவும் பட்டை தீட்டப்பட்டுத்தான் மெருகேற்றப்படுகிறது.

நிறம், அமைப்பு, ஒளிரும் தன்மை, எடை ஆகியவற்றை கொண்டே மாணிக்க கல்லின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தோராயமாக 2050 சென்டிகிரேட் வெப்பத்தில் உருகக்கூடிய இந்த மாணிக்கக்கல், பர்மா மற்றும் மேன்டேலே ஆகிய நாடுகளிலிருந்துதான் அதிக அளவில் வெட்டி எடுக்கப்படுகிறது. மேலும் தாய்லாந்து, கம்போடியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் வெட்டி எடுக்கப்படுகிறது.

வைரம்(Diamond) வைடூரியம் (Cat’s eye) முத்து (Pearls) மரகதம் (Emerald) மாணிக்கம் (Ruby) பவளம் (Coral) புட்பராகம் (Topaz) கோமேதகம் (Hessonite) நீலம் (Sapphire) ஆகிய ஒன்பது கற்களும் சேர்ந்துதான் நவரத்தினம் (Navaratna) என்று அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாணிக்கம் இயற்கையாக நிலத்திளிருந்துதான் கிடைக்கிறதே தவிர எந்த பாம்புகளும் அதனை உமிழ்வதில்லை என்பதே உண்மை.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...