Monday, October 28, 2013

வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்



முக்கனிகளில் ஒன்று வாழைப்பழம் வாழைப் பழங்களில் பலவகைகள் உண்டு எல்லாவகை வாழைப்பழங்களிலும் பலவகை சத்துக்கள் உள்ளன. அது மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் , எல்லா இடங்களிலும் கிடைக்ககூடிய பழம் வாழைப்பழம், பணக்கரார்கள் முதல் ஏழைகள் வரை செல்லும் பழம் வாழைப்பழம். இதை ஏழைகளின் கனி என்றும் கூறுவார்கள்.

பூவன் வாழைப்பழம்
பூவன் வாழைப்பழம் எல்லா இடங்களிலும் பரவலாகக் கிடைக்கும் பழம். இது ஜீரண சக்தியை உண்டாக்கும். தினமும் உணவிற்குப்பின் பூவன் வாழைப் பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் உண்டாகாது.
பச்சை வாழைப்பழம்
பச்சை வாழைப்பழம் நல்ல குளிர்ச்சியை தரும் கோடைக் காலங்களில் தாராளமாக உண்ணலாம். வாத நோயாளிகள் குறைத்துக் கொள்வது நல்லது. இது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
மொந்தன் வாழைப்பழம்
மொந்தன் வாழைப்பழம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும் காமாலைக்கு இது சிறந்த பழம்.
ரஸ்தாளி வாழைப்பழம்
ரஸ்தாளிப் பழம் சுவை மிக்கதாகும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை உண்ணக்கூடிய பழம். குழந்தை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன. இப்பழத்தை தினமும் உண்டு வந்தால் இருதயம் பலப்படும்.
நேந்திர வாழைப்பழம்
நேந்திரப்பழம் என அழைக்கப்படும் வாழைப் பழம் கேரளாவில் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது. காசநோய்யால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பழத்தில் ஒன்றும் முட்டை ஒன்றும் உண்டுவர, காசநோய் விலகி உடல் புஷ்டிக்கும். சிறு குழந்தைகளுக்கு, ஆறு மாதத்திற்கு மேல் நன்றாகப் பழுத்த நேந்திரப் பழத்தை சிறிது உப்பிட்டு, வேகவைத்து நன்றாக பிசைந்து தரலாம். இது நல்ல ஊட்டச் சத்தாகும். ஜீரணிக்க ச்ற்று நேரமாகும் என்பதால் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உகந்தது.
செவ்வாழைப் பழம்
செவ்வாழைப் பழம் கேரளா மற்றும் குமரி மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது. உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். நரம்புத் தளர்ச்சியை போக்கும் இவ்வகைப் பழத்தை உடல் மெலிந்தவர்கள் தொடர்ந்து உண்டு வந்தால், உடல் பருமனடையும், வைட்டமின் A அதிகம் உள்ளதால் கண்ணுக்கு பலம் தரும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். தோல் வியாதிகளையும் குணப்படுத்தும். அதிகம் பேதி கண்டவர்கள் இப்பழத்தை பொரிகடலையுடன் சேர்த்து உண்டால் பேதி நிற்கும்.
ஏதாவது ஒரு வாழைப் பழத்தை தினமும் உணவிற்குப் பின் உண்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடையும்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...