1100 வருடங்களுக்கு முன் கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட திருச்சி அருகிலுள்ள திருவரும்பூரில் அமைந்துள்ளது திரு எறும்பீஸ்வரர் கோயில். இக்கோயிலை நம்மால் காப்பற்றி நமது அடுத்த தலைமுறையினர்க்குக் காண்பிக்க முடியுமா?
இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
உள்ளே நுழைந்ததும் எதிரே சற்றே உயர்ந்த மகாமண்டபம் இருக்கின்றது. வலது
புறம் அன்னை காசி விசாலாட்சி, நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி
அருள்பாலிக்கிறாள். எதிரே பலிபீடமும், நந்தியும் இருக்க, அர்த்த மண்டப
வாயிலில் துவார பாலகர்களின் திருமேனிகள் கருங்கற்களில்
வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலே கஜலட்சுமியின் சிற்பம் உள்ளது.
அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து உள்ள கருவறையில் இறைவன் காசி விஸ்வநாதர்,
லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். ஆலயத்தின்
தெற்குப் பிரகாரத்தில், காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட "காசிலிங்கம்"
தனி மண்டபத்தில் பிரதிஷ்டை ஆகியுள்ளது. எதிரே நந்தி பகவான் அருள்பாலிக்க,
இறைவனின் பின்புறம் தல விருட்சமான வில்வ மரம் உள்ளது. வடகிழக்கு
மூலையில் நவக்கிரக நாயகர்களுக்கு தனி மண்டபம் உள்ளது.
இறைவனின் சந்நிதியின் முன் உள்ள மகாமண்டபத்தின் உச்சியில் 12 இராசிகளின்
உருவங்களும் கருங்கற்களில் செதுக்கப்பட்டு பொறிக்கப்பட்டுள்ளது இந்த
ஆலயத்தில் உள்ள சிறப்புகளில் ஒன்றாகும்
No comments:
Post a Comment