ஆம் நூற்றாண்டில் கிழக்கு கங்க வம்சத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவன் என்ற மன்னனால் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில் சூரியபகவானுக்காக கட்டப்பட்ட கோவில் தான் இந்த சூரியக் கோவில். இக்கோவில் சூரியனுடைய தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதைக்கட்டுவதற்கு பேரரசின் 12ஆண்டு வருமானம் செலவிடப்பட்டதாம். சிவப்பு மண்பாறை கற்களால் உருவாக்கப்பட்ட இந்தக் கோயிலுக்கு ஐரோப்பிய மாலுமிகள் சூட்டிய பெயர் 'பிளாக் பகோடா' (கறுப்பு கோவில்). இந்து சமய மரபுகளில் ஒன்றான சௌரவ மதத்தில் சூரிய பகவான்தான் முக்கியக் கடவுள். அதன்பேரிலேயே சூரியபகவானுக்காக இந்த கோவில் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இங்குள்ள சிலைகள் மிகவும் பிரசித்தம். அத்தனையும் நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை. கடவுள்கள், நடனமாடும் மங்கையர், குதிரைகள், யானைகள், சிங்கங்கள் சிற்பங்களாய் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலின் முன்பகுதியில் உள்ள நாதமந்திர் மண்டபம் சிற்பங்கள் நிறைந்தது. இங்க தான் நடனம் ஆடுவார்கலாம் ..நாத மந்திரமும, சூரியக் கோவிலும் நூற்றுக் கணக்கான சிற்பங்கள் கொண்டு கல்லில் நடப்பட்ட கலைக் கோவிலாக காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றன.
மொகலாயர்களின் படையெடுப்பினால் கோனார்க் கிழுள்ள அனேக இந்து கோவில்களும், சூரியக் கோவிலும் வீழ்த்தப் பட்டதாம். அங்கு இருந்த செல்வங்களும் களவாடப் பட்டதாம். கோவிலின் சிற்பங்களும் மதில் சுவர்களும் அடித்து நொறுக்கப்பட்டதாம். இன்றும் அதனைக் காண முடிகிறது.
No comments:
Post a Comment