ஸ்ரீமன் நாராயணீயம் பட்டத்ரி தன் நோய் தீர்க்க குருவாயூரப்பனை நோக்கிப் பாடியது. நாராயணீயம் பாடி முடித்தவுடன் நோயும் தீரப் பெற்றார் என்பதும் சரித்திரம்.
இவர் மட்டுமல்லாமல்
இன்னும் பலபேரும் இது போல நாராயணீயத்தைப் பாராயணம் செய்து நோய் தீரப்
பெற்று இருக்கிறார்கள். பட்டத்ரியின் வாக்கு அந்த அளவிற்கு தெய்வீகம்
மிகுந்த சத்திய வாக்காக உள்ளது.காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீசந்த்ர
சேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு பெண் கண் கலங்கி அழுதிருக்கிறார். தனக்குக்
கேன்ஸர் நோய் இருப்பதாகச் சொல்லிவிட்டதாகவும், அதற்கு சிகிச்சை எடுத்துக்
கொள்ள வசதியெல்லாம் தன்னிடம் இல்லை எனவும் அழுதிருக்கிறார்.அப்பெண்ணை கவலைப் படாதே. நாராயணீயத்திலே எட்டாவது தசகத்திலே அஸ்மின் னு
ஆரம்பிக்கிற ஸ்லோகத்தை தினமும் 48 தடவை சொல்லு. இப்படியே 48 நாள் பாராயணம்
பண்ணு... என்று அருளியிருக்கிறார்.அதை ஏற்றுக் கொண்ட அப்பெண்மணி
அதே போல 48 நாள் 48 தடவை பாராயணம் செய்திருக்கிறார். பிறகு அவரை சோதித்த
மருத்துவர்கள் அதிசயித்துப் போனார்கள்,இவ்வாறு மிகப் பலரின் உடல் உபாதைகளையும் தீர்த்த அந்த ஸ்லோகம்.
அஸ்மிந்- பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த- முத்தாபித- பத்மயோனி:
அனந்த பூமா மமரோக ராசிம்
நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ
No comments:
Post a Comment