Thursday, November 6, 2014

பிரிடிஷார் கட்டிய ஒரே கோவில் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள

உங்களுக்காக மேலும் ஒரு சிவானுபவம்.

1879 ஆம் ஆண்டு. பிரிட்டிஷாரின் ஆட்சி பாரதத்தில். லெப்டினன்ட் கர்னல் மார்டின் என்பவர் அகர மால்வா என்ற பகுதியின் பொறுப்பாளர். அவர் ஆப்கானியர்களோடு போருக்கு தலைமை ஏற்று சென்றிருந்தார்.

மார்டின் தவறாமல் செய்திகள் அனுப்புவது வழக்கம். போர் பல நாட்கள் நடந்தது. கடிதப் போக்குவரத்து நின்றது. பெரும் துயர் கொண்டாள் மனைவி. தபால் தவிர தந்தியோ, வேறு எந்த முறையிலோ தொடர்பு கொள்ளவே முடியாது.

மனதிற்குள் ஆயிரம் கேள்விகள். கணவன் இருக்கிறானா, இல்லையா. ஏன் கடிதம் வரவில்லை? ஏதாவது ஆகியிருந்தால்? ஆடைகள் மட்டும் வருமோ, பெட்டியில் வருவானோ, இருக்காது. நிச்சயம் வருவான். ஆனால் உயிருடன் இருந்தால் கடிதம் வராமல் இருக்காதே? இறைவா ஒன்றும் ஆகியிருக்காது. ஆகக்கூடாது. மனதிலே சோர்வு, புலம்பல், கதறல். வெளியே சொல்ல முடியாது. யாரிடமும் கேட்க முடியாது.

அப்படியே, kudhiraiyil eri baijaanaath மகாதேவரின் கோவிலை தாண்டினாள். தீப ஆராதனை சமயம். பல பத்து சங்கொலியும், பெரும் மனியோசையையும் கேட்டு மனம் தானாக உடலை இட்டுச்சென்றது. இறங்கி உள்ளே சென்றாள். ஒரு வெள்ளைக்காரி சிவன் கோவிலுக்கு வருகிறாளே என்று அதிசயமாக பார்த்தனர் அங்கிருந்த பிராமணர்கள். முகத்தில் கவலை, கண்களில் கண்ணீர். கைகளை பிசைந்தபடி நிற்கிறாள். என்னவென்று கேட்டனர். வெடித்து அழுதாள். தேற்றிக்கொண்டு விவரம் சொன்னால். மொழி பெயர்த்து சொன்னான் உதவியாளன். அவர்கள் சொன்னார்கள், சிவ பெருமானுக்கு தெரியாததில்லை. பக்தர்களின் குறை கேட்டு, உடனே ஓடி வந்து உதவும் தயாளன். அனைத்து கஷ்டங்களையும் நொடியில் தீர்ப்பவன் என்று சொல்லி, 'லகு ருத்ர அனுஷ்டானமான' ஓம் நம: சிவாய மந்திரத்தை உபதேசமாக பெற்றாள். வெறி பிடித்தது போல 11 நாட்கள் இடைவிடாது ஜெபம். மனம் ஒடுங்கி, சிவ சிந்தனையை தவிர வேறின்றி, தவம் போல ஜெபித்தாள். கணவன் நல்லபடியாக திரும்பினால் கோவிலை புனுருத்தாரணம் செய்வதாக வேண்டிக்கொண்டாள்.

கடைசி நாள். தகவல் வந்தது. கணவனின் கடிதம். அதிலிருந்த விவரங்கள்.. அன்பு மனைவியே, போர்க்கலமானாலும் நான் தவறாமல் எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் திடீரென்று, பட்டாணியர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்தார்கள். நாலாபுறத்திலிருந்தும் எங்களை சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். வசமாக மாட்டிக்கொண்டோம். இன்னும் சிறிது நேரத்தில் கொல்லப்பட்டு விடுவோம் என்ற நிலை. கடைசி தொட்ட தீரும் வரை போரிட்டுவிட்டு இறப்பது என்று முடிவு செய்தோம்.

திடீரென்று எங்கிருந்தோ ஒரு யோகி வந்தார். நீண்ட ஜடாமுடி. கையில் மும்முனை ஆயுதம். (திரிசூலம்). அப்படி ஒரு வசீகரமான தோற்றம். இது போன்ற ஒரு அழகிய மானுடனை வாழ்வில் பார்த்ததில்லை. கையில் இருந்த சூலத்தை கொண்டு அவர்களோடு அவர் போரிட்ட விதம் வார்த்தையில் வர்ணிக்க முடியாது. அப்படி ஒரு வேகம், லாவகம், திறமை. இவரை பார்த்ததும் போரிட முடியாமல் பட்டாணியர்கள் ஓடத்தொடங்கினார்கள். எண்ணி ஒரே ஒருவர் எங்களுக்காக போரிட்டு நூற்றுக்கணக்கான பட்டாணியர்களை விரட்டி அடித்தார். தோல்வியின் பிடியிலிருந்து வெற்றியை கைப்பற்றினோம். இது அத்தனைக்கும் காரணம், சிங்கத்தின் தோலை அணிந்திருந்த, அந்த திரிசூலதாரிதான். அவர் என்னிடம் வந்து சொன்னார், "உன் மனைவியின் பக்திக்கு மெச்சியே உன்னை காப்பாற்ற வந்தேன்" என்று. சொல்லி மிக வேகமாக அங்கிருந்து சென்றார். விரைவில் திரும்புவேன் என்று முடிந்தது.

கண்ணில் ஆனந்த கண்ணீரின் வெள்ளம். அடக்க முடியாத சந்தோஷம். ஆடுகிறாள், ஓடுகிறாள், சிரிக்கிறாள், அழுகிறாள், குதிக்கிறாள், பலருக்கு சொல்லி சொல்லி மாய்ந்து போகிறாள். மீண்டும் மீண்டும் அதை படிக்கிறாள். கதறி அழுகிறாள் தன பிரார்த்தனைக்கு செவி சாய்த்ததற்கு.

எண்ணி பதினோரே நாட்களில் மார்டினின் மனைவி மந்திர உபதேசம் பெற்று சிவனின் கவனத்தை ஈர்த்து அவளது கணவனுக்காக போர் புரிந்து காப்பாற்ற வைத்திருக்கிறாள் என்றால் அவள் பக்தியின் தரத்தை என்னென்ன்று சொல்ல. வேறு மதமானாலும் கவலை இல்லை. மனமே முக்கியம் என்று நினைத்த இறைவனின் கருணையை என்னென்று சொல்ல. நிலைமையை மாற்றி கடிதம் வந்திருக்கலாம். ஆனால் இறைவனே, இறங்கி போர் புரிந்திருக்கிறான் என்றால் இது சாதாரண விஷயமா?

ஓடி வந்தால் கோவிலுக்கு. சிவ பெருமானின் பாதங்களில் விழுந்தாள். கண்ணீரால் நனைத்தாள். என்னவென்று கேட்டார்கள். சொன்னாள். 'சம்போ மகாதேவா' 'ஹர ஹர மஹாதேவ்' என்ற கோஷம் விண்ணை பிளந்தது.

சில வாரங்களில் மார்டின் வந்தான். விவரமரிந்தான். இருவரும் பக்தி கொண்டார்கள் சிவனிடம். 1883ஆம் ஆண்டு, அவர்கள் மட்டுமே ருபாய்15,000/- தந்து கோவிலை புதுப்பித்தார்கள். இந்த தகவல் அங்குள்ள கல்வெட்டில் இன்றும் உள்ளது. பிரிடிஷார் கட்டிய ஒரே கோவில் இது ஒன்றுதான். பிரிட்டன் திரும்பும்போது வாழ்வின் கடைசிவரை சிவ பக்தையாகத்தான் இருப்பேன் என்று சத்தியம் செய்துவிட்டு புறப்பட்டார்கள்.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...