இல்லங்களில் உள்ள பூசை அறைகளில் தினமும் காலையும் மாலையும் எண்ணெய் விளக்கு ஏற்றினால் லக்ஷ்மி காட்ஷம் பெருகும் என்பது ஐதீகம்.
லக்ஷ்மி கடாக்ஷம் என்றால் பணமும் பதவியும் அந்தஸ்தும் அல்ல.நோயற்ற வாழ்வும்,தேவைக்கு ஏற்ற, குன்றாத செல்வமும்,குடும்பத்தில் குறையாத மகிழ்ச்சியும்,மனதில் என்றும் ஆனந்தமுமே உண்மையான லக்ஷ்மி கடாஷம்.
எந்த வீட்டில் ஒளி நிறைந்து காணப்படுகிறதோ அந்த வீட்டில் வாழ்பவருக்கு stress எனப்படும் மனஅழுத்தம் மிக குறைவாக இருக்கும் என்கின்றனர் உளவியல் ஆய்வாளர்கள்.ஆகவேத் தான் அன்றைய நாட்களில் இல்லங்கள் முழுதும் விளக்காலேயே அலங்கரிப்பர்.
மற்றும் விளக்கு ஏற்ற பயன்படும் எண்ணெய்களும் மருத்துவ பயன்கள் மிக்கனவாக இருக்கின்றன.
விளக்கேற்ற சிறப்பான எண்ணைகளும் அவற்றின் பயன்களும்:
*நல்லெண்ணெய்:-எண்ணெய் எரிந்து அதில் இருந்து வரும் புகை கலந்த காற்றை சுவாசித்தால்,உடல் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.மன அழுத்தத்தை குறைக்கும்.
*தேங்காய் எண்ணெய்:-உடல் சூட்டை தணிக்கும்.உடலுக்கு குளிர்ச்சி தரும்.
*இலுப்ப எண்ணெய்:-உடல் உறுப்புகள் சீராக இயங்கவைக்கும்.
*நெய்:-அதிலிருந்து பரவும் மணம் மனதை வசீகரித்து கவலைகளை குறைக்கும்.
குறிப்பு:-மேற்கூறிய அனைத்து எண்ணைகளையும் ஒன்றாக கலந்தும் கூட பயன்படுத்தலாம்.விளக்கெண்ணெய், நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்.
இப்பொருட்களை உபயோகிக்கும் போது மட்டும் தான், விளக்கின் தீபத்தில் ஓரு ஒளிவட்டம் வெளிப்படுகிறது.இந்த ஒளிவட்டத்தினால் நாம் வசிக்கும் இடம் சுத்தமாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அது மட்டுமல்லாமல், தீபத்தின் இந்தஒளிவட்டம், அது இருக்கும் விதத்திலேயே, வணக்கத்திற்கு
உரியதாக இருக்கிறது. நம் கண்ணுக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. அதில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த ஒளிவட்டம் உதவுகிறது. நம்மைப் பாதுகாக்கும் தன்மை எதுவாக இருந்தாலும் அதை வணங்குவது நம் பண்பாடு. எனவேதான், பூஜையறையில், கடவுளை வணங்கும்போது தீபத்தையும் ஏற்றிவணங்குகிறோம் இதனால்தான் மனிதர்கள் சேர்ந்து புழங்கும் இடத்தில், அது வீடாக இருந்தாலும் சரி, தொழில் நடக்கும் இடமாக இருந்தாலும் சரி, அவ்விடத்தில் நாளெல்லாம் விளக்கு ஏற்றி, அதை ஒளிரவிடும் பழக்கம் இருக்கிறது. இவ்விடங்கள் தான் என்றில்லாமல், நீங்கள் படுக்கும் இடம், குழந்தைகள் படிக்கும் இடம், மற்றும் பொதுவாக நீங்கள் அதிக நேரம் இருக்கும் இடங்களில் விளக்கு ஏற்றி வைப்பது நிச்சயம் நல்லது. இது நம் மனநிலைக்கு, நம் ஆரோக்கியத்திற்கு மற்றும் நம் சூட்சும உடலிற்கும் நன்மை பயக்கும்.
விளக்கேற்ற பயன்படுத்த கூடாத எண்ணெய்:-
வேப்பெண்ணை:-வேப்ப மர கொட்டையில் இருந்து எடுக்கப்படும் என்னை விளக்கேற்ற பயன்படுத்த கூடாது.ஏனெனில் அது உடல் சூட்டை அதிகரிக்கும்.நெருப்பில் கருகி அதிலிருந்து வரும் அனிச்சையான வாடை மன அமைதியை பாதிக்கும்.
*இப்பொழுது பலர் எலுமிச்சை பழத்திலும் விளக்கு ஏற்றுகின்றனர். அது தவறு. எலுமிச்சை தோல் எரிந்து அதிலிருந்து வரும் வாடையும், புகையும் ஒவ்வாது!!!

No comments:
Post a Comment