Thursday, November 27, 2014

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

"ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே"
என்ற முதுமொழி தோன்றிய காரணம் ?
             
             தமிழின மூவேந்தர் அரசர் பரம்பரை என்றென்றும் தங்களுடைய மூதாதையர்களான சித்தர்களின் தெய்வீகக் கலைகளின் துணையால் எவ்வித இடர்பாடுமின்றி வளமிக்க, வலிமை நிறைந்த ஆட்சி நடத்தி வந்தனர். அந்த ஆட்சி கி.மு முதலாம் நூற்றாண்டில் கண்ணகி என்ற கற்புக்கரசியின் காரணமாக மதுரை மாநகர் அழிக்கப்பட்டதோடு சிதைவுற்றுச் சீரழிய ஆரம்பித்தது. பாண்டிய நாட்டுப் பேரரசில் அங்கயற்கண்ணி மீனாட்சி என்ற பெண்மைப் பெயரே நிலைத்த ஆட்சி பெற்றது. சோழர் ஆட்சியில் சோழமாதேவி என்ற ஒரே பெண்மையின் ஆட்சியே நிலைத்தத் தன்மை பெற்றது. இப்படி முதன் முதல் தோன்றிய பாண்டிய சோழ பேரரசு இரண்டும் பெண்மையால் பிறந்தது போலவே கண்ணகி என்னும் பெண்மையால் இறந்தன.

இதனால் தான்
"ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே"
என்ற முதுமொழி பிறந்தது.தமிழருக்கு என்று ஓர் அரசியல் அமைப்பை நல்கிய பெண்ணினமே அவ்வரசியல் அமைப்பை அழித்தொழித்தது. ஞாலகுரு சித்தர் கருவூறார் , ஞானாச்சாரியார் 'அன்பு சித்தர்'

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...