Thursday, November 27, 2014

ஞானி சொன்னா கதை

                    ஞானி ஒருவர் கோயில் ஒன்றில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். இடையே நகைச்சுவை ஒன்றைச் சொன்னார். கூட்டத்தில் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அதே நகைச்சுவையை மறுபடியும் சொன்னார். இம்முறை கொஞ்சம் பேர் மட்டும் சிரித்தனர். அதே நகைச்சுவையை இடையிடையே சொல்லிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் யாருமே சிரிக்காமல் அமைதியாய் இருந்தனர். ஞானி சொன்னார், திரும்பத் திரும்ப கேட்ட ஒரு நகைச்சுவைக்கே சிரிக்க முடியாத உங்களால், என்றோ நடந்து முடிந்த துயர சம்பவங்களை மட்டும் நினைத்து, எப்படி திரும்பத் திரும்ப அழ முடிகிறது ? ஒரே விஷயத்திற்காக எப்படிப் பல காலம் பகையும் வன்மமும் கொள்ள முடிகிறது? கூட்டத்தினர் யோசிக்கத் தொடங்கினர்

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...