ஊடகங்களில், இந்து இயக்கத்தினர்களிடம் விவாதம் செய்கிறவர்கள் உங்கள் புராணங்களில், கோயில் சிற்பங்களில் ஆபாசம் மண்டிக் கிடக்கிறது என்று மேற்கோள் காட்டி வாதத்தின் திசையை மாற்றி ஏளனம் செய்கிறார்கள். இவர்கள் புரிந்து கொள்ளாத விஷயம், இந்து மதம்
ஒரு சமுத்திரம். அது வெறும் சிற்பங்களிலும், புராணங்களிலும் மட்டும் இல்லை. அது ஒரு வாழ்க்கை முறை. எப்படி வாழ வேண்டும்; எப்படி எல்லாம் வாழக்கூடாது, அப்படி வாழ்ந்தால் விளைவு என்ன என்ற படிப்பினையை போதிப்பதற்கு தோன்றியவையே புராணங்களும், இதிகாசங்களும். கடவுளே தப்பு செய்தாலும் குற்றம் குற்றமே என்று குறிப்பிடும் தைரியத்தை கொடுப்பது உலகத்தில் இந்து மதம் மட்டுமே. கடவுளை விட, தர்மத்தை ன்னிறுத்துவதும் இந்து மதம் மட்டுமே. மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமல் வாழ்வதே சிறந்த தர்மம் என்று பறைசாற்றுவதும் இந்து மதம் மட்டுமே. தன்னுடைய கொள்கை மட்டுமே சிறந்தது என்பதை நிரூபிக்க மற்றவர்களை வெட்டி சாய்க்கும் மதம் அல்ல இந்து மதம். தன்னுடைய கொள்கையை கபட வழிகளில் பரப்பும் மதமல்ல இந்து மதம். தீயோருக்கும் நன்மை செய்வாய் என்ற உயரிய கொள்கை உடையது இந்து மதம். அல்லவையை நீக்கி நல்லவையை எடுத்துக் கொண்டு வாழ சொல்லும் மதம் இந்து மதம். துறவியாகவும் அதே சமயத்தில் பூரணத்துடன் வாழ கற்றுக்கொடுப்பதும் இந்து மதம் மட்டுமே. எத்தனை அயோக்கியர்கள் வந்தாலும் இந்து மதத்தை வீழ்த்த முடியாது
No comments:
Post a Comment