Thursday, November 27, 2014

அயோத்தியா_காசி_மதுரா‬

 
திருக் கோவிலின் ஒரு பக்கத்தில் இருந்து நோக்கும் போது தெரியும் பள்ளிவாசல். பழைய படம்.
மறுப் பக்கத்தில் இருந்து நோக்கும் போது

இன்னும் தெளிவான ஒலியில்

  
            அயோத்யாவில் அந்த இடத்தில் தான் உங்கள் ராமன் பிறந்தான் என்பதற்கு என்ன ஆதாரம் ? ராமன் பிறக்கவே இல்லை, காவி வெறியர்கள் அநியாயமாக எங்கள் இறை இல்லத்தை இடித்து விட்டார்கள், "வீன்று எழுவோம் வென்றே தீருவோம் எங்கள் மசூதியை இன்ஷா அல்லாஹ் !!!" என்று எல்லாம் எதுகை மோனையாக பேசி தாங்கள் ஏதோ பாதிக்கப்பட்டவர்கள் போல் காட்டும் இவர்கள் உண்மையிலே பாதிக்கப்பட்டவர்களா ? இல்லை பேருந்தில் பயணிக்கும் போது அடுத்தவர் சட்டைபையில் இருந்து அவர் பணத்தை களவாடிய ஒரு திருடன் தான் பிடிப்படும் போது, பாதிக்கப் பட்டவன் போல் போடும் நாடகமா ?இவர்கள் இந்த நாட்டில் அழித்தது 3000 க்கும் அதிகமான நமது திருக்கோவில்கள், இதில் காஷ்மீரில் 1980 முதல் இன்று வரை அழிக்கப்பட்ட 800 க்கும் அதிகமான கோவில்கள் நாம் கணக்கில் சேர்க்கவில்லை.

                  காசி காசி என்று நாம் காசிக்கு போனால் அங்கு இருப்பதோ ஒரு சிறிய வீட்டின் அளவு உள்ள கோவிலே, ஆனால் கோவிலுக்குள் ஓர் பிரம்மாண்ட பள்ளி வாசால், அதற்கு ஞான வாபி மஸ்ஜித் ( ஞான கிணறு ) என்று சம்ஸ்க்ருதத்தில் பெயர், காசி கோவிலில் இருக்கும் பழமை வாய்ந்த நந்தியோ இன்று இருக்கும் புதிய சிறிய கோவிலை நோக்காமல் பள்ளி வாசலை நோக்கி இருக்கிறது. இன்றளவும் யாரும் புகைப்பட கருவி அலைபேசி என்று எதையும் எடுத்துக் கொண்டு கோவிலுக்குள் பிரவேசிக்க முடியாது. மிக கடுமையான காவல் மற்றும் பரிசோதனைக்கு பின்னரே கோவிலில் நுழைய முடியும். அரசோ காசி நகரை பற்றி காட்டும் போது கங்கை நதிக் கரையை மட்டும் காட்டும் படியும் திருக்கோவிலை காட்டும் போது உள்ளிருந்து மட்டும் காட்டும் படியும் பார்த்துக் கொள்கிறது. நாட்டின் எல்லை புறத்தில் அமைக்கப் பெற்றதை போன்ற மின்னுட்டப்பட்ட கம்பி வேலிகளை கொண்டு இந்த கோவிலையும் ஆக்கிரமிப்பு பள்ளிவாசலையும் பிரிக்கிறது.
 
          ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த மதுராவிலும் இதே நிலைமை தான், காசியைப் போலவே இங்கும் கோவிலின் கருவரை இன்று பள்ளிவாசலாக மாற்றப்பட்டு காண்பவர்களின் மனதில் வேதனையும்,

               கட்டுக்கடங்காத ஆத்திரத்தையும் மக்கள் மனதில் உற்றெடுக்க செய்து கொண்டு இருக்கிறது. அயோத்தியா ஸ்ரீ ராமஜன்ம பூமி விசயத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாததை போல் அரசும் முகமதியர்களும், ஊடங்கங்களும் இன்று வரை பாசாங்கு செய்து கொண்டு மக்களுக்கு இந்த உண்மை சென்றடையாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்து கொண்டு இருக்கிறது.

               இன்று நாம் காணும் குதுப் மினார் என்பது மஹா ராஜா அநகபாலனால் கட்டப்பட்ட நமது கோவிலில் அமைத்த அநகஸ்தம்பம் அதில் அரபி எழுத்துகளை பொறித்து அதை குதுப் மினார் என்று மாற்றிய வரலாறு, ஆதாலாதேவி கோவில் அதலாதேவி மஸ்ஜித் என்று மாறியது, போஜ ராஜனால் கட்டப்பட்ட சரஸ்வதி திருக்கோவில் என்று வரசை 3000 க்கும் அதிகமான நமது திருக்கோவில்கள் நீண்டு கொண்டே போகிறது.
இத்னையும் செய்து விட்டு நமது கோவிலை மீட்டெடுத்த நாளில் வெக்கம் மானம் இன்றி ஒப்பாரி வைத்து அழுவது எல்லாம் ஊரை ஏய்க்கும் நாடகம் அன்றி வேறு இல்லை.இவர்கள் அழித்த திருக்கோவில்களின் எண்ணிக்கை மூவாயிரத்திற்கு மேல் இருக்கிறதே ஆனால் ஆண்டில் 364 நாட்கள் தானே இருக்கிறது ? அத்தனையும் மீட்டால் இவர்கள் எத்தனை நாள் தான் இந்த நாடகம் போட முடியும்?
                
              இதில் கொடியவன் ஔரங்கசிபால் அழிக்கப்பட்ட காசி மற்றும் மதுரா திருக் கோவில்களின் புபைப்படங்கள் இங்கே கொடுத்து இருக்கிறேன்.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...