Saturday, September 1, 2012

திதிகள்



சூரிய சந்திர சுழற்சியை உணர்த்தும் கணக்கு திதி ஆகும்.
சந்திரனின் சஞ்சாரம், சூரியனின் நிலை இவற்றை அடிப்படையாக கொண்டு உலகம் இயங்குகிறது. சூரியனும், சந்திரனும் அருகருகில் வரும் நாள் அமாவாசை. இவை இரண்டும் நெடுந்தொலைவு செல்லும் நாள் பவுர்ணமி.

இந்தவகையில் இந்த இரண்டு நாட்களும், வளர்பிறை, தேய்பிறை நாட்களும் முக்கியமானவை. அமாவாசையை அடுத்து வரும் 14 நாட்கள் வளர்பிறை திதி நாட்கள். பிரதமை ( முதல்நாள்) துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரையோதசி, சதுர்த்தசி ஆகியவற்றிர்கு அடுத்து பவுர்ணமி வரும். இதனையடுத்து தேய்பிறை திதிகள் அமைகின்றன. விழாக்கள், விரதங்கள், பண்டிகைகளுக்கு இந்த திதிகள் மிகவும் முக்கியமானவை.

இந்துக்களின் பஞ்சாங்கம்

திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின் படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.

அமாவாசையிலிருந்து பவுர்ணமி வரை சுக்ல பட்சம் எனவும், பவுர்ணமியிலிருந்து அமாவாசை வரை கிருஷ்ண பட்சம் எனவும் கணக்கிடப்படுகிறது. எந்தெந்த திதியில் எதை செய்யலாம் என்றும் சோதிடவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

நத்தை திதி

பிரதமை, சஷ்டி, ஏகாதசி ஆகிய மூன்று திதிகளும் நத்தை திதி எனப்படுகிறது. இந்த திதி நாட்களில் கட்டடத்தை சுத்தம் செய்வது, திருவிழா நடத்துவது, பாட்டு, நடனம், உள்ளிட்ட கலைகளை கற்கலாம்.

பத்ரை திதி

துவிதியை, சப்தமி, துவாதசி, திதிகள் பத்ரை திதிகள் ஆகும். இந்த திதி நாட்களில் பயணம் செய்யலாம், வண்டி வாகனங்களை வாங்கலாம்.

சபை திதி

திரிதியை, அஷ்டமி, திரையோதசி திதிகள் சபை திதிகள் ஆகும். இந்த நாட்களில் கோவில் திருப்பணிகளை செய்யலாம், கொடிமரம் நாட்டலாம்.

இருத்தை திதி

சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி ஆகியவை இருத்தை திதிகள் எனப்படும். இந்த நாட்களில் குரூரமான காரியங்களை மட்டும் செய்யலாம். போரிடலாம்,

பூரணை திதி

பஞ்சமி, தசமி, பவுர்ணமி ஆகியவை பூரணை திதிகள் எனப்படும். இந்த நாட்கள் சுபகாரியங்களை செய்ய ஏற்றவை. திருமணம், நிச்சயதார்த்தம், யாத்திரை, சாந்தி ஹோமங்கள், யாகங்களை செய்தல், தவம், தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளுதல் முதலிய நல்ல காரியங்களை செய்ய இத்திதி ஏற்றது.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...