அப்பாவி இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அமெரிக்கா தான் மூல காரணம்
என்பான். ஆனால் அதில் ஒரு சிறுதுளி உண்மைதான் உள்ளது.சவுதிக்கும்,
ஈரானும் தனது அதிகாரப் பசியை விட்டு விடுவார்களேயானால் இந்த குண்டுவெடிப்பு
வன்முறைகள் நிகழாது. முன்னர் ஈராக் உம் இந்தப் பட்டியலில் இருந்தது.
ஈரான் மற்றும் சவுதி நாடு இஸ்லாமிய நாடுகள் மீது கொண்டுள்ள அதிகாரப் பசியே உலகெங்கும் நடக்கும் வன்முறைகளுக்கு ஆதாரமாக உள்ளது.
சுன்னிகளின் ஆளுமை உலகில் இருக்க வேண்டும் என்பதற்காக சவுதி உலக நாடுகளை சார்ந்த இஸ்லாமியர்களுக்கு நிதி அளித்து தனது கூட்டத்தை வலுப்படுத்துகிறது. அதே வேலையைத்தான் ஈரானும் செய்கிறது. அதாவது இரு நாட்டுக்கிடையேயும் இஸ்லாமிய நாடுகளை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்ற போர் கடுமையாக உள்ளது. இந்த யுத்தத்தில் சவுதிக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. இந்த அதிகாரப் போட்டிக்கு உலகெங்கும் தங்களுக்கு ஆதரவு வேண்டும் என்பதற்காக பணத்தைக் கொடுத்து தங்கள் சுன்னி மற்றும் ஷியா பிரிவை வளர்க்க, அல்லது தடையாக இருப்பவர்களை அழிக்க, வலிமையானவர்கள் நாங்கள் என்பதை வெளிப்படுத்த வெடிகுண்டு வெடிப்புகளை நிகழ்த்த உதவி செய்கின்றன, தூண்டி விடுகின்றன.
ஆனால் இரு நாடுகளும் அடிப்படைக் கொள்கையில் ஒன்றாகவே உள்ளன. இஸ்லாமிய மத சட்டங்கள் இரு நாட்டிலும் கடுமையாக உள்ளன. அங்கு வேற்று மதத்தவர்கள் வாழ்வது என்பது முடியாத ஒன்று.சரி, ஈரான் மற்றும் சவுதியின் அதிகாரப்பசிக்கு உலக மக்கள் தங்கள் ரத்தத்தை சிந்தாமல் இருக்க என்ன செய்ய முடியும்?
அமெரிக்கா கலவரத்தை நிறுத்துமா? என்றால் நிச்சயம் செய்யாது. கிறிஸ்துவம் செய்யுமா என்றால் நிச்சயம் செய்யாது. ஏனெனில் அவர்கள் செய்வதும் நாடு பிடிக்கும் கொள்கைதான். கூடவே அவர்களுக்கு வேண்டியதும் அடிமைக் கூட்டம்தான். ஆகவே கிறிஸ்துவர்கள் கலவரத்தை நிறுத்துபவர்கள் அல்ல. பாரதம் இந்த மாதிரியான கலவரத்தை நிறுத்த முயற்சி செய்ய முடியும். எப்படி?
இந்து மற்றும் இந்து மதத்தினுள் அடங்கிய புத்த நாடுகள் ஒன்றிணைந்தால் இந்த பயங்கரவாதத்தை மண்ணோடு மண்ணாக்க முடியும். சீனா, பாரதம், ஜப்பான் போன்ற ஆசிய நாடுகள் இணைந்து விட்டால் இந்த பிரிவினை மற்றும் பயங்கரவாதிகளை செல்லாக்காசாக்கி விடலாம்.
இந்த திட்டத்தை இந்து நாடுகள் உணர்ந்து விட்டால், சீனா பாகிஸ்தானுக்கு உதவுவதை நிறுத்தும். அப்படி ஒன்று நடந்துவிட்டாலே நமது நாட்டில் நடக்கும் பயங்கரவாதம் பெரும்பான்மையாக முடிவுக்கு வந்து விடும்.சீனா, ஜப்பான், பாரதம் என மூன்று நாடுகளும் இதற்காக ஒன்றிணையுமா? ஒன்றிணைய வேண்டியது காலத்தின் அவசியம். உலக அமைதிக்கு தேவையான ஒன்று.
No comments:
Post a Comment