கீழே
கொடுக்கப்பட்டுள கட்டுரையை அனைவரும் படிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று
தெரியாது. இதில் கொட்டிக் கிடக்கும் சூட்சுமங்களை உணர்ந்து , அதைப்
பற்றிக்கொண்டு - உங்கள் வாழ்வில் சகல பாக்கியங்களும் கிடைக்க , இறைவனை
மனமார வேண்டி - இங்கே பதிவிடுகிறேன்.
முழுவதும் படிக்கவும். உங்களை அறியாமலேயே , உங்களில் மாற்றம் நடப்பது உறுதி .. !!
விதிவசத்தால் இரண்டு பெண்களுடன் வாழும் ஆண்களும், சூழ்நிலை சந்தர்ப்பங்களால் இரண்டு கணவன்மார்களுடன் வாழும் பெண்களும் திருச்சி உய்யக் கொண்டான் திருமலை ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் திருக்கோயிலில் அருள்புரியும் இரட்டை பிள்ளையார் மூர்த்திகளை வணங்கி அர்த்த நாரீஸ்வரருக்கு ஐந்து தேங்காய் எண்ணெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டு வந்தால் அவர்கள் துன்ப நிலை மாற வழி பிறக்கும்.
அறியாமை காரணமாக குரு வார்த்தையை மீறியதற்கு (குருவை நிந்தித்தவர்கள் அல்ல) பிராய சித்தம் தருவதே திருச்சி உய்யக் கொண்டான் மலை ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் ஆலய தீர்த்தமாகும்.
காயத்ரீ மந்திரத்தின் பொருள் தெரிய வேண்டுமா? திருச்சி உய்யக் கொண்டான் மலை ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் ஆலயத்தின் ஓங்காரப் பிரகாரத்தை 24 முறை வலம் வந்து வணங்குங்கள்.
ஆவுடைமேல் முருகன் அற்புதக் காட்சி தரும் திருத்தலமே திருச்சி உய்யக்கொண்டான்மலை ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் ஆலயமாகும். குழந்தைகள், பெரியவர்கள் தொலைந்து போனால் அவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்க ஆவுடை முருகன் அருள்புரிவார். செவ்வாய்க் கிழமைகளில் அரளிப் பூ மாலை ஆறு முழத்திற்குக் குறையாமல் சார்த்தி முருகனை வழிபடுதல் சிறப்பு.
ஞாயிற்றுக் கிழமை அன்று தேன் கலந்த தினைமாவு முருகனுக்குப் படைத்து குழந்தைகளுக்குத் தானமாக வழங்குவதால் அப்பா பையன்களுக்கு இடையே உள்ள கருத்து வேற்றுமை மறையும். பெண் பிள்ளைகள் மட்டுமே உள்ள குடும்பங்களில் புது வாழ்வு மலரும்.
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான நாகதோஷங்களையும் தீர்க்கும் அற்புத தலமே திருச்சி மலைக்கோட்டை அருகில் உள்ள ஸ்ரீநாகநாத சுவாமி திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் உள்ள ஒவ்வொரு துõணும் ஒவ்வொரு விதமான நாக தோஷங்களைத் தீர்க்கும் சிறப்புடையவை. தங்கள் கையால் அரைத்த மஞ்களைத் தடவி இத்திருத்தலத்தில் உள்ள ஒவ்வொரு துõணையும் 16 முறை வலம் வந்து வணங்குதல் நலம்.
திருப்பாற்கடலிலிருந்து வெளிவந்த ஆலகால விஷம் நாம் நினைப்பது போல் ஒரு சாதாரண விஷம் கிடையாது. பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருப்பவர்கள் கூட அதன் வெப்பக் கிரணங்களால் பஸ்மமாகி விடுவர். அத்தகைய கடுமையான வெப்பம் உடைய ஆலகால விஷத்தை எம்பெருமான் உண்டபோது விஷத்தின் உஷ்ணம் தாளாமல் அவர் கழுத்து, கை, கால், இடுப்பு என திருமேனியின் எல்லாப் பாகங்களிலும் இருந்த நாகங்கள் எல்லாம் தரையில் இறங்கி விட்டன.
சிவபெருமானின் உச்சந் தலை ஜடாமுடியை அலங்கரித்த சசபிந்து என்னும் நாகம் மட்டும் அந்தக் கடுமையான ஆலகால வெப்பத்தையும் பொருட்படுத்தாது சிவ பஞ்சாட்சர ஜபித்திலேயே இலயித்திருந்தது. அதன் தியாகத்தை மெச்சிய சிவபெருமான் பிரபஞ்சத்தில் இனி வரும் எந்த நாக தோஷத்தையும் தீர்க்கக் கூடிய ஆசீர்வாத சக்தியை அனுகிரகமாக அந்நாகத்திற்கு அளித்தார்.
சசபிந்து நாகம் மனித உருவம் கொண்டு மகரிஷியாக தூணில் அமர்ந்து அருளாட்சி செய்யும் திருக்கோயிலே திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள ஸ்ரீநாகநாத சுவாமி திருக்கோயிலாகும். சசபிந்துமகரிஷிக்குக் கையால் அரைத்த மஞ்சள் காப்பிட்டு வணங்கி வந்தால் நாக தோஷங்களால் தடைபட்டுள்ள திருமணங்கள் விரைவில் நிறைவேறும்.

No comments:
Post a Comment