குரு கோவிந்த சிம்மன் பத்தாவது குரு. ஜொராவர், பதே சிங் இருவரும் சீக்கிய குரு கோவிந்த சிம்மனின் மகன்கள். ஜொராவர்சிங்கின் வயது 14 பதேசிங்கின் வயது 6. முஸ்லீமாக மதம் மாற மறுத்ததற்காக வாசிர்கான் என்ற கவர்னர் 26.12.1705 அன்று இருவரையும் உயிருடன் கல்லறை வைத்துக் கட்டினான். இறுதிவரை மதம் மாறினால் உயிர் பிழைக்கலாம் என்று வாய்ப்பளித்தும் மரணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட மாபெரும் வீரர்கள்.
இருவருக்கும் கல்லறை கட்டிக்கொண்டிருக்கும்போது தம்பியின் கழுத்துக்கு செங்கல் உயர்ந்து விட்டது. இப்போது அண்ணன் ஜொராவர் கண்கலங்கினான். அண்ணா உனக்கு உயிர்மேல் ஆசை வந்துவிட்டதா என்று தம்பி கேட்கிறான். ஜொராவர் கூறுகிறான். என்னை விட சிறியவனான நீ எனக்கு முன்
உயிர்துறக்கிறாயே என்றுதான் கண்கலங்கினேன்” உலக வரலாற்றிலேயே மிக இளம் வயது தியாகிகள் இவர்கள்தான்.
சீக்கியர்கள் இவர்களுக்கு ஒரு குருத்வாரா கட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment