Saturday, September 5, 2020

ஆத்திசூடி- ஔவையார

1. அறம் செய விரும்பு /
1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் /
2. Control anger.
3. இயல்வது கரவேல் /
3. Dont forget Charity.
4. ஈவது விலக்கேல் /
4. Dont prevent philanthropy.
5. உடையது விளம்பேல் /
5. Dont betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் /
6. Dont forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் /
7. Dont despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி /
8. Dont freeload.
9. ஐயம் இட்டு உண் /
9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு /
10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் /
11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் /
12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் /
13. Dont shortchange.
14. கண்டொன்று
சொல்லேல்/
14. Dont flip-flop.
15. ஙப் போல் வளை /
15. Bend to befriend.
16. சனி நீராடு /
16. Shower regularly.
17. ஞயம்பட உரை /
17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் /
18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு /
19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் /
20. Protect your parents.
21. நன்றி மறவேல் /
21. Dont forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் /
22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் /
23. Dont land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் /
24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் /
25. Dont play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் /
26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் /
27. Dont sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் /
28. Detest the disorderly.
29. இளமையில் கல் /
29. Learn when young.
30. அரனை மறவேல் /
30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் /
31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற /
32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் /
33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் /
34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று /
35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் /
36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் /
37. Dont forsake friends.
38. கெடுப்பது ஒழி /
38. Abandon animosity.
39. கேள்வி முயல் /
39. Learn from the learned.
40. கைவினை கரவேல் /
40. Dont hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் /
41. Dont swindle.
42. கோதாட்டு ஒழி /
42. Ban all illegal games.
43. கெளவை அகற்று /
43. Dont vilify.
44. சக்கர நெறி நில் /
44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு /
45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் /
46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் /
47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் /
48. Dont hurt others feelings.
49. சூது விரும்பேல் /
49. Dont gamble.
50. செய்வன திருந்தச் செய் /
50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் /
51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் /
52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் /
53. Dont show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் /
54. Dont be a lazybones.
55. தக்கோன் எனத் திரி /
55. Be trustworthy.
56. தானமது விரும்பு /
56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் /
57. Serve the protector.
58. தீவினை அகற்று /
58. Dont sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் /
59. Dont attract suffering.
60. தூக்கி வினை செய் /
60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் /
61. Dont defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் /
62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் /
63. Dont listen to the designing.
64. தொன்மை மறவேல் /
64. Dont forget your past glory.
65. தோற்பன தொடரேல் /
65. Dont compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி /
66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் /
67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் /
68. Dont depart from good standing.
69. நீர் விளையாடேல் /
69. Dont jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் /
70. Dont over snack.
71. நூல் பல கல் /
71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் /
72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு /
73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் /
74. Dont involve in destruction.
75. நொய்ய உரையேல் /
75. Dont dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் /
76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் /
77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் /
78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் /
79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் /
80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் /
81. Protectyour benefactor.
82. பூமி திருத்தி உண் /
82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் /
83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று /
84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் /
85. Dont comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் /
86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் /
87. Dont encourage war.
88. மனம் தடுமாறேல் /
88. Dont vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் /
89. Dont accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் /
90. Dont over dramatize.
91. மீதூண் விரும்பேல் /
91. Dont be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் /
92. Dont join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் /
93. Dont agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் /
94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் /
95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் /
96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி /
97. Speak with clarity.
98. மோகத்தை முனி /
98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் /
99. Dont self praise.
100. வாது முற்கூறேல் /
100. Dont gossip or spread rumor.
101. வித்தை விரும்பு /
101. Long to learn.
102. வீடு பெற நில் /
102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு /
103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் /
104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் /
105. Dont be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல்/
106. Dont premeditate harm.
107. வைகறைத் துயில் எழு /
107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் /
108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் /
109. Be impartial in judgement.

Tuesday, August 25, 2020

மாந்திதோஷம்

மரணத்தின் காரகன் , மரணத்தை அறிய உதவுபவன், மரண பயத்தையும்  மரணத்திற்கு சமமான கண்டங்களையும்  தருபவன் , சனிபகவானின் மகன், சனிபகவானின் உபகிரகம் என்று எல்லாம் அழைக்கப்படுபவர் தான் மாந்தி .......

                   இந்த மாந்தி ஒருவருடைய ஜாதகங்களில் இருக்கும் இடத்தை பொருத்து பலனை வழங்குகிறார்.

    மாந்தி லக்னத்திற்கு 3 6 11 ஆகிய பாவங்களிலும் கும்பம் மகரம்  சிம்மம் ஆகிய ராசிகளில் இருக்கும் போதும் அதிகமான கெடுதல்களை செய்வதில்லை .

         ஆனால் 1 2 4 5 7 8 9 10 12 ஆகிய  இடங்களில் மாந்தி இருக்கும் போது ஜாதகர்களுக்கு பெரும் துன்பத்தையும் கஷ்டங்களையும் ,பிரச்சனைகளையும் அசிங்கத்தையும் ,அவமானங்களையும் திடீர்இழப்புகள்,  திடீர்விபத்துகள், திடீர்மரணம் ,  எதிர்பாராத வீழ்ச்சி  கல்வித்தடை , திருமணதடை ,
தொழில்தடை  ,  வேலைஇழப்பு குழந்தைதடை,  நோய்நொடிகள் , வம்புவழக்கு,  கோர்ட்  கேஸ்,  தண்டனை போன்றவைகளை தருகிறார் .

        

பனை மரத்தில் வகைள்

பனை மரத்தில் மொத்தம் 34 வகைள் இருக்கின்றன. அவை,

1. ஆண் பனை
2. பெண் பனை
3. கூந்தப்பனை
4. தாளிப்பனை
5. குமுதிப்பனை
6.சாற்றுப்பனை
7. ஈச்சம்பனை
8. ஈழப்பனை
9. சீமைப்பனை
10. ஆதம்பனை
11. திப்பிலிப்பனை
12. உடலற்பனை
13. கிச்சிலிப்பனை
14. குடைப்பனை
15. இளம்பனை
16. கூறைப்பனை
17. இடுக்குப்பனை
18. தாதம்பனை
19. காந்தம்பனை
20. பாக்குப்பனை
21. ஈரம்பனை
22. சீனப்பனை
23. குண்டுப்பனை
24. அலாம்பனை
25. கொண்டைப்பனை
26. ஏரிலைப்பனை
27. ஏசறுப்பனை
28. காட்டுப்பனை
29. கதலிப்பனை
30. வலியப்பனை
31. வாதப்பனை
32. அலகுப்பனை
33. நிலப்பனை
34. சனம்பனை


Monday, August 24, 2020

வராஹி மூல மந்திரம்:

வராஹி அம்மன் வழிபாட்டை நம் வீட்டிலேயே செய்ய முடியும். இதற்காக நிரந்தரமாக ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள் அது உங்கள் பூஜை அறையாக இருந்தாலும் சரி. இந்த வழிபாட்டை நாம் எந்த இடத்தில் முதலில் செய்கிறோமோ, அதே இடத்தில்தான் மற்ற எல்லா நாட்களிலும் செய்ய வேண்டும். வழிபாட்டில் அன்னையின் படம் மற்றும் விளக்கில் ஜோதி ஏற்றி வைத்து இருக்க வேண்டும். அதே போல் நாம் வடக்கு அல்லது மேற்க்கை நோக்கி அமர வேண்டும்.

வழிபாட்டிற்கு முன்பு நம் குளிக்க வேண்டும். இதில் துளசி மற்றும் வில்வ இலைகளை ஒரு கைப்பிடி அளவு போட்டு குளிப்பது நல்லது. வாராஹி வழிபாட்டிற்கு தனி பூஜை அறை இருந்தால் சேமமாக இருக்கும். அதே போல் அன்னையின் படத்திற்கு அருகில் விநாயகர் படத்தை வைப்பது நல்லது. வடக்கு மற்றும் கிழக்கு திசையை நோக்கி இப்படம் இருக்க வேண்டும்.

பூஜையறையில் பன்னீரில் மஞ்சளை மற்றும் ஏலக்காயை கலந்த நீரை வைக்க வேண்டும். இதை வீடு முழுவதும் தெளிப்பது நல்லது.


மஹா வராஹி மூல மந்திரம்:

ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா



கண் திருஷ்டியை போக்க

ஒரு சிகப்பு துணியை எடுத்துக் கொள்ளுங்கள். சிகப்பு, கருப்பு போன்றவை கண் திருஷ்டியை போக்க வல்லவை என்பார்கள். அதனால் சிகப்பு அல்லது கருப்பு துணியை சதுரமாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவிற்கு கல் உப்பை எடுத்து குடும்பத்தினர் மற்றும் வீட்டை சுற்றி திருஷ்டி கழியுங்கள். அதாவது மூன்று முறை வலது புறமாகவும், மூன்று முறை இடது புறமாகவும் சுற்றிக் கொள்ளுங்கள். அதை அந்தத் துணியில் போட்டு அதனுடன் சிறிதளவு கடுகு அல்லது வெண்கடுகு ஏதாவது ஒன்றை போட்டுக் கொள்ளுங்கள்.

இதனை நீளவாக்கில் சுற்றி பின்னர் இரு முனைகளையும் பிடித்து, நன்றாக முடிந்து கொள்ளுங்கள். இதனை தலைவாசலில் ஆணி அடித்து வைத்திருப்பீர்கள் அல்லவா? அதில் மாட்டி வைத்து விடுங்கள். மாதம் ஒரு முறை மட்டும் இதனை மாலை ஆறு மணி ஆவதற்குள் கலற்றி தண்ணீரில் கரைத்து யார் காலிலும் படாதவாறு வெளியே ஊற்றி விடுங்கள். இதை அமாவாசை தினத்தில் செய்தால் கூடுதல் சிறப்பான பலனை தரும். முடியாதவர்கள் மற்ற நாட்களிலும் தாராளமாக இதை செய்யலாம். மீண்டும் புதியதாக இதே போல் செய்து ஆறு மணிக்குள் கட்டிவிடுங்கள். அவ்வளவு தான். உங்கள் வீட்டை எந்த ஒரு கண் திருஷ்டியும் நெருங்கக் கூட முடியாது.

செல்வத்தை தரும் செடிகளை

தெய்வங்களுக்கு வாசனை மிக்க மலர்களால் அர்ச்சனை செய்து வருகிறோம். வாசனை இல்லாத மலர்கள் தோஷ நிவர்த்திக்காக பயன்படுத்துவார்கள் தவிர அவைகள் நல்ல அதிர்வலைகளை உண்டாக்குவதில்லை. எல்லா செடி வகைகளும் நமக்கு சுத்தமான காற்றை தருபவை தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் வாஸ்து என்று வந்து விட்டால் அதற்குரிய சாஸ்திரத்தை கடைபிடித்தால் மட்டுமே நமக்கு அதிர்ஷ்டம் வரும்

வாஸ்து திசைகள் என்பது மிகவும் முக்கியமாக இருக்கிறது. அது போல் ஜோதிடத்திலும் திசைகள் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த இரண்டு வகைகளிலும் சொல்லப்பட்டுள்ள முக்கியமான விஷயம் என்று பார்த்தால் அது முல்லை செடியை சொல்லலாம். முல்லை செடியை குருவின் அம்சமாக ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. குரு பார்வை இருந்தால் நமக்கு எந்த அளவிற்கு நன்மைகள் விளையும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். குருவின் அருள் இருந்தால் தான் நம்முடைய சந்ததியினர் நலமுடன் வாழ முடியும்.

அது போல் மல்லி செடியை சுக்கிரனின் அம்சமாக பார்க்கப்படுகிறது. ஒருவன் தன் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன், சந்தோஷமாக, உற்சாகத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை சுக்கிரனின் பலத்தால் தான் பெறுகிறான். சுக்கிரனுடைய இடம் சரியாக அமைந்திருந்தால் அந்த ஜாதகன் அதிக அளவில் உற்சாகத்துடன் சந்தோஷமாக இருப்பான். உலகில் கிடைக்க கூடிய சிற்றின்பம் அனைத்தையும் அனுபவிப்பான் என்பார்கள். அத்தகைய சுக்கிரனின் அம்சம் பொருந்திய மல்லிச் செடி தெய்வாம்சம் பொருந்திய செடியாக இருக்கிறது.

ஆக முல்லை மற்றும் மல்லி செடியை வீட்டில் வளர்ப்பதால் குரு மற்றும் சுக்கிரனின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைத்துவிடும். இதனால் வீட்டில் செல்வ வளம் உயரும் என்பது நிதர்சனமான உண்மை. முல்லை செடியை பொறுத்தவரை வடக்கு திசையில் வைப்பது மிக மிக நல்லது. வடக்கு திசையில் சிறிதளவு இடமிருந்தாலும் அதை கொடியாக மேலே படர விட்டு விடலாம். மல்லி செடியின் திசையாக தெற்கு திசையும், வடக்கு திசையும் சிறந்ததாக கூறப்பட்டுள்ளது.

வீட்டின் அமைப்பு எப்படி இருந்தாலும் எந்த திசையில் இருந்தாலும் பரவாயில்லை. செடிகள் வைக்கும் திசை மட்டும் இந்த திசையில் வைத்து பாருங்கள். அதுபோல் மல்லிகையும், முல்லையும் ஒன்றாக வைக்கக் கூடாது. இரண்டும் வெவ்வேறு அம்சங்களை கொண்டுள்ளதால், அதற்குரிய திசைகளில் ஒன்றிற்கொன்று பாதகமில்லாமல் வளர்த்து வரவேண்டும். காடு போல் வளர்க்காமல் அவ்வப்போது அதன் கிளைகளை வெட்டி விட்டு, பார்ப்பதற்கே அம்சமாக இந்த இரண்டு செடிகளை மட்டும் நீங்கள் வீட்டில் வளர்த்தால் மகாலட்சுமியின் கடாட்சம் வீடு முழுவதும் பரவி செல்வ வளம் மென்மேலும் பெருகும்.

தொழிலில் முன்னேற்றம் தரும் சனி காயத்ரி

சனி பகவானின் காயத்ரியைச் சொல்லி வழிபட்டு வந்தால், சனி கிரக தோஷங்களனைத்தும் விலகும். தொழில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும். நோய்கள் நீங்கப் பெற்று ஆனந்தமாக வாழச் செய்வார் சனீஸ்வர பகவான்.

சனி பகவான். நமக்குச் சோதனைகளைத் தருவார். நம்மைச் சோதனைக்குள்ளாக்குவார். இவை அனைத்துமே நம்மைத் திருத்துவதற்காகத்தான் என விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள். எனவே சனி பகவானை நினைத்து எந்தச் சூழ்நிலையிலும் நாம் பயப்படத் தேவையில்லை.

சனிக்கிழமை தோறும், எள் தீபமேற்றி, சனீஸ்வரரை வழிபட்டு வந்தால், சனியின் பிடியில் இருந்தும் சனியின் பார்வையில் இருந்தும் தப்பிக்கலாம். விடுபடலாம். விமோசனம் பெறலாம்.

அப்போது, சனி பகவானின் காயத்ரியை சனிக்கிழமைகளில் பாராயணம் செய்யுங்கள். சனிக்கிழமை என்றில்லாமல் எந்த நாளில் வேண்டுமானாலும் சொல்லி வழிபடலாம்.

மந்திரம்

”ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த பிரசோதயாத்”

அதாவது, காகத்தை வாகனமாகக் கொண்ட சனி பகவானே... கட்க என்கிற ஆயுதத்தால் மங்லம் பொங்குகிற காரியங்களைச் செய்து கொடுத்து அருளுவாய். குறைவின்றி வாழ்வதற்கு அருள் புரிவாயாக’ என்று அர்த்தம்.

இந்த சனீஸ்வர காயத்ரிமந்திரத்தைச் சொல்லி, காகத்துக்கு எள்ளும் சாதமும் கலந்த உணவிடுங்கள். சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சனியால் விளையும் கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். தொழிலில் இருந்த தடைகளையெல்லாம் தகர்ந்து, முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். நீண்ட ஆயுளுடன் நோய்கள் நீங்கப் பெற்று, இனிதே வாழ்வீர்கள்.


Saturday, August 22, 2020

திறுநீறும் காவி உடையும்

ஒரு ஊரில் ஒரு திருடன் 
அவன் திருடாத இடமே இல்லை,

ஊர் மக்கள் அனைவரும் அந்த ஊர் ராஜாவிடம் சென்று முறையிட்டனர்.

அந்த திருடன் ராஜா இடமும் சிக்காமல் சாமத்தியமாக தப்பித்து தப்பித்து வந்தான்.

ஒரு கட்டத்தில் ராஜா முடியாமல் இந்த திருடனை பிடித்துததந்தால் ருபாய் ஐந்து லட்சம் என ஆனையிட்டார்.

"இது ஒருபுரம் இருக்காட்டும்"

சில நாட்கள்கழித்து அந்த ராஜா மந்திரியை அழைத்து,

யார் பற்று இல்லாமல் இருகின்றார்களோ அவருக்கு என் ராஜாங்கத்தில் பாதி தந்துவிடுகின்றேன். என அறிவித்து. நீங்கள் சென்று யார் பற்று இல்லாமல் உள்ளார் என தேடிபார்த்து அழைத்துவாரும் என ஆனையிட்டார்.

மந்திரி தேடி செல்லும் போது இந்த திருடன் அவரிடம் வசமாக மாட்டிக்கொண்டான்.

மந்திரியின் சூழ்ச்சியினால் உன் தலைக்கு ராஜா ஐந்து லட்சம் என கூரியுள்ளார்.நான் சொல்வது போல் நீ நடித்தால் உனக்கு இருபது லட்சம் தருகின்றேன், மேலும் உன்னையும் தப்பிக்க வைக்கின்றேன். என உறுதி அளித்தான்.

சரி என இந்த திருடனும் சம்மதித்தான். அந்த திருடனுக்கு ,

திருநீறும் ருத்ராட்சமும் போட்டு ஒரு சன்யாசி போல் வேடம்மிட்டு நீ இந்த மரத்தின் கீழ் அமைதியாக அமர்ந்து இருப்பது போல் நடி, ராஜா வந்து எதை தந்தாலும் வேண்டாம் என்று சொல்,

கடைசியாக அவர் தன் ராஜியத்தில் பாதியை உனக்கு தானமாக தருவார். அதை வாங்கி என்னிடம் தா,
நான் உனக்கு பேசியது போல் இருபது லட்சம் தருவேன். என ஒப்பந்தம் செய்துக் கொண்டனர்.

பின் அந்த மந்திரி ராஜாவிடம் சென்று ஒரு சன்யாசி பற்றுகளைவிட்டு மரத்தடியில் அமர்ந்து உள்ளார். அவரை தரிசித்து தங்களின் வேண்டுதளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்றார்.

ராஜா சென்று மரத்தின் கீழ் உள்ள அந்த சன்யாசி (திருடன்)யின் காலில் விழுந்து வனங்கி, ஐயா தங்களுக்கு தானமாக ஒரு லட்சம் பொன்மலை தருவேன் அதை எற்றுக்கொள்க என,

இந்த சன்யாசி வேண்டாம் என்றார்.
பின் ஐந்துலட்சம், பத்து லட்சம். இருபது லட்சம், ஐம்பது லட்சம் என உயர்ந்த. நகை, பனம், என தானமாக தந்தார்.

இந்த சன்யாசி எதுவும் வேண்டாம் என்றார்.

பின் ராஜா நீயே சத்தியசீலன் என் ராஜாங்கத்தில் பாதி தங்களுக்கு தானமாக தருகின்றேன் .நீங்கள் அதை பெற்றுக் கொண்டு எனை வாழ்த்த வேண்டும் என்றார்.

(இப்போது தான் மந்திரிக்கு சந்தோஷம் நாம் சொன்னது போலவே நடிக்கின்றான் .என தன் மனதுக்குள்ளே சிரித்து மகிழ்ந்தான்)

ஆனால் அந்த சன்யாசி வேண்டாம் என்றார். (மந்திரிமுகம் மாறிவிட்டது அடபாவி வேண்டாம் என்றுவிட்டானே, இவனை இப்போது திருடன் எனவும் நாம் சொல்ல முடியாது, என்ன செய்வது என மனதுக் உள்ளே குழம்பத்தில் நிற்க்)

கடைசியாக அந்த ராஜா தன் மகளையே தங்களுக்கு திருமணம் செய்து தருகின்றேன் என கூரினார்.

அதற்கும் அந்த சன்யாசி
ஐயா நானோ பற்று அற்றவன் எனக்கு எதுக்கு இதுஎல்லாம் வேண்டாம் என்றார்.

நீறே தீர்க்கதரிசி என வீழ்ந்து வனங்கி அந்த ராஜா சென்றுவிட்டார்.

பின் அந்த மந்திரி வந்து அடப்பாவி என் வயத்துல இப்படி மண்அள்ளி போட்டு விட்டாயே இது நியாமா என சண்டை போட,

அதற்க்கு அந்த சன்யாசி
ஐயா நான் திருடன் தான்.

எப்போது நீங்கள்
திருநீறும் ருட்ராச்சமும் என் மீது தரித்தீர்களோ அப்போதே என் மனம் மாறிவிட்டது.

மேலும் என் தலைக்கு ஐந்து லட்சம் என விலை வைத்த ராஜா
என் கோளத்தை பார்த்து என் காலில் விழுந்தார்.

அந்த பனிவு எனக்காக அல்ல
என் மேல் உள்ள இந்த 
திறுநீறுக்கும் காவி உடைக்கும் ருத்ராட்சத்துக்கும் தான்,

நான் எதை வேண்டாம் வேண்டாம் என்று சொன்னேனோ அதைவிட உயர்வான பெருள் தான் எனக்கு கிடைத்தது.

மதிப்புள்ள இந்த பெருளை நான் வேண்டாம் என்றால்
விலைமதிப்பில்லா அந்த இறைவன் எனக்கு கிடைப்பான்
அதுவே எனக்கு போதும் என்றார்.

ஆம், என் அன்பின் உறவுகளே
இந்த திறுநீறும் காவி உடையும் ருத்ராச்சமும் நமக்கு கிடைத்த பொக்கிஷம்...இதை அணிந்து களங்கமும் விளைவிப்பதோ அறத்திற்கு புறம்பான செயல்களை செய்வதோ வேண்டாம்..

திருச்சிற்றம்பலம்

கண் எதற்கு?

திருத்ராஷ்ட்ரனுக்கு ஏன் கண் குருடானது? ஏன் அவனுக்கு நூறு குழந்தைகள்?
குருசேஷத்திர போர் முடிந்து, தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துகொண்டிருந்தது.

அப்போது திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம், கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன்.

அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.
அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன். அதன் பின் ஒரு கேள்வி கேட்கிறேன்.

நீ அதற்கு பதில் சொன்னால், நான் உனக்கு பதில் தருகிறேன்! என்ற பகவான், கதையைக் கூறினார்.

நீதி தவறாது ஆட்சி செய்த ஓர் அரசனிடம் மிகவும் வறியவன் ஒருவன் சமையற்காரனாகச் சேர்ந்தான்.

மிகச் சுவையாக சமைப்பது, அரசரை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.

அரசருக்கு வித்தியாசமான சுவையை அறிமுகப்படுத்தி பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை தோன்றியது.

அதன்படி,அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து, அரசருக்குப் பரிமாறினான்.

தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அப்பதார்த்தத்தின் சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி அதை சமைக்கவும் கட்டளை இட்டு, சமையற்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.

திருதராஷ்டிரா, இப்போது சொல்... அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார்.

வசிஷ்டரின் சமையற்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்து விட்டார்.

ஆயினும் வசிஷ்டர் அதைக் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார்.

அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே! சமையற்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது.

ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான்! என்றார், திருதராஷ்டிரன்.

புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா! நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது, மன்னவன் செய்ததே தவறு! என கூறினாய்.

அத்தகைய நீதி பரிபாலனம்தான் பீஷ்மர், துரோணர், போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது.

நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது.

ஆனால், நான் சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான்.
சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.

அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய துயரும், வேதனையும் அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய்.

ஆனால் தினம் தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை.
அப்புறம் உனக்கு, கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்.
தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. 

அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார்.

நம்பிக்கையுடன் ஓதுபவர்களுக்கு

நீதியரசர் சூரியமூர்த்தி  கூறுகிறார்:

"எனக்கு அப்போது ஒரு பதினைந்து பதினாறு வயது இருக்கும், தீவிர கடவுள் மறுப்பாளராக(!!) இருந்தேன். அந்த சமயத்தில், எங்கள் கிராமத்தில், எங்களுக்கு சொந்தமாக ஒரு தென்னந் தோப்பு இருந்தது. அதில், ஒரு இஸ்லாமிய குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த குடும்பத்தில், ஒரு நபரிடம், மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட விஷக்கடி கண்ட மக்கள் வருவார்கள். அப்படி வரும் அவர்களிடம், அந்த நபர் அவர்கள் தலையின் மீது ஒரு வேப்பிலை கொத்து வைத்து, ஏதோ உச்சரிப்பார் ,பிறகு அந்த நோயாளி நலமுடன் வீடு திரும்புவார்!!! இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. அந்த இஸ்லாமிய நபரிடம், நீங்கள் முனுமுனுக்கும் விஷயம்தான் என்ன?? என்று நான் கேட்டபொழுது, உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, உன்னிடம் இதை கூற முடியாது. ஒருவேளை உனக்கு நம்பிக்கை வந்தால்!! பிறகு வா பார்க்கலாம் என்று கூறி அனுப்பிவிட்டார்.

    காலங்கள்  உருண்டோடின. நான் சட்டம் பயின்று, வேலை கிடைத்து, படிப்படியாக பாண்டிச்சேரியின் நீதிபதியாக  உயர்ந்துவிடடேன். இந்த காலங்களில் நான் தீவிர சைவசமய நம்பிக்கையாளனாகவும் மாறி இருந்தேன். ஒரு நாள் எனக்கு அந்த இஸ்லாமிய நபரின் நினைவு வந்தது!!! உடனடியாக நேரில் எங்கள் தென்னந்தோப்புக்கு சென்று, அவரிடம், இப்பொழுதாவது கற்றுத் தருவீர்களா??? என்று கேட்க, ஆச்சரியத்துடன் என்னை நோக்கிய அவர், போய் குளித்துவிட்டு வா உனக்கு உபதேசிக்கிறேன் என்றார்.

 நான் குளித்து முடித்து வந்ததும், என்னைக் கீழே அமரச் செய்து என் காதில் அவர் அந்த மந்திரத்தை சொல்லச் சொல்ல எனக்கு ஆச்சரியம் தாளவில்லை!!! ஏனெனில்  அவர் ஓதியது திருநாவுக்கரசர், விஷம் கண்டு இறந்து விட்ட அப்பூதியடிகளின் மகனை காப்பாற்ற பாடிய தேவாரப் பாடல்!!!.

 அவர் அந்த முழு பதிகத்தையும் என் காதில் ஓதி முடித்தவுடன், இது எங்கள் தேவாரப்பாடல் ஆயிற்றே எனக்கேட்க?? அவர் எனக்கு இதெல்லாம் தெரியாது. என் குருநாதர் எனக்கு சொல்லி கொடுத்தார் அதைக்கொண்டு நான் வைத்தியம் செய்கிறேன் என்று கூறி எனக்கு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்''.

இன்னதென்று தெரியவில்லை!!, அதன் அர்த்தமும் தெரியவில்லை!! அதன் மூலமும் உணரவில்லை!!! ஆனாலும் நம்பிக்கையுடன் ஓதுபவர்களுக்கு அதன் பலன்கள்  கிடைக்கிறது.  "தேவாரப் பாடல்கள் அனைத்தும் மந்திரச் சொற்களால் நிரம்பியவை. அவைகள் தமிழ் வேதத்தின் ஒரு அங்கம். நம் தமிழ் மக்கள் குறைதீர்க்க இறைவன் நமக்கு அளித்த பொக்கிஷம்''' இது நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும்???

திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பாக, "விதியை வெல்வது எப்படி???'' என்று ஒரு புத்தகம்(பெட்டகம்) சில காலங்களுக்கு முன் வெளியானது. சகாய விலையில் கிடைக்கும் அந்த புத்தகம் அனைத்து முன்னணி புத்தக கடைகளிலும் கிடைக்கும். அதில் எந்த பதிகம் எந்த பலனை அளிக்கும்?? என்று விலாவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.

Wednesday, August 19, 2020

கடனால் தலைமறைவு வாழ்க்கை


     ஒருவருடைய ஜாதகத்தில் 
6ம் அதிபதி ஆட்சி ,உச்சம், மூலத்திரிகோணம் அடைந்து ,
12ம் இடம் இடம் தொடர்பு கொண்டு , 6ம் இடத்தில் இருக்கும் கிரக திசை நடக்கும் போது , அந்த ஜாதகர் பெரும் கடன் பிரச்சனையை சந்திப்பார். மேலும் வம்பு ,வழக்கு, சண்டை சச்சரவுகளையும் சந்திப்பார்.  இந்த காரணங்களுக்காக  ஒருநாள் ,ஒருபொழுதாவது, கண்டிப்பாக   அந்த ஜாதகர் தலைமறைவு வாழ்க்கை  வாழ்வார். 

     மேலும் அவர்கள் வசிக்கும் வீட்டில் அல்லது வேலைபார்க்கும் அல்லது தொழில் செய்யும் இடத்தில் தெற்கு ,தென்மேற்கு பகுதிகள் பாதிக்கப்பட்டு இருக்கும் .

          

வேல் மாறல்

வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய 'வேல் மாறல்'

... வேலும் மயிலும் துணை ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

( ... இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் ... )

( ... பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் "திரு" என்ற
இடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் ... )

1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

2. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

6. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

7. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

12. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

15. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

16. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

17. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

18. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

22. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

25. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

28. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

31. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

32. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

35. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

36. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

38. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

39. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

40. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

41. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

42. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

45. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

46. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

51. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

52. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

55. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

57. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

60. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

61. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

62. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

65. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

( ... முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும் ... )

தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
தொளைத்தவேல் உண்டே துணை.

... ... ... வேலும் மயிலும் துணை ... ... ...

கொடுத்த கடன் திரும்பவருமா?


          ஒருவருடைய ஜாதகத்தில் 
8 மற்றும் 12ம் இடத்து அதிபதிகள்
இணைந்து, 2ம் இடத்தில் இருந்தாலும், அல்லது 2ம் அதிபதியுடன் சேர்க்கை பெற்றாலும், அல்லது 2ம் அதிபதி 8 & 12ம் அதிபதிகளின். பார்வை பெற்றாலும் , ஜாதகர்கொடுத்த கடன் திரும்பவராது.

     மேலும் இவர் கையை விட்டு சென்ற பொருளோ ,சொத்துகள் திரும்ப வராது . இவருடைய காதலி மனைவி போன்றோர் நீண்ட நாள் பிரிந்து இருந்தாலும் மீண்டும் சேர்வதில் பெரும் சிக்கல் ஏற்படும் .


          

பெருங்காயத் தூள்

அசாஃபோடிடா அல்லது ஹிங் இந்திய உணவுகளில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய சமையல் பருப்பு, சப்ஸி, சாம்பார் அல்லது அரிசி பொருட்கள் கூட ஹிங்கைத் தொடாமல் முழுமையடையாது.

ஹிங் அல்லது அஸ்ஃபோடிடா எவ்வாறு உருவாகிறது என்பதை நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது ஃபெருலா மூலிகையைச் சேர்ந்த பல உயிரினங்களின் குழாய் வேரிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நறுமண பசை ஆகும்.

ஹிங் அதன் தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்திற்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் அதன் கார்மினேடிவ், வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் டையூரிடிக் பண்புகளுக்கு நம்பமுடியாத இடத்தைப் பிடித்துள்ளது.


அசாஃபோடிடாவின் சிறந்த ஆரோக்கிய நன்மைகள்

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
வீக்கம், வாய்வு, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் புழுக்கள் உள்ளிட்ட வயிற்று பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேத மருத்துவத்தில் அசாஃபோடிடா பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அசாஃபோடிடாவின் வலுவான அழற்சி எதிர்ப்பு மற்றும் ஸ்பாஸ்மோடிக் பண்புகள் இந்த சுகாதார சிக்கல்களை எளிதாக்க உதவுகின்றன.


உங்கள் அன்றாட விதிமுறைகளில் அசஃபோடிடாவைச் சேர்ப்பதற்கான சிறந்த வழி, பருப்பு, சாம்பார் மற்றும் கறிகளில் சேர்ப்பதன் மூலம். வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை ஹிங்கைச் சேர்த்து, தினமும் குடிக்கவும்.


சுவாசப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கிறது

ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் வறட்டு இருமல் போன்ற சுவாசப் பிரச்சினைகளைத் தணிக்க அசாஃபோடிடாவின் ஈர்க்கக்கூடிய இயற்கை சக்திகளான அழற்சி எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் விளைகின்றன. இது கபத்தை அழிக்கவும், மார்பு நெரிசலை எளிதாக்கவும் உதவுகிறது. உங்கள் மார்பில் அசஃபோடிடா பேஸ்ட்டைப் பயன்படுத்துவதால் சுவாசப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது
அசாஃபோடிடா சிறந்த இயற்கையான இரத்த மெல்லியதாகும், கூமரின் உள்ளடக்கம் ஏராளமாக இருப்பது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் அதன் பாகுத்தன்மையைக் குறைப்பதற்கும் உதவுகிறது, இதனால் இரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. அசாஃபோடிடாவில் உள்ள பைட்டோநியூட்ரியன்கள் தமனி இரத்த அழுத்தத்தைக் குறைக்க செயல்படுகின்றன என்பதோடு நல்ல இதய ஆரோக்கியத்தை உறுதிசெய்கின்றன என்பதற்கான சான்றுகள் நிரூபிக்கப்படுகின்றன.


இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது

சமீபத்திய ஆய்வின்படி, 50 மில்லிகிராம் அசாஃபோடிடா சாறு இரத்த சர்க்கரையை குறைக்கும் விளைவுகளை நிரூபித்துள்ளது. இது சாதாரண இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பதில் இயற்கையான தீர்வாக செயல்படுகிறது. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த ஹிங்கில் உள்ள சக்திவாய்ந்த பினோலிக் கலவை நன்றாக வேலை செய்கிறது.


தோல் ஆரோக்கியம்

தோல் ஆரோக்கியம் மற்றும் பளபளப்பை மேம்படுத்துவதற்கான ஒரு அற்புதமான மூலப்பொருள் அசாஃபோடிடா. சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு உற்பத்தியைக் குறைக்க நன்றாக வேலை செய்கின்றன மற்றும் அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பருக்கள் மற்றும் தடிப்புகளின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. இது முக திசுக்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது தோல் பிரகாசம் மற்றும் பளபளப்பை அதிகரிக்கும்.
கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டருடன் அசாஃபோடிடாவை கலந்து பேஸ்ட் செய்யுங்கள், இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி அந்த உடனடி பளபளப்பைப் பெறுங்கள்.

தலைவலி குறைய

தலைவலி என்பது தலை, கழுத்து மற்றும் உச்சந்தலையில் வலி மற்றும் சங்கடத்தை ஏற்படுத்தும் மிகவும் பொதுவான பிரச்சினையாகும்.

தலைவலி பெரும்பாலும் லேசானது, ஆனால் அரிதான சந்தர்ப்பங்களில், இது தீவிர வலியை ஏற்படுத்தும், இது வேலையில் கவனம் செலுத்துவது கடினமாகவும் உங்கள் அன்றாட நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் கடினமாகவும் இருக்கும். பொதுவான தலைவலிகளில் சில ஒற்றைத் தலைவலி மற்றும் பதற்றம் தலைவலி ஆகியவை அடங்கும்.

அதிர்ஷ்டவசமாக நீங்கள் ஒரு மருத்துவரிடம் செல்லாமலோ அல்லது ஒரு மாத்திரையைத் தூண்டாமலோ அந்த வேட்டையாடும் தலைவலியை எளிதாக்கலாம், இந்த எளிதான மற்றும் பயனுள்ள வழிகளில் சிலவற்றை முயற்சித்து நன்றாக உணரலாம்.


கோல்ட் பேக்

ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெற உங்கள் நெற்றியில் ஒரு குளிர் மூட்டை வைப்பது நன்றாக வேலை செய்கிறது. ஐஸ் க்யூப்ஸை ஒரு துண்டில் போர்த்த முயற்சி செய்யுங்கள் அல்லது குளிர்ந்த துணியை எடுத்துக்கொள்வது வலியைக் குறைக்கும். குளிர்ந்த அமுக்கத்தை உங்கள் தலையில் 15 நிமிடங்கள் வைத்து அடுத்த 15 நிமிடங்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் தலைவலி குறையும் வரை மீண்டும் செய்யவும்.


சூடான துணி

உங்கள் கழுத்தில் அல்லது உங்கள் தலையின் பின்புறத்தில் ஒரு வெப்பமூட்டும் திண்டு வைப்பதன் மூலம் பதற்றம் மற்றும் தலைவலி சிறந்ததாக இருக்கும். சைனஸ் தலைவலிக்கு இருக்கும் இடத்தில் ஒரு சூடான துணியைப் பிடிப்பதன் மூலம் சிகிச்சையளிக்க முடியும்.


தலை அழுத்தத்தை குறைக்கவும்

சில வெளிப்புற சுருக்கங்கள் போன்ற தலைவலியை ஏற்படுத்தக்கூடும் – உங்கள் போனிடெயில் மிக அதிகமாக இருக்கப்பட்டு இருந்தால், தொப்பி, ஹெட் பேண்ட் அல்லது மிகவும் இறுக்கமாக இருக்கும் உங்கள் நீச்சல் கண்ணாடிகளை கூட அணிந்து கொள்வதாலும் தலைவலி உண்டாகிறது. தலைமுடியை இறுக்கமாகக் கட்டிக்கொள்ளாத பெண்கள் குறைவான தலைவலிக்கு ஆளாகிறார்கள் என்பதை பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன.


டிம் தி லைட்ஸ்

உங்கள் மடிக்கணினி அல்லது கணினித் திரையில் இருந்து பிரகாசமான ஒளி ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும். பகலில் உங்கள் ஜன்னல்களை இருட்டடிப்பு திரைச்சீலைகள் மூலம் மூடி, வெளியில் செல்லும் போது சன்கிளாஸைப் பயன்படுத்தலாம். சிக்கலை சரிசெய்ய உதவும் உங்கள் கணினி மற்றும் மடிக்கணினியில் கண்ணை கூசும் திரைகளைச் சேர்க்கவும்.


உங்கள் தாடைகளை அடைக்க வேண்டாம்

உங்கள் தாடையை இறுக்கமாக பிடுங்குவது, அல்லது தொடர்ந்து மெல்லுதல் அல்லது பற்களை கொண்டு அரைப்பது போன்ற பழக்கம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் தலைவலியுடன் முடிவடையும். அதற்கு பதிலாக ஏதாவது ஒன்றை முயற்சி செய்து உறிஞ்சவும்.


மன அழுத்தத்தை வெல்லுங்கள்

சில எளிய நீட்சிகள், யோகா, தியானம், தளர்வு போன்றவற்றைப் பயிற்சி செய்வது, நீங்கள் கடுமையான தலைவலியை அனுபவிக்கும் போது அமைதியாக இருக்க உதவும். உங்கள் கழுத்து மற்றும் மசாஜ் செய்வது மன அழுத்தத்தை வெல்ல மிகவும் உதவியாக இருக்கும். உங்கள் தசை பிடிப்பு இன்னும் குறையவில்லை என்றால், கிடைக்கக்கூடிய உடல் சிகிச்சை பற்றி நிபுணர் ஆலோசனையைப் பெறவும்.
கடுமையான நீரிழப்பின் அறிகுறிகளில் தலைவலி ஒன்று என்பதால் போதுமான நீரேற்றம் மிகவும் முக்கியமானது. எனவே, உங்களை நீரேற்றமாக வைத்திருக்கவும் தலைவலியைத் தடுக்கவும் ஒரு நாளில் குறைந்தது 8- 10 கிளாஸ் தண்ணீரை முயற்சி செய்து குடிக்கவும்.

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்

அத்திப் பழம்

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் இதனை தினமும் அளவாக சாப்பிடுவது மிகவும் ஏற்றது.

கிவி

கிவி பழம் நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து விடும்.

செர்ரி

செர்ரி பழங்களில் கிளைசீமிக் இன்டெக்ஸின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்கும். எனவே இதனை அவ்வப்போது அளவாக சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்ளலாம்.

கொய்யா

கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும்.
அதுமட்டுமின்றி, கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளன.

நாவல் பழம்

கிராமப்பகுதிகளில் அதிகம் கிடைக்கும் இந்த பழம், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழம். ஏனெனில் இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு விரைவில் கட்டுப்படுத்தும்.
அதுமட்டுமின்றி, இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால், இன்னும் சிறந்த பலனைக் காண முடியுமாம்.

அன்னாசி

அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டி-வைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கும்.

தர்பூசணி

தர்பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனை அளவுக்கு மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு நீர்ச்சத்தானது கிடைத்து, உடல் வறட்சியானது தடுக்கும்.

பலாப்பழம்

பலாப்பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், இதனை நீரிழிவு நோயாளிகள் அறவே தொடக்கூடாது என்று நினைக்கக்கூடாது. ஏனென்றால், இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் பழங்களுள் ஒன்று.

நட்சத்திரப் பழம்

இந்த பழமும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் பழமாகும். ஆனால் அளவாக சாப்பிடணும்.

தொப்பை குறைக்க

தொப்பை கொழுப்பிற்கு காரணங்கள் பல உள்ளன. அஜீரணம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் வாழ்க்கை முறை இதில் அடங்கும். வீக்கம் மற்றும் நாள்பட்ட மலச்சிக்கல் அஜீரணத்தால் ஏற்படுகின்றன. 

மேலும் அவை உங்கள் உணவில் நார்ச்சத்து மற்றும் இஞ்சியைச் சேர்ப்பதன் மூலம் சமாளிக்க முடியும். நிறைய தண்ணீர் குடிப்பதும் முக்கியம். வயிற்றைத் தட்டையாக்க மற்றொரு வழி சீரகம் மற்றும் ஓமம் கலந்த தண்ணீரைக் குடிப்பது. இரவில் அவற்றை ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்த தண்ணீரைக் குடிக்க வேண்டும்.  
அதிக நேரம் உட்கார்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவர்களுக்கு, கார்போஹைட்ரேட்டை  கட்டுக்குள் வைத்திருப்பது கட்டாயமாகும். பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்ற நல்ல கொழுப்போடு நாளை  தொடங்குதல் அவசியம். ஒருவர் கிரீன் டீயைத் தேர்வுசெய்து அதற்கு முன் அரை தேக்கரண்டி நெய் சாப்பிடலாம்.


ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால், பெர்ரி, வெண்ணெய் பழம் உதவியாக இருக்கும். கார்டிசோல் ஒரு மன அழுத்த ஹார்மோன் ஆகும். இது மற்ற ஹார்மோன்களின் இயல்பான செயல்பாடுகளை சீர்குலைக்கிறது. இது லெப்டின் மற்றும் கிரெலின் ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி, பசியின்மையை  அதிகரிக்கிறது. இது உங்கள் மொத்த கலோரிகளை அதிகரிக்கும். இது இதய பிரச்சினைகள் மற்றும் இன்சுலின் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இது நம் உடலில் உள்ள கொழுப்பை வயிற்றில் வைக்கிறது. பெர்ரி, வெண்ணெய், கொட்டைகள், தயிர், பேரீச்சம்பழம் மற்றும் பப்பாளி போன்ற உணவுகள் கார்டிசோலின் அளவைக் குறைக்க உதவுகின்றன. 


உங்கள் வயிற்றைத் தட்டையாக வைக்க நீங்கள் சாப்பிட வேண்டிய சில உணவுகள்:

★முட்டை:

முட்டைகள் உங்களை நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வை தந்து  பசியின்மைக்கு உதவுகின்றன. கனமான கார்போஹைட்ரேட்  அடிப்படையிலான உணவை இதனுடன் மாற்றலாம். அவை வளர்சிதை மாற்றத்தை அதிகமாக வைத்திருக்க உதவுகின்றன.

★கொட்டைகள்:

தொப்பை கொழுப்பைக் குறைக்க அனைத்து வகையான கொட்டைகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவற்றின் ஒமேகா -3 உள்ளடக்கம் காரணமாக, அவை வயிற்றை இறுக்க  உதவுகின்றன. அவற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன.


★தயிர்:

முட்டைகளைப் போலவே, தயிரும் பசியைக் குறைக்க உதவுகிறது. அதனால்தான், தவறாமல் இதனை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தயிர் குடலில் உள்ள குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.  இதனால் வயிறு வீக்கம் குறைகிறது.


★சிட்ரஸ் பழங்கள்:

சிட்ரஸ் பழங்கள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றன.  மேலும் வைட்டமின் C உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

நரைமுடி மறைய

நெல்லிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி, வெயிலில் காயவைத்து பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, பின் ஆரியதும் அதை தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறையும்.

தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.

ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் 2 ஸ்பூன் எடுத்து கொண்டு தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் கலக்கி முடியில் தேய்த்து ஊறவைத்து 5 நிமிடம் கழித்து அலச வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.

கறிவேப்பிலையை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் போல் செய்து, அதனை தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், நரை முடி விரைவில் மறைந்திடும்.

வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி 5 நிமிடம் ஊற வைத்து பின் குளிக்கலாம். இரவில் படுக்கும் போது வெந்தயத்தை தண்ணிரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசி வந்தால், நரை முடி மறையும்.

1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், வெள்ளை முடியை விரைவில் போக்கலாம்.

மாடிப்படிகள் எப்படி அமைக்க வேண்டும்


           வீடு.  கடை , பங்களா 
தொழிற்சாலை ,அலுவலகம் ,
தொழில்நிறுவனம் , ஆலயம் ,
விவசாயநிலகட்டிடம் ,அடுக்குமாடி குடியிருப்பு போன்றவைகளில் மேலே செல்ல படிகள் அமைக்கும் போது தென்கிழக்கு மற்றும் வடக்குமேற்கு திசைகளில் இருந்து தென்மேற்கு நோக்கி செல்லும் படி அமைப்பதே சிறந்தது .
 
     இதிலும் மாடியில் உள்ளே செல்வதற்கு கட்டிடங்களின் அமைப்பை பொருத்து வழி திறக்க வேண்டும் . இல்லை எனில் உள்ளே நுழையும் வழிக்கு ஏற்ற தீயபலனை கண்டிப்பாக தரும் .

     மேலும் வேறு திசைகளில் மாடிப்படிகள் அமைப்பது நல்ல பலன்களை தராது . இந்த மாடிப்படிகள் முழு வீட்டையும் கட்டுக்குள் கொண்டு வரும். இவை தவறும்பட்சத்தில் மிக தீமையான பலன்கள் ஏற்படும் . மாடிப்படிகள் தானே என கவனக்குறைவாக இருக்க கூடாது .

          

செவ்வாய்திசையின் பலன்கள்


       ஒருவருடைய ஜாதகத்தில் 
ஸ்ரீசெவ்வாய் பகவான் ஆட்சி ,
உச்சம் ,மூலத்திரிகோணம் ,நட்பு 
பெற்று திசை நடத்தினால் , ஜாதகரின் சகோதர சகோதரிஆதரவு கிடைக்கும் .வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும் .பதவி உயர்வு எதிர்பார்ப்பவருக்கு பதவி உயர்வு கிடைக்கும் . சொத்து சேர்க்கை ஏற்படும் .

           ஆனால் ஸ்ரீசெவ்வாய் பகவான் நீசம் ,பகை, மறைவு இடங்களில் இருந்து திசை நடத்தினால் பதவியில் இருப்பவர்களுக்கு பதவி இறக்கம் ஏற்படும் . செய்யாத குற்றதிற்கோ அல்லது எப்போதோ செய்த குற்றத்திற்கு இப்போது தண்டனை அனுபவிக்க வேண்டியது வரும். விபத்து ஏற்பட்டோ அல்லது கீழே விழுந்தோ அடிபட்டு காயம் ஏற்படும் .

         சகோதர-சகோதரிகள் இடையே பகை ஏற்படும் . பக்கத்து வீட்டாரிடம்  சண்டை சச்சரவு ஏற்படும் . போலீஸ் வழக்கு, கோர்ட் கேஸ்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும் . எதிரிகள் தொல்லை இருக்கும் .

               

அங்காள பரமேஸ்வரி

முதல் ஐந்து உற்பவங்களிலும் தனித்த சக்தியாகவே விளங்கிய சக்தி, தக்ஷனின் யாகத்தில் விழுந்து உயிரை விட்ட தாக்ஷாயணியாக அவதரித்தபோது ஈசனாகிய சிவனின் சக்தியான சிவசக்தியின் பஞ்சமுக தத்துவமாகிய கோபம், சினம், சீற்றம், ஆங்காரம், ஆவேசம் மிகக் கொண்டு சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம், தத்புருஷம், அகோரம் என்ற ஐந்து முகங்களாகவும் ஒன்று திரண்டு உருவமற்றுச் சுயம்புவாக உருவான அங்காளம்மன் ஆவாள். இவளே உருவமாக பருவதராஜன் என்ற ஹிமவானுக்கும், மேனைக்கும் புத்திரியாகப் பார்வதி என்ற பெயரில் அவதரித்தாள்

#பிரம்மஹத்தி_தோஷம்

சந்தோபி, சுந்தரன் என்ற இரண்டு அசுரர்களை அழிக்க ஐந்து தலைகளுடன் விளங்கிய பிரம்மன் நடத்திய வேள்வியில், திலோத்தமை என்ற தேவமங்கை தோன்றினாள். அவள் அழகில் மயங்கிய பிரம்மன் அவளைத் துரத்தினான். திலோத்தமை கயிலாயத்தில் அடைக்கலம் புகுந்தாள்.

அப்போது அங்கு வந்த அன்னை பார்வதி, ஐந்து தலைகளைக் கொண்ட பிரம்மனைச் சிவபெருமான் என எண்ணி வணங்கினாள். உடனே தன் தவறை உணர்ந்த பார்வதியின் வேண்டுகோளுக்கிணங்க, பிரம்மனின் ஆணவத்தை அழிக்க, விஷ்ணுவின் ஆலோசனைப்படி, பிரம்மனது ஒரு தலையை சிவபெருமான் கிள்ளி எடுத்தார். அந்தக் கபாலம் அவரது கையிலேயே ஒட்டிக் கொண்டது. இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. சிவனின் உருவமே பொலிவிழந்தது.

இதனை அறிந்த பிரம்மனின் மனைவியான சரஸ்வதி சிவனுக்கும் பார்வதிக்கும் சாபமிட்டாள்.
இதனால் சிவபெருமான் பிச்சை எடுக்கும் கோலத்தையும், அன்னை பார்வதி அலங்கோல பேய் வடிவத்தையும் பெற்றனர். சக்தியின் இந்த வடிவம் பேய்ச்சி என வணங்கப்படுகிறது.

இதையடுத்து விஷ்ணு, தன் தங்கை பார்வதியிடம், ‘கலங்காதே! நீ மலையரசன் பட்டிணத்தில் (மேல்மலையனூர்) பூங்காவனத்துப் புற்றில் பாம்பு வடிவில் இருக்கும்பொழுது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்’ என வழிகாட்டினார்.

அகோர உருவம் கொண்ட அன்னை பார்வதி நாடெல்லாம் அலைந்து திரிந்து திருவண்ணாமலை வந்து சேர்ந்தாள். அங்கிருந்த முனிவரின் ஆலோசனைப்படி, பிரம்ம தீர்த்தத்தில் நீராடி எழுந்த போது, அகோர உருவம் நீங்கி, மூதாட்டியின் வடிவம் கிடைத்தது.

அங்கிருந்து மலையனூர் வரும்போது, இரவாகி விட்டதால், தாயனூரில் உள்ள வட்டப் பாறையில் தங்கினாள். பின்னர் அங்கிருந்து வரும் வழியில் அன்னைக்கு தாகம் ஏற்பட, அங்கே கள் இறக்குபவனிடம் தாகம் தீர்க்கத் தண்ணீர் கேட்டாள். அதற்கு அவன் கொடுக்க மறுத்து விட்டான். அந்த அன்னையின் கோபத்தினால் இன்றும் அப்பகுதி ஏரியில் பனைமரங்கள் முளைப்பதில்லை.

மலையரசன் பட்டிணத்தில் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அன்னையின் தாகத்தை தீர்த்து வைத்தனர். அதனால் மனம் குளிர்ந்த அன்னை, அவர்களுக்கு எராளமான மீன்கள் கிடைக்குமாறு வரமளிக்க, அவர்களும் அவற்றை அன்னைக்குப் படையல் செய்தனர்.

அவளை வணங்கிய மீனவனுக்கு ‘நான் சரஸ்வதியின் சாபத்தால் இங்கிருக்கிறேன். எனக்கு நீங்கள் தினமும் பூஜை செய்யுங்கள். உங்களை நான் பாதுகாக்கின்றேன்’ என்று அருள்வாக்கு தந்தாள். (இக்கோயில் இன்றும் மீனவர் சமுதாயத்தவரே பூஜை செய்து வருகின்றனர்).

தொடர்ந்து அன்னை புற்று வடிவமெடுத்து, மேல்மலையனூர் அரண்மனையில் உள்ள பூங்காவனத்தில் ஐந்து தலை நாகமாக வாழ்ந்து வந்தாள்.

பூங்காவனத்தில் பெரிய புற்று இருப்பதைக் கண்டு, மலையரசன் அதனை இடிக்க ஆள் அனுப்பினான். அந்த ஆட்கள் அனைவரையும் அன்னை புற்றுக்குள் மறைத்தாள். மீண்டும் ஆள் அனுப்ப, அவர்களும் புற்றுக்குள் மறைந்தனர். இதைக் கண்டு அஞ்சிய மலையரசன், தன் தவறை உணர்ந்து புற்றை வணங்கி, நின்றபோது அன்னை காட்சி கொடுத்தாள்

#சிவன்சாபம்நீங்குதல்

ஒட்டிக்கொண்ட மண்டை ஓட்டில் அம்பிகையானவள் பிக்ஷை போட்டு அந்த பிக்ஷையை ஏற்கும்போது எந்த ஊரில் மண்டை ஓடு அகலுமோ அங்கே பிரம்மஹத்தி தோஷமும் நீங்கும் என்று புரிந்த ஈசன் ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு சுடுகாட்டுக்கும் சென்று கபாலத்தில் பிக்ஷை வாங்கிச் சுற்றி அலைந்து திரிந்து கடைசியாக இந்த தண்டகாரண்யம் என்னும் மேல் மலையனூருக்கு வந்தார்.

மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை. அங்காளியானவள் அன்று தன் பூரண வலுவோடும், பலத்தோடும் இருந்தாள். அப்போது உலகெங்கும் சுற்றி வந்த சிவன் அங்கே வந்து சேர்ந்தார்.

அச்சமயம் மலையனூர் வந்த சிவனின் குரல் கேட்ட பார்வதி, விஷ்ணுவை மனதில் நினைத்து தியானம் செய்தாள். விஷ்ணுவின் ஆலோசனைப்படி, விநாயகப் பெருமானைக் காவல் நிற்க செய்து விட்டு, அன்னபூரணி மூலம் சுவையான உணவைச் சமைத்து, அதை மூன்று கவளமாக்கினாள்.

அங்காளியம்மன் சூரையின் முதல் கவளத்தை பிரம்ம கபாலத்தில் இட, பிரம்மஹத்திக்கு உணவு கிடைக்க அது சாப்பிடுகிறது. இரண்டாவது கவளமும் கபாலத்திலேயே அன்னை இட்டாள். உணவின் சுவையில் மயங்கிய கபாலம் அதையும் ஆசை தீர உண்டது.
மூன்றாவது கவளத்தை வேண்டுமென்றே கீழே தவறவிட, சுவையில் மயங்கிய கபாலம் தரையிறங்கியது.  உடனே சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி சுயநிலையை அடைந்தார்.

சிவன் அங்கிருந்து தாண்டித் தாண்டி ஓடி, தாண்டேஸ்வரர் ஆக அந்த ஊரிலேயே அமர்ந்தார். அதன் பின்னரே அவர் அங்கிருந்து சிதம்பரம் சென்று ஸ்படிக லிங்கமாக அமர்ந்தார்.

பிரம்ம கபாலத்தினுள் புகுந்த பிரம்மாவின் பிரம்மஹத்தியானது சாப்பிட்டு முடிந்ததும் ஈசனைப் பற்றிக்கொள்ளவேண்டும் என்று நினைத்து விஸ்வரூபம் எடுத்துக்கொண்டு விண்ணில் பறக்க ஆயத்தமானது.

அங்காளி இதைக் கண்டு கோபம் கொண்டு அதற்கும் மேல் தானும் விஸ்வரூபம் எடுத்து பிரம்மாவின் கபாலத்தை பிரம்மஹத்தியோடு சேர்த்து அழுத்தித் தன் கால்களால் மிதித்தாள். அவள் கோபத்தைக் கண்டு மஹாவிஷ்ணு தலையை மிதித்த அங்காளியை அவ்வண்ணமே பூமிக்குள் தள்ளி மூடி மறைத்துவிட்டார். சற்று நேரத்தில் பூமிக்கு மேல் சுயம்புவாகப் புற்று உருவாகி அதில் ஒரு நாகமும் குடிகொண்டது.

இந்த நாகத்தின் படம் சுருங்காமலே பல யுகங்கள் இருந்ததாயும் கலி யுகத்திலே தேவர்கள் அனைவரும் தேர் உருவில் வந்து வணங்கவும் நாகத்தின் படம் சுருங்கி உள்ளே சென்று அங்காளம்மனாக அமர்ந்ததாகவும் வரலாறு கூறுகிறது.

அங்காள பரமேஸ்வரியின் கருணை செயலை கண்டு மகிழ்ந்த சிவபிரான் அங்காள பரமேஸ்வரிக்கு சிவலிங்கம் பரிசு அளித்தார். இந்த சிவலிங்கம் மூலம் நான் உன்னுடன் ௭ப்போதும் இருக்கிறேன் ௭ன்று கூறினர். ௮ம்மை சிவலிங்கத்தை நெற்றி வகிட்டில் வைத்துக்கொண்டார். (ஞான-கிரியா வடிவமாகிய சித் சக்தி).

இந்த ஐதீகத்தை நினைவுப்படுத்தும் வகையிலேயே மஹாசிவராத்திரி முடிந்த அமாவாசை அன்று அனைத்து ஊர் மயானங்களிலும் மயானக்கொல்லை உற்சவம் நடத்தப்படுகிறது. ஆவேசமும் கோபமும் கொண்டிருந்த அன்னையை சாந்தப்படுத்த, தேவர்களும் முனிவர்களும் தேரை உருவாக்கி அதில் அன்னையை அமரச்செய்து பவனி வரச் செய்தனர். இதனால் அன்னையின் கோபம் தணிந்து, மேல்மலையனூரிலேயே தங்கியிருந்து அருளாசி வழங்கி வருகின்றாள்.

எங்கு அநீதி நடந்தாலும் முதலில் அங்கு போய் நீதி கிடைக்கச் செய்வது அங்காள பரமேஸ்வரியின் குணம். அதனால்தான் பெரும்பாலும் அங்காளப் பரமேஸ்வரியின் ஆலயம் ஊரின் எல்லையிலேயே அமைந்திருக்கிறது

ஸ்ரீ ராமரின் முன்னோர்கள்

1. பிரம்மாவின் மகன் -மரீசீ
2. மரீசீயின் மகன்- கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான்
4. விவஸ்வானின் மகன்- மனு
5. மனுவின் மகன் -இஷ்வாகு
6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா
8. புரண்ஜயாவின் மகன் அணரன்யா
9. அணரன்யாவின் மகன் -ப்ருது
10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா
11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா
16. குவலஷ்வாவின் மகன் - த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா 
19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்
20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா
21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2
24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா
25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா
26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா
27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு
28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத்
29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2
30. அனரண்யாவின் மகன் - த்ரஷஸ்தஸ்வா
31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா 2
32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான்
33. வஸுமாவின் மகன்- த்ரிதன்வா
34. த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா
35. த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு
36. திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன்
37. ஹரிசந்திரனின் மகன் ரோஹிதாஷ்வா
38. ரோஹிதாஷ்வாவின் மகன் ஹரித்
39. ஹரித்தின் மகன் -சன்சு
40. சன்சுவின் மகன் -விஜய்
41. விஜயின் மகன் -ருருக்
42. ருருக்கின் மகன் -வ்ருகா
43. வ்ருகாவின் மகன் -பாஹு
44. பாஹுவின் மகன்- சாஹாரா
45. சாஹாராவின் மகன் -அசமஞ்சன்
46. அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன்
47. அன்ஷுமனின் மகன் -திலீபன்
48. திலீபனின் மகன்- பகீரதன்
49. பகீரதனின் மகன் -ஷ்ருத்
50. ஷ்ருத்தின் மகன் -நபக்
51. நபக்கின் மகன்- அம்பரீஷ்
52. அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப்
53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு
54. ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா
55. ஸ்ருது பர்ணாவின் மகன் சர்வகாமா
56. சர்வகாமாவின் மகன்- ஸுதஸ்
57. ஸூதஸின் மகன் -மித்ரஷா
58. மித்ராஷாவின் மகன்- சர்வகாமா 2
59. சர்வகாமாவின் மகன் அனன்ரண்யா3
60. அனன்ரண்யாவின் மகன் -நிக்னா
61. நிக்னாவின் மகன்- ரகு
62. ரகுவின் மகன் -துலிது
63. துலிதுவின் மகன் - கட்வாங் திலீபன்
64. கட்வாங் திலீபனின் மகன் - ரகு2
65. ரகுவின் மகன்  - அஜன்
66. அஜனின் மகன் - தசரதன்
67. தசரதனின் மகன்  
68. ஸ்ரீ ரகு ராமன்


யாருக்கு குரு (ஆசான் ) அமையாது


     ஒருவருடைய ஜாதகத்தில் குரு சனிபகவான் வீட்டில் இருந்தாலும் , 
குரு+சனி சேர்க்கை இருந்தாலும் , சனிபகவான் நட்சத்திரத்தில் குரு இருந்தாலும் , ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலும் , குரு ஏதாவது ஒருவகையில் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அந்த ஜாதகருக்கு முறையான குரு (ஆசான் ) அமையமாட்டார் அல்லது கிடைக்கமாட்டார் .

    இவர்களுக்கு அனுபவமே குருவாக அமையும் . இவர்கள் பல துறைகள் பற்றி தெரிந்து வைத்து இருப்பார்கள் . அல்லது அதில் அடிபட்டு சுய அனுபவம் பெற்று இருப்பார்கள்.

        இவர்களுக்கு ஏதாவது ஒரு சூழ்நிலையில் யாரிடமாவது கற்றுக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டாலும், அங்கும் குரு மற்றும் சீடன் நிலை நிலைக்காது. குரு ஜாதகரை ஒதுக்குவார் அல்லது ஜாதகர் குருவை ஒதுக்குவார் . இது ஒரு சாபக்கேடு அல்லது தோஷம் என சொல்லலாம் .

   இந்த ஜாதகர்கள் ஏகலைவன் போன்றவர்கள் . இவர்கள் குருவை மிஞ்சிய சிஷியர்கள் பட்டியலில் சேர்க்க படவேண்டியவர்கள். இவர்கள் மற்றவர்களுக்கு குருவாக இருந்து கற்றுத்தரும் வித்தை மேன்மை அடையும் . இவர் சொல் கேட்பர் நல்ல நிலை அடைவார். ஆனால் இவரால் முதன்மை நிலையை அடைய முடியாது.

   

மனம் தொடர்பான பிரச்சனைகள் யாருக்கு ஏற்படும் ?


    ஒருவருடைய ஜாதகத்தில் 5ம் பாவம் பாதிக்கப்பட்டாலும், 5ம் இடத்து அதிபதியும் 6ம் இடத்து அதிபதியும் சேர்ந்து இருந்தாலும் , இவர்களுக்கு இடையே  பார்வை ஏற்பட்டாலும், பரிவர்த்தனை பெற்று இருந்தாலும், 5ம் பாவத்தில் சனி , ராகு-கேது போன்ற பாவக்கிரகங்கள் இருந்தாலும் , பார்த்தாலும், தேய்பிறை சந்திரன் தொடர்பு பெற்றாலும்  , அந்த ஜாதகருக்கு ஞாபகமறதி , மனக்கலக்கம் , மனச்சிதறல் , தேவையில்லாத கற்பனை, பயம் , மனமாற்றம், ஹிஸ்டிரியா  போன்ற மனம் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கும் . 

      இந்த அமைப்பு, பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் ஜாதகங்களை ஆய்வு செய்து அதற்கான ஆன்மீக வழிபாட்டு பரிகாரங்களை செய்து கொள்ளலாம் .

             

தீய சக்திகளால் பாதிப்பும் மனகுழப்பமும் யாருக்கு ஏற்படும்?


   ஒருவருக்கு ரிசபம் , சிம்மம் , விருச்சகம் , கும்பம் ஆகிய ராசிகளில் ஒன்று லக்கனமாக அமைந்து, அதில் சனி + மாந்தி சேர்ந்து இருந்தாலும் அல்லது 6 8 12ம் இடங்களில் ராகு-கேது இருந்தாலும், அவருக்கு தீயசக்திகளால் பாதிப்பு இருக்கும் . மேலும் மனகலக்கம் மனஅழுத்தம் , மனக்குழப்பம் , புத்திமாற்றம் , மனமாற்றம், போன்ற பாதிப்புக்கள் இருக்கும் .
 
      அதேபோல இவர்களுக்கு பெண் தெய்வங்களின் அருளும் கிடைக்கும் .

         

தந்தைக்கு தொல்லை தரும் பிள்ளைகள்


  ஒரு தந்தையின் ராசி லக்னத்திற்கு  12ம் இடத்து அதிபதியின் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை அதாவது பிள்ளைகள் தந்தையின் பேச்சை கேட்காமல், அவர்கள் இஷ்டத்திற்கு நடந்து கொண்டு, ஏதாவது ஒரு வகையில் தந்தைக்கு தொல்லைகளை கொடுத்து கொண்டே இருப்பார்கள் .

      அந்த குழந்தைகள்  தந்தையை மதிக்காமல், தந்தை  சொல்படி கேட்டு நடக்காமல் ,ஊர் சுற்றி கொண்டு பிரச்சினை ,வம்பு ,வழக்கு ,அசிங்கம், அவமானம் , சண்டை சச்சரவு ,
போன்றவைகளை ஏற்படுத்தி, தந்தைக்கு  தொல்லைகளை தருவார்கள். அதாவது வீட்டுக்கு அடங்காத பிள்ளையாக இருப்பார்கள்.

         

Tuesday, August 18, 2020

மருத்துவம் தர்மம் _காந்தி

காந்திஜியைக் காண, 75 வயது மதிக்கத்தக்க, ஒரு வயதான, நோய்வாய்ப்பட்ட பெண்மணி வந்திருந்தார். அவரின் நிலையை அறிந்த காந்திஜி, தனது மருத்துவரிடம் அப்பெண்மணிக்கு, வேப்பிலையைக் கசக்கிப் பிழிந்து அச்சாரையும், மேற்கொண்டு குடிப்பதற்கு மோரும் கொடுக்குமாறு கூறினார்.

 உடனே மருத்துவர் அப்பெண்மணியை நோக்கி, தாங்களே மோர் எடுத்துக் குடிக்குமாறு கூறினார்.

    மறுநாள் காந்திஜி மருத்துவரிடம், நேற்று அப்பெண்மணி எவ்வளவு மோர் குடித்தார்? என்று கேட்டார். மருத்துவரால் பதில் கூற முடியவில்லை. அதனை அறிவதற்காக அவர், அப்பெண்மணியின் வீட்டிற்கு சென்றார். மருத்துவரிடம் அப்பெண்மணி, தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் தான் மோர் குடிக்கவில்லை என்று கூறினார்.

   காந்திஜி அனைத்து விஷயத்தையும் அறிந்து கொண்டு மனக்கவலை கொண்டார். மருத்துவரிடம், “வெளிநாட்டில் நீங்கள் என்ன படித்தீர்கள்? இப்பொழுது கூட நீங்கள் அப்பெண்மணிக்கு மோர் வாங்கி கொடுக்கவில்லை. நீங்கள் அக்கிராம மக்களிடமிருந்தாவது மோர் வாங் அப்பெண்மணிக்கு கொடுத்திருக்க வேண்டும்; அப்பெண்மணியின் அழுகையைப் போக்காமல் இங்கு வந்து என்ன பயன்?” என்றார்.

      பிறகு காந்திஜி, “மருத்துவம் என்பது தர்மம் நிறைந்த செயல் என்று வெறுமனே மருந்து எழுதிக் கொடுப்பதும், அளவைச் சொல்வதும் மட்டுமல்ல, நோயாளி குணமாகும் வரை அவரைப் பார்க்கும் பொறுப்பும் மருத்துவருடையதே" எனக் கூறினார்.

Monday, August 17, 2020

எதை விட்டு விடவேண்டும்..??

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?

இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக
அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.

அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான். இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இது தான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின்
வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது.

விளைவு... இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு. கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது.

சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள். ஆன்மிகம் என்ன சொல்கிறது தெரியுமா?

நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா? அப்படியானால் எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள். ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை எல்லாம் விட்டு விடுங்கள்! ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதைப் பற்றுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை.

நடு ஆற்றில் போராடிக் கொண்டிருக்கிறான். கரையில் நின்று கொண்டிருக்கிற நண்பர்கள் கத்துகிறார்கள்... ‘‘நண்பா... கம்பளி மூட்டையை இழுத்துக் கொண்டு உன்னால் வர முடியவில்லை என்றால் பரவாயில்லை... அதை விட்டுவிடு!’’

ஆற்றின் நடுவே இருந்து அவன் அலறுகிறான்: ‘‘நான் இதை எப்பவோ விட்டுட்டேன்... இப்ப இது தான் என்னை விட மாட்டேங்குது. ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்லே. கரடிக் குட்டி!’’

நம் வாழ்வில் எதை விட்டு விடவேண்டும் என்று தீர்மானித்து, தேவையுள்ளதை மட்டும் நம்முள் நிறுத்திக்கொண்டு தேவையற்றவைகளை களைந்து விட்டால் வாழ்வினில் என்றும் சுகமே..!!


முகுந்த மாலை

ஜிஹ்வே! கீர்த்தய கேஸவம் முரரிபும் சேதோ! பஜ ஸ்ரீ தரம்  
பாணிர்வந்த்வ! ஸமர்சயாச்யுதகதா: ஸ்ரோத்ரத்வய! த்வம்ஸ்ருணு  
க்ருஷ்ணம் லோகய லோசநத்வய! ஹரேர் கச்சாங்க்ரியுமாலயம்  
ஜிக்ர க்ராண!முகுந்த பாததுலஸீம் மூர்த்தந்! நமோதோக்ஷஜம்!!  
- குலசேகர ஆழ்வார்

பொருள் :

வாராய் நாக்கே! கேசவனை ஸ்தோத்திரம் செய்!  
நெஞ்சே! முராசுரனைக் கொன்ற கண்ணனைத் தியானம் செய்!  
கைகளே! திருமாலை ஆராதியுங்கள்!  
காதுகளே! தன்னையடைந்தவர்களை ஒருகாலும் நழுவ  
விடாதவனான கண்ணணுடைய கதைகளைக் கேளுங்கள்!  
கண்களே! கண்ணனைக் கண்டு அனுபவியுங்கள்!  
கால்களே! எம்பெருமான் திருக்கோயிலுக்குச் செல்லுங்கள்!  
மூக்கே! முகுந்தனுடைய திருவடிகளில் ஸமர்ப்பித்த துலஸியை நுகரு!  
தலையே! எம்பெருமானை வணங்கு !! .

முன்வினை பாவங்கள் நீக்கும் அஜ ஏகாதசி விரதம்

அஜா ஏகாதசி என்றும் அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிராரோ, அவர் அவரது பாவங்களின் கர்மவினைகளிலிருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. அஜா ஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள்படும். இந்த அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி, மகாபாரத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா விளக்கியுள்ளார். முன்னொரு காலத்தில், பகவான் ஸ்ரீராமர் தோன்றிய ரகு வம்சத்தில் அரிச்சந்திரன் என்றொரு அரசன் சத்தியம் தவறாது மாபெரும் வேந்தனாக அரசாண்டு வந்தான். அவனுக்கு சந்திரமதி என்ற மனைவியும், லோகிதாசன் என்ற மகனும் இருந்தனர். நாடும், அவனும் எந்த விதமான குறையும் இன்றி, சுபிட்சத்தோடு விளங்கியது.

அரிச்சந்திர மகாராஜா விதிவசத்தால், அரிச்சந்திர மகாராஜா தனது நாடு, நகரம் அனைத்தையும் இழக்க நேரிட்டதோடு, மனைவி, மக்களையும் விற்கும் மிகக் கொடிய நிலைக்கு தள்ளப்பட்டார். பக்திமானான அரிச்சந்திரனை நாய்களை உண்ணும் சண்டாள குலத்தவனுக்கு அடிமையாகி மயானத்தைக் காக்கும் பணியில் அமர வைத்தது விதி. ஆனால் அந்நிலையிலும் அரிச்சந்திர மகாராஜா தனது சுயத்தன்மையை இழக்காமல் சத்தியத்தினை கைவிடாது கடைபிடித்து வந்தார்.

முனிவரின் ஆலோசனை பல காலங்கள் கடந்தன. ஒரு நாள் அவர், நான் என்ன செய்வேன் ? இன்னும் எத்தனை காலம் இது போன்ற வேதனையில் வாடுவது, இதிலிருந்து மீள வழியே இல்லையா? என்று மிகவும் வருந்தினார். அப்போது அதிர்ஷ்டவசமாக, அவன் அந்த வழியாக சென்ற கௌதம முனிவரைக் கண்டு தனது நிலைமையை எடுத்துக் கூறி, இதிலிருந்து மீள வழி கூறுமாறு வேண்டினார்.  
ஏகாதசி விரதம் அரிச்சந்திரனின் சோகக் கதையைக் கேட்டு இரக்கம் கொண்ட முனிவர், அவருக்கு இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார். அரிச்சந்திரா !! உனது நல்ல காலம், இன்னும் ஏழு நாட்களில் பாவங்கள் அனைத்தையும் நீக்கி மிகவும் நற்பலன்களை அளிக்க வல்ல அஜா ஏகாதசி எனப்படும் அன்னதா ஏகாதசி வரவிருக்கிறது. இந்நாள் மிகவும் மங்களமானது.

கண்விழித்து விரதம் இந்நாளில், நீ இருக்கும் இந்த நிலையில் உன்னால் மற்ற அனுஷ்டானங்களைக் கடைபிடிக்க முடியாவிட்டாலும், உபவாசத்தை மட்டுமாவது ஏற்று, அன்று இரவு கண் விழித்து இறைவன் ஸ்ரீஹரியின் திருநாமத்தை உச்சரித்து கொண்டிரு ... இதன் காரணமாக உனது முற்பிறவி பாவங்களில் இருந்து விடுதலை பெற்று நன்னிலையை அடைவாய் எனக் கூறினார்.

ராஜ்ஜியத்தை அடைந்த அரிச்சந்திரன் அரிச்சந்திரன், கௌதம முனிவரின் வழிகாட்டுதலின் படி, அஜா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து அவனது பாவங்கள் அனைத்தும் நீங்கி, மீண்டும் நாடு நகரத்தினைப் பெற்று நன்னிலையை அடைந்தான். மேலும் இந்த விரதத்தின் பலனால் மாயையின் காரணத்தால் உயிரிழந்த மகனை மீண்டும் அடைந்ததோடு, மனைவியுடன் ஒன்று சேர்ந்து மீண்டும் ராஜ்ஜியத்தினை அடைந்தார் என்று ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்குக் கூறி முடித்தார்.

அஜா ஏகாதசியின் சிறப்புகள் அதோடு அவர் யுதிஷ்டிரனிடம், ஓ பாண்டு புத்ரா !! நீயும் இப்போது இந்த அஜா ஏகாதசியின் சிறப்புகளை அறிந்து கொள் !! எனக் கூறத் தொடங்கினார். இந்நாளில் மேற்கொள்ளும் விரதம் நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களின் விளைவால் இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களை உடனடியாக நீக்க வல்லது. இதனால் அவர்கள் அனைவரும் இறுதியில் பக்தி லோகத்தை அடைவர் என்று கூறினார்.

அஸ்வமேத யாகம் செய்த பலன் எவரொருவர், இந்நாளில் இந்த விரதத்தின் மகிமையை விவரிக்கும் இந்தக் கதையினை கேட்கிறாரோ அல்லது படிக்கிறாரோ அல்லது சொல்கிறாரோ அவர் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார் என ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறி முடித்தார் என்று பிரம்ம வைவர்த்த புராணம் விவரிக்கின்றது.


விஷ்ணுபதி புண்ய காலம்


வாழ்வில் வளம் சேர்க்கும், சௌபாக்ய - ஸ்ரீ விஷ்ணுபதி புண்ய காலம்.

வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதங்களின் முதல் நாள் விஷ்ணுபதி புண்ணிய காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இவை பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை.

கடுமையான கஷ்டமா? 
கொடுமையான வாழ்க்கையா? 
பெரும் நஷ்டம், கடனா?
வழிபடுங்கள் விஷ்ணு பதி புண்ய காலத்தில்...

பெருமாள் கோவிலுக்கு சென்று கொடி மர நமஸ்காரம் செய்து 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு 27 முறை பிரகார வலம் வாருங்கள்...

ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடிமரத்திற்கு முன் வையுங்கள்...

27 சுற்று முடித்த பின்பு மீண்டும் கொடிமர நமஸ்காரம் செய்யுங்கள்...

பின்பு தாயாரையும் பெருமாளையும் வழிபட்டு தங்களின் பிராத்தனைகளை மனமுருகி சொல்லுங்கள்...

தங்களின் நியாமான கோரிக்கை எதுவானாலும் அடுத்த மூன்று விஷ்ணுபதி காலம் முடிவடைவதற்குள் நிறைவேறியே தீரும்...

மாசி, வைகாசி, ஆவணி, கார்த்திகை ஆகியவை மஹாவிஷ்ணுவுக்கு உரியவை...விஷ்ணுவுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் விஷ்ணுபதி புண்ய காலம்...

அன்றைய தினத்தில் அதிகாலை 1:30 மணி முதல் 
காலை 10:30 மணி வரை இந்த புண்ய கால நேரம் வருகிறது. 
முழுமையாக 9மணி நேரம் இந்த புண்ய காலம் அமைகிறது.

பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியை மஹாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது. ஏகாதசி அன்று ஒருவன் புரியும் பூஜைகளும், அனுஷ்டிக்கும் விரதமுறையும் அனைத்திலும் சிறந்த பலன் தருவதாகவும் கூறுவர்...

ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர வல்லது விஷ்ணுபதி புண்யகாலம் ஆகும். மஹாவிஷ்ணுவின் அருளும், கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் துலங்கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்து உள்ளது...

விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக சங்கு சக்ரதாரியாகப் பெருமாள் இருக்கும் ஆலயங்களுக் குச் சென்று பெருமாளை வழிபட வேண்டியது அவசியம்.

இந்த புண்ய காலத்தில்  மஹாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும் மனதார வழிபாட்டு நமது எல்லாதேவைகளையும், வேண்டுதல்களையும் கூறி பிரார்த்தனை புரியலாம்.

அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு சென்று வழிபடலாம்.வீடுகளில் விளக்கேற்றி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் மிகுதியான பலன்களைக் கொடுக்கும். மகாலக்ஷ்மி பூஜை,துளசி பூஜை, கோ பூஜை மற்றும் ஸ்ரீதேவிக்கு ப்ரீத்தியைத் தரக்கூடிய காரியங்களை எல்லாம் சக்திக்கு தகுந்தவாறு செய்யலாம்...

அதே போன்று அன்றைய தினத்திலே, விரத நாட்களில் செய்யக்கூடாத செயல்களைத் தவிர்ப்பது நன்று...

ஒருவர் ஒரு முறை இந்த விஷ்ணுபதி புண்ய கால விரதத்தை அனுஷ்டிப்பது, பல ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பதற்கு சமம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன...

இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் உலக ஆதாயமான தேவைகளையும் மகிழ்ச்சியான மற்றும் செல்வ செழிப்பு மிக்க வளமான வாழ்வினையும் பெற முடியும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

மேலும் நமது அக வளர்ச்சி, ஆனந்தம், ஆன்மிக முன்னேற்றம், மன அமைதி மற்றும் மோக்ஷத்தையும் தர வல்லது இந்த புண்ய காலம் ஆகும்...

ஓம் நமோ நாராயணா !

Monday, August 10, 2020

அருள்மிகு மல்லிகார்ஜூனேசுவரர் திருக்கோயில், தகட்டூர், தர்மபுரி

சூலினி ராஜ துர்க்காம்பிகை சுயரூப காட்சி :
 அருள் தரும் சூலினி ராஜ துர்க்காம்பிகை சூலம், சங்கு ஏந்தி கொற்றவையாக மகிஷனை வதம் செய்யும் தோற்றத்தில் காட்சி தருகிறாள். இவள் எருமைத் தலையும் மனித உடலும் கொண்டு கத்தி, கேடயம் ஏந்தி, மகிஷன் கீழே வீழ்ந்துள்ள காட்சியும், அம்பிகை சூலினி இடது கரத்தால் மகிஷன் கொம்பை பற்றியும், இடது பாதத்தால் கழுத்தின் மீது மிதித்தும் சம்காரத்தில் அருள்புரியும் திருக்காட்சி மூலஸ்தான கருவறையில் கிழக்கு நோக்கி தமிழகத்தில் இத்தலத்தில் மட்டுமே காணமுடியும்.

 ராகுவைப் போல கொடுப்பாரில்லை எனும் முது மொழிப்படி ராகு கிரக அதிதேவதை ஸ்ரீ துர்க்கையை ஸ்ரீ தர்மர் முதலானோர் வழிபட்டு, இழந்த நாடு முதல் அனைத்தையும் பெற்றுள்ளார். ரத்னத்ரயம் எனும் வகையில் மூவகை சூலங்களுடன் காரண, காரணி, அதற்கான பலன் எனும் மூவகை பயன்களை அருளும் ஸ்ரீ சூலினியை முழுவதும் சந்தனக் காப்பு தோற்றத்தில் வருடத்தில் ஆடி 3 ம் செவ்வாய்க்கிழமை மதியம் 4.15 முதல் இரவு 9.15 வரை மட்டுமே தரிசிக்க முடியும். வார நாட்களில் பிரதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 5.30 வரையும் 5.30 முதல் 6 .00 மணி வரையிலும் கால பைரவர், ஸ்ரீ சூலினி வழிபாடு சிறப்புடன் நடைபெறுகிறது.

ஸ்ரீ கால பைரவர் :
 பைரவர் இத்திருத்தலத்தில் யந்திர வடிவில் சூரிய சந்திரன் அக்னி ஜூவாலையுடன் அருள்பாலிக்கிறார். சங்ககால மன்னரான அதியமான் நெடுமான் அஞ்சி முதல் பல பேரரசர்களால் இம் மகாபைரவர் வழிபாடு செய்யப்பட்ட மந்திர மூர்த்தி இவராவார்.

வணங்குவதால் ஏற்படும் பலன்கள் :
 பைரவர் என்ற பதத்திற்கு பயத்தை போக்குபவர் என்றும் பயத்தை அளிப்பவர் என்றும் பொருள்.

 பிரபஞ்சத்தில் உள்ள சகல ஜீவராசிகளும் வான மண்டலத்தில் உள்ள சூரியன் முதலான கிரகங்களும் நட்சத்திரங்களும் கால சக்கரத்தின் ஆளுகைக்குட்பட்டதே. காலச் சக்கரத்தை இயக்கும் பரம்பொருள் காலபைரவர் ஆவர். காலத்தின் கட்டுப்பாட்டையும் மீறி பக்தர்களுக்கு நன்மை செய்பவரும் இவரே. தஞ்சம் என்று வரும் பக்தர்களை எந்த அபாயத்திலிருந்தும் காத்து ரட்சிப்பவர். நிரபராதிகளுக்கு அபயம் அளித்து எதிரிகளை தூள் தூளாக்குபவர்.

 திருமணத் தடைகளை நீக்குபவர். சந்தான பாக்கியத்தை அருள்வார். பொருள் தந்து வறுமையை போக்குவார். இழந்த வழக்குகளில் வெற்றிபெறச் செய்வார். இவரது கருணையால் வியாபாரம் விருத்தியாகி அபரிமிதமான லாபம் கிடைக்கும். பங்குதாரர்களுக்குள் ஒற்றுமை நிலவும். ஏழரையாண்டு சனி, அட்டமத்து சனி, இதர கிரகங்களால் ஏற்படும் தொல்லைகளை அடியோடு அகற்றுவார். பைரவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி திதிகளில் சிறப்பு வழிபாடும் வளர்பிறை அஷ்டமி திதி, பிரதி சனி, ஞாயிறு நாட்களில் மாலை 5.30 முதல் 7.30 வரை வழிபாடும் நடைபெறும்.

 வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி சங்க காலத்தில் அவ்வைக்கு நெல்லிக்கனி வழங்கிய வரலாற்றுப் புகழ் பெற்ற தகடூர் தலம் இது. தகடூர் சுயம்பு லிங்க தலம் ஆகும். திருமாலின் நான்கு அவதாரங்களான யோக நரசிம்மர், ராமர், ஹயக்ரீவர், கிருஷ்ணர் ஆகியோரால் வழிபட்ட தலம். ஆதியில் பாணாசுரனால் ஸ்தாபிக்கப்பட்ட தலம் இது.

 சுந்தரர், சம்பந்தர், அவ்வை, அரிசில் கிழார், பொன்முடியார், பரணர், கபிலர், நாகையார், அதியன், விண்ணத்தனார் முதலிய புலவர்களால் பாடி பணியப்பட்ட திருத்தலம். 9 ம் நு}ற்றாண்டிலே திருப்பணிகள் செய்யப்பட்ட கோயில். ராமன் தவமிருந்த இடம் இத்திருத்தலம். ஆறுமுகர் எட்டு திக்கை பார்க்கும் வகையில் ஆறுமுகங்களுடனும் ஐயப்பனைப் போல குந்தலம் இட்டு காட்சி தருகிறார். பாதத்தை ஒரு நாகம் தாங்குகிறது. மயில் அலகில் ஒரு நாகத்தைக் கொண்டுள்ளது. இத்தகைய கோலத்தில் சண்முகரை நாம் தரிசிக்கும் தலம்.

 இங்குள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. தங்கக் கவசமும் சாத்தப்படுகிறது. இந்த வழிபாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு சகலமும் அருள்கிறார், சக்கர பைரவர்.

சிறப்பம்சங்கள் :
இங்கு சிவன் சயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தாய்மையின் சிறப்பை உயர்த்திச் சொல்லும் வகையில் காமாட்சி அம்பாளின் சன்னதி சுவாமியின் சன்னதியை விட உயரமாக இருக்கிறது.
இரண்டரை டன் எடையுள்ள வியன்மிகு தொங்கும் தூண்கள் இரண்டைப் பெற்றிருக்கும் சிவத்தலம் இது.

Friday, July 31, 2020

ஆத்திரம்

ஒரு கிராமத்தில் ஒருவன் அழகிய புள்ளிமான் ஒன்றை தன் வீட்டில் வளர்த்து வந்தான். ஒரு நாள், அந்த மான் காணாமல் போய்விட்டது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மனிதர், அந்த மானை பிடித்துப் போயிருப்பவனை பழிவாங்கத் துடித்தான். கடவுளிடம் முறையிட்டான். கடவுளும் வந்தார்.

கடவுளிடம் அந்த மனிதர், தான் ஆசையாய் வளர்த்த மானை தாருங்கள் என்று தானே கேட்டிருக்க வேண்டும்? ஆனால் அவ்வாறு கேட்கவில்லை.மாறாக, ஆத்திரத்தில், "நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மானை திருடியவன் யாராக இருந்தாலும் அவனை என் முன் நிறுத்த வேண்டும்" என்று கேட்டான்.

அதற்கு கடவுள், "பக்தா! மானை நான் உனக்குத் திருப்பித் தருகிறேன். ஆனால், மான் காணாமல் போனதற்கு காரணமானவர்கள் யார் என்று கேட்காதே" என்றார்.

"கடவுளே! நான் மிகுந்த கோபத்தில் உள்ளேன். மானை திருடியவனை பழிவாங்காமல் விட மாட்டேன். எனவே, திருடியவனை இங்கு வரவழைக்க வேண்டும்" என்று பிடிவாதமாக கேட்டான்.

இதனைக் கேட்ட கடவுள், "சரி. நீ கேட்கின்ற வரத்தை தருகிறேன். ஆனால், பின்னால் வருத்தப்படக் கூடாது" என்றார். அந்த மனிதரும் சரி என்றார்.

"தந்தேன் நீ கேட்ட வரத்தை. இந்த மானை திருடிச் சென்றவர் உன் பின்னால் நிற்கிறார்", என்று பக்தனிடம் கூறினார் கடவுள்.

உடனே பக்தன் திரும்பிப் பார்த்தான். மிகப் பெரிய சிங்கம் நின்று கொண்டிருந்தது.

சிங்கத்தைப் பார்த்தவுடன், பழிவாங்கும் கோபம் மறைந்து, பயம் கவ்விக் கொண்டது. "அய்யோ கடவுளே காப்பாற்று!" என்று அலறியடித்துக் கொண்டு ஓடினார் பக்தர்.

நம்மில் பலருக்கு ஆத்திரத்தில் அறிவும் – புத்தியும்  வேலை செய்வதில்லை. ஆத்திரம் பெரும்பாலும்  அழிவைத் தருகிறது.

*ஆத்திரம் , கோபம்  தவிர்த்து அன்புடனும், அமைதியுடனும் வாழ்ந்திட*
இந்த நாள் இனிய நாளே....
இனிய  மாலை வணக்கம்

Thursday, July 30, 2020

பசுபதேஸ்வரர் திருக்கோவில்

ராமாயண, மகாபாரதக் காலத்திற்கு முன்பே புகழ்பெற்ற நகரம் காசி. இத்தகைய பெருமை வாய்ந்த காசிக்கு நிகராக அதே பெயரில் விளங்குகிறது பசுபதேஸ்வரர் ஆலயம். காசிக்கு நிகரான பசுபதேஸ்வரர் கோவில் திருநெல்வேலி

பெயர் காரணம் 

ராமாயண, மகாபாரதக் காலத்திற்கு முன்பே புகழ்பெற்ற நகரம் காசி. சிவபெருமான் ஆனந்தத்துடன் தங்கியிருக்கும் தலம் எனபதால் காசி நகருக்கு ‘"#ஆனந்தவனம்’ என்னும் பெயரும் உண்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காசி நகரம் ஆன்மிகத்தில் சிறந்து விளங்கியுள்ளது. ‘அறிவு தரத்தக்க ஒளி பொருந்திய நகரம்’ என்னும் பொருளில் காசி நகரம் பற்றி ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஸ்கந்த புராணத்தின் ஒரு சுலோகத்தில் ‘மூவுலகும் என் ஒரு நகரான காசிக்கு இணையாகாது’ என காசியின் பெருமையை ஈசன் கூறியுள்ளார். பண்டைய காலங்களில் கல்விக் கூடங்கள் பல அமைத்து, கல்வியிற் சிறந்த நகரமாக காசி விளங்கி இருக்கிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த காசிக்கு நிகராக அதே பெயரில் விளங்குகிறது #பசுபதேஸ்வரர்ஆலயம். இது திருநெல்வேலி மாவட்டத்தில் திருமலாபுரம் என்ற ஊரில் உள்ள ஒரு குடவரைக் கோவிலாகும். இப்பகுதியில் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்திய நுண்ணியக் கருவிகளைத் தொல்லியல்துறை கண்டு பிடித்து பாதுகாத்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை நகரை அடுத்துள்ள சேர்ந்தமரம் என்னும் ஊருக்கு மேற்கே, மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர் திருமலாபுரம். இவ்வூரில் புராண காலத்தோடு தொடர்புடைய நீண்ட நெடிய கிழக்கு நோக்கிய மலைத்தொடர் ஒன்று உள்ளது. இந்த மலை புராண காலத்தில் ‘#வருணாச்சிமலை’ என்றும், இப்பகுதியில் அமைந்திருந்த ஊர் ‘#வாரணாசிபுரம்’ என்றும், ‘#வருணாச்சிபுரம்’ என்றும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்த மலைத்தொடர் ‘#சர்வேஸ்வரன்மலை’ எனவும், இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசன் பெயர் ‘#பசுபதேஸ்வரர்’ எனவும் வழங்கப்படுகிறது. சிவபெருமானின் வழித்தோன்றல்களான பாண்டிய வம்ச மன்னர்கள், தங்கள் நாயகனின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக சுமார் 1,300 ஆண்டுகளுக்கு சர்வேஸ்வரன் மலைத்தொடரின் இருபுறமும் இரு குடவரைக் கோவில்களை உருவாக்கினர். கிழக்கு - மேற்காக நீண்டிருக்கும் சர்வேஸ்வரன் மலைத் தொடரின் வடக்குப் பகுதியிலுள்ள குடவரைக் கோவில் முழுமை பெற்றுள்ளது. தென்பகுதியில் உள்ள குடவரை முழுமை பெறவில்லை.

திருதலத்தின் சிறப்புகள் 

வடக்குப் பகுதியில், வடக்குப் பார்த்து அமைந்த முழுமைப்பெற்ற குடவரைக் கோவில், கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சுமார் 19 அடி நீளம், 12 அடி அகலம் கொண்ட செவ்வக வடிவ அர்த்த மண்டபம் உள்ள இக்குடவரையில், கருவறை எட்டு சதுர அடியில் அமைந்துள்ளது. காசியிலுள்ள கருவறை போன்றே சிவலிங்கத்தை வலம் வந்து அர்ச்சகர் பூஜைசெய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

தரைமட்டத்தில் இருந்து சுமார் ஐந்தடி உயரத்தில் உள்ள இக்கோவிலுக்குள் ஏறிச் செல்வதற்கு மேற்குப் பகுதியில் இருந்தும், கிழக்குப் பகுதியில் இருந்தும் பாறைக் கற்களால் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. மழைநீர் குடவரையின் உள்ளே புகாவண்ணம் குடவரையின் மேலே, பாறையில் புருவம் போன்ற காடி வெட்டப்பட்டுள்ளது
குடவரையில் மூன்று நுழைவு வாசல்கள் உள்ளன. நுழைவு வாசலில் காணப்படும் தூண்களின் மீது அழகிய பூ வேலைப்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாசல்களுக்கு நேரே உள்ளே முன்மண்டபத்தில் நடராஜர், பெருமாள், விநாயகர் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அதிலுள்ள சிவபெருமான் ஆடல் நிகழ்த்த, அவரது இருபுறமும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு பூதங்கள் நிற்கின்றன. வலப்புற பூதத்தின் உடல் பெரு மளவு சிதைந்துள்ளது. கால்கள் மட்டும் எஞ்சியுள்ளன. நின்ற கோலத்தில் காணப்படும் இடப்பூதம் கரண்ட மகுடம் அணிந்து, செவிகளில் பனை ஓலைச் சுருள்களுடன் காட்சியளிக்கிறது. இடக்கையில் ஏந்தி, இடது தோளில் சாத்தியிருக்கும் நரம்பிசைக்கருவியை வலக்கைக் கோலால் இயக்கும் இப்பூதம் இறைவனைத் தலை உயர்த்திப் பார்த்தவாறு பூரித்து நிற்கிறது.

குடவரை கோவில் அமைந்த மலை

தமிழ்நாட்டில் எத்தனையோ குடவரை இருந்தாலும், ‘சிரட்டைக் கின்னரி’ (பழமையான வில்லிசைக் கருவி) இடம் பெற்றுள்ள ஒரே குடவரைக் கோவில், பசுபதேஸ்வரர் ஆலயம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

நின்ற திருக்கோலத்தில் மகாவிஷ்ணு சங்கு, சக்கர தாரியாய் நான்கு திருக்கரங்களுடன் இங்கு வீற்றிருக்கிறார். அருகே அமர்ந்த நிலையில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். பல்லவர் காலத்தை ஒட்டிய கோவில் என்பதால், பல்லவர் குகைக்கோவில்களில் காணப்பெறாத, சிறப்புமிக்க விநாயகர் புடைப்புச் சிற்பம் இங்குள்ளது. கருவறைக்கு நேர் எதிரில் கிழக்கு உட்பகுதி பாறைச்சுவற்றில், நின்ற நிலையில் பிரம்மா மூன்று சிரசு, நான்கு கரங்களுடன் காணப் படுகிறார்.

நுழைவு வாசலில் உள்ள கனமான தூண்கள், விரிந்த தாமரைப் பதக்கங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தரங்கப் பொதிகைகள் (தோரணம் போன்ற அமைப்பு) நுழைவு வாசலுக்கு மேன்மேலும் அழகு சேர்க்கின்றன. முன்மண்டப விதானத்தில் பழங்கால ஓவியங்களின் (அன்னம், தாமரை மலர், வேட்டுவேர், சிம்மாசனம்) வண்ண எச்சங்கள் சிதைந்த நிலையில் உள்ளன.

முன்மண்டபத்திலிருந்து சுமார் 2 அடி உயரத்தில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. கருவறை வாசலில் இருபுறமும் துவார பாலகர்கள் உள்ளனர். கருவறையில் பாறையில் வடிக்கப்பட்ட ஒற்றைக் கற்பீடத்தில் பசுபதேஸ்வரர் அழகாகக் காட்சி தருகிறார். குடவரைக் கோவில் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே முறையான அபிஷேக, ஆராதனை சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன என்பதை சிவலிங்கம் உணர்த்துகிறது.

காலத்தால் பழையதும், கீர்த்தியால் செழுமை பெற்றதும், மனித உயிர்களை மெய் மறக்கச் செய்து, வேண்டுவன தந்து உலகம் உய்யக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார், பசுபதேஸ்வரர் இவருக்கான நித்யபூஜை சிறப்புடன் நிகழ்வுற, வல்லவ தேவன் என்ற பாண்டிய மன்னன் மலைப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குளங்களை தானமாக வழங்கியுள்ளான். இத்தகவல் குகைக்கோவில் இடது தூண் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு மன்னர்களின் 2 கல்வெட்டுகள் உள்ளன.

வழிபாடு 

சுயம்புலிங்கம்போல் குடவரையில் உள்ள சிவலிங்கத்துக்கும் அதீத ஆற்றல் உண்டு என்பதால், பிரதோஷ வழிபாட்டில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்கின்றனர். மேலும் பவுர்ணமிதோறும் நடைபெறும் கிரிவலத்திலும் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள். திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி தினங்களில் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்து மகிழ்கின்றனர். திருக்கார்த்திகை தினமான இன்று (23-11-2018) வெள்ளிக்கிழமை காலையில் உலக நலன், உலக ஒற்றுமை, உலக நல்வாழ்வு, உலக ஆரோக்கியம் கருதி ‘மகா ருத்ர யாகம்’ நடைபெறுகிறது.

பசுபதேஸ்வரரை வழிபடுவோருக்கு எல்லா விதமான தோஷங்கள், சாபங்கள் நீங்கி, சகல யோகங்களும் ஏற்படுவதால், இப்பகுதி மக்கள் ஈசனை ‘சர்வேஸ்வரன்’ எனவும் அழைக்கின்றனர். திருமணம், வாரிசு ஆகிய பிரார்த்தனைக்காகவும், சிறந்த கல்வி, உயர்பதவி பெறவும் வேண்டிப் பயன்பெறுகின்றனர். மழை பொழியவும், மன பயம் அகலவும் இங்கு வேண்டியதும் கைமேல் பலன் கிட்டுகிறது என்பது ஐதீகம்.

மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் (பனை) ஆகிய நான்கு அம்சங்களைக் கொண்டுள்ளது இக்குடவரைக் கோவில். சாலையில் இருந்து கோவில் வரை செல்லும் மண்பாதையின் இருபுறமும் தல விருட்சமான பனை மரம் அணிவகுத்து நிற்பது கொள்ளை அழகு!

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

துன்பங்களைப் போக்கி, இன்பங்களைத் தந்து, நிறைவில் முக்தியைத் தரவல்ல சர்வேஸ்வரனாம் பசுபதேஸ்வரரை, வாழ்வில் ஒருமுறையாவது தரிசனம் செய்ய வாருங்கள்!

அமைவிடம்

சங்கரன்கோவிலில் இருந்து 15 கி.மீ. தொலைவில் சேர்ந்தமரம் என்னும் ஊர் உள்ளது. இங்கிருந்து மேற்குத் திசையில் 3 கி.மீ. தூரத்தில் பசுபதேஸ்வரர் குடவரைக் கோவில் அமைந்துள்ளது. கடையநல்லூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் சுரண்டை செல்லும் வழியில் இவ்வாலயம் இருக்கிறது. திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம், வீ.கே.புதூர், சுரண்டை, சேர்ந்தமரம் வழியாக 60 கி.மீ. பயணித்தும் இக்கோவிலுக்கு வரலாம்.

ஓம் சிவாய நம 
சர்வம் சிவமயம் 
எங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும் 
அனைவருக்கும் சிவனருள் கிடைக்கட்டும் 

                

Wednesday, July 29, 2020

புருஷ சூக்தத்திரம்

பிறப்பால். அனைவரும் சமம் என்று உலகின் மூத்த மற்றும் முன்னோடி வேதமான ரிக்வேதம் சொல்கிறது

இப்படி சொல்வது இந்து மதம் புருஷ சூத்திரத்தில் வரும் ஒரு செய்யுள். சரியான அர்த்தம் தெரியாமல் ஒரு பிதற்றல் பலரால் சொல்ல படுகிறது

பிராமணன்
தலையில் பிறந்தான்;
சத்திரியன் தோளில் பிறந்தான்;
வைஷியன் தொடையில் பிறந்தான்;
சூத்திரன் பாதத்தில் பிறந்தான் என்று!

இப்படித்தான் சமஸ்கிருதம் தெரியாத நாத்திகர்கள் வேதங்களை தூற்றுகின்றனர் பொய்யை பல முறை அதை உண்மை போல் உளருகிர்கள்.

ஆனால் உண்மை என்ன?

புருஷ சூக்த்தத்தில் வரும் ஸ்லோகம் இதுதான்:‘

"பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத:
ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:,பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத"

என்று புருஷ சூக்தத்திலும் உள்ளது.இந்த வரிகளுக்கு அர்த்தம் யாதெனில்,

பிராமனணுக்கு முகமே பலம்.

வேதம் ஓதும் பிராமணன் முகலட்சணத்தோடு விளங்கவேண்டும்.மேலும் வாயால் நல்லாசி வழங்கவும்.நல் உபதேசம் செய்யவும்,நல் மந்திரம் உச்சாடனம் செய்யவும் முகமே துணை.எனவே பிராமணணுக்கு முகபலம் தேவை. (பிராமணன் முகத்தில் பிறந்தான் என்பது தவறு.)

சத்திரியனுக்கு தோள் பலம் தேவை.

சத்திரியன் வாள் கொண்டு எதிரிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றவும்,பாதுகாக்கவும்.வறியவர்களுக்கு கொடை அளித்து ஆதரிக்கவும் தோள் பலம் கொண்ட கரங்கள் தேவை. ( ஷத்திரியன் தோளில் பிறந்தான் என்பது தவறு.)

வைசியன் உட்கார்ந்த நிலையில் வியாபாரம் செய்பவன்.எனவே வியாபாரம் செய்யவும்,கணக்கு வழக்குகளை பார்க்கவும் வைசியனுக்கு தொடை பலம்மிக்கதாக விளங்க வேண்டும்.( வைசியன் இடுப்பில் பிறந்தான் என்பது தவறு.)

சூத்திரன் உழவு செய்பவன்.உழவு செய்பவனுக்கு கால் பலம் தேவை. கால்கள் பலமாக இருந்தால் தான் பயிரிடவும் விவசாயத்தை பராமரிக்கவும் முடியும்.(சூத்திரன் காலில் பிறந்தான் என்பது தவறு.)

மேலே குறிப்பிட்ட ரிக் வேதத்தின் புருஷ சூக்த்தத்தில் ஜாதி என்பதே எங்குமே வரவில்லை! என்பதே உண்மை.

இதில் பிறப்பு என்ற சொல் எங்கே வந்தது?பிறப்பினால் யாரும் எதையும் அடையமுடியாது.

மேலே குறிப்பிட்ட ஸ்லோகத்தில் பிறப்பு என்ற வார்த்தை எங்கே வந்தது? 

வாய்க்கு வந்தார் போல் அர்த்தம் புகட்டிவிட்டு முட்டாள் மாணவனாக இருந்து விட்டு ஆசிரியரை குறை சொல்லி என்ன பயன்.

பிறப்பால் வர்ணங்கள் இல்லை – மனு தர்மம்:

பிறப்பால் வர்ணங்கள் இல்லை என்பதை இவர்கள் விமர்சிக்கும் மனு தர்மம் சொல்கிறது. அதற்கான ஸ்லோகம்,

“ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே”

அதாவது பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே,

தொழிலினால்தான் இரு பிறப்பாளராகின் றனர் (துவீஜம்).

இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது.
இங்கே தான் பிறப்பு என்ற சொல் வருகிறது:

ஜன்மனா – பிறப்பால்;

ஜாயதே – பிறந்த அனைவரும்;

சூத்ர – சூத்திரரே;

கர்மணா – தான் மேற்கொண்ட பணிக்குட்பட்டு; த்விஜ – இருபிறப்பாளனாக;

ஜாயதே – பிறப்பாளன் ஆகிறான். 

செய்யும் தொழில் தான் ஒருவரை அடையாளம் காண்கிறது. பிறப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்

இதையே திருவள்ளுவர் 
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

பொருள்:  எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் வேறுபாடுகளால் சிறப்பியல்பு (குணம்/character/வர்ணம்) ஒத்திருப்பதில்லை.

இரண்டு வரிகளுள்ள திருக்குறளையே சரியாகப் படித்து, பொருள் கூற இயலாதவர்கள், சமஸ்கிருதச் சுலோகங்களுக்குத் தங்கள் விருப்பப்படி, பொருள் கூறி, தானும் குழம்பிப் பிறரையும் குழப்புகின்றனர்

நாத்திகவாதிகளால்காலம் காலமாக திரித்து சொல்லிவருவது நினைவில் கொள்க...

உண்மைகளை எளிதில் மறைத்துவிட முடியாது.

- Ramachandran Krishnamurthy

Sunday, July 26, 2020

தியான் சந்த் சிங்

நமது தேசத்தின் சின்னங்கள் பறவை விலங்கு இவையாவும் நாம் அறிவோம். நமது நாட்டின் தேசிய விளையாட்டு தினம் எது என்று நாம் அறிந்து கொள்வோம். ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி ஆகும். அன்று என்ன அவ்வளவு சிறப்பு? அன்றுதான் பத்மபூஷன் விருது பெற்ற உலகப் புகழ்பெற்ற ஹாக்கி வீரர் ,பாரதத்தின் "தியான் சந்த்"  பிறந்த தினம்.

அப்படி சிறப்பு என்ன?
ஆங்கிலேயர் காலத்தில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த சோமேஸ்வரர் தத்சிங்  என்ற வீரரின் மகனாக பிறந்த தியான்சிங்,  அவரது குடும்பத்தின் மற்ற சகோதரர் போல் ராணுவத்தில் சேர்ந்தார். ஹாக்கி விளையாட்டு ராணுவத்தில் மிகவும் முக்கியமான பங்கு வகித்தது. தியான் சிங்கும் ஹாக்கி விளையாட வேண்டியிருந்தது .

    சிறுவயதில் அவருக்கு மல்யுத்தத்தில் தான் நாட்டம். ஆனால் இப்பொழுது ஹாக்கி விளையாட வேண்டி இருந்தது. ஆகவே தனது பணி நேரம் முடிந்த பின் நீண்ட நேரம் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். இரவுகளில் நிலா ஒளியில் நீண்ட நேரம் பயிற்சி செய்வார். அப்போது பந்தை நன்றாகப் பார்க்கும் திறன் வரும் என்று அவருக்கு புரிந்தது. இவ்வாறு அவர் செய்வதை பார்த்து அவருடைய பயிற்சியாளர் அவருக்கு சந்த்(chand )நிலா ஒளி என்று பெயரிட்டார்.

     அது முதல் அவருக்கு தியான் சந்த் என்ற பெயர் நிலைத்துவிட்டது. தனக்கு பழக்கம் இல்லாத ஹாக்கி விளையாட்டு என்றாலும் முழு பயிற்சி பயிற்சி மூலம் தன்னை அதிக திறன் உள்ளவராக ஆக்கிக்கொண்டார் தியான்சந்த். நாமும்  ஷாகாவில் அதிக பயிற்சி எவ்வளவு முக்கியத்துவம் என்பதை அறிவோம்.

  அவரது அதீத திறமை காரணமாக ராணுவத்தின் அவரது பிரிவு அவரை அனைத்து ஹாக்கி விளையாட்டு போட்டிகளுக்கு அனுப்பி வைத்தது. அவரும் நாட்டுக்குள் நடக்கும் எல்லா இடங்களுக்கும் சென்று சிறப்பாக ஆடி வந்தார்.

  முதல்முறையாக 1928ஆம் ஆண்டு ஹாக்கியை ஒலிம்பிக் விளையாட்டில் சேர்த்தார்கள். அந்த ஆண்டு இந்திய குழுவில் தியான் சந்த் மற்றும் அவரது சகோதரர் நீப் சிங் உட்பட இந்திய குழு ஆம்ஸ்ட்ராங்மில்  நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்றது. முதல் முறையாக வெளிநாடுகளில் சென்று விளையாட தொடங்கினார். அந்தப் போட்டிகளில் நமது குழுவில் பல வீரர்களுக்கு தொடர்ந்து உடல் நிலை சரி  இல்லாமல் போனது தியான் சந்த் அவர்களுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இருந்தாலும் மனம் தளராது அவர் சிறப்பான விளையாட்டை நடத்திக் காட்டினார். அதன்மூலம் சக வீரர்களுக்கு வெளிநாடுகளிலும் சென்று ஒன்றாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. மேலும் சர்வதேச அளவில் நமது ஹாக்கி குழு மீது மதிப்பு பிறந்தது.

    தியான் சந்த் அவர்களின் புகழ் பரவத் தொடங்கியது. ஆனால் தியான் சந்த் அவர்கள் தன் முழுக்கவனத்தையும் திறன் வளர்ச்சியில் மட்டுமே செலுத்தினார் .நாம் ஆர்வத்தடனும், ஈடுபாட்டுடனும் சங்க வேலை செய்கிறோம். ஆனால் நமது கவனம் நம் திறனை வளர்ப்பதிலே முழுதும் செலுத்தவேண்டும். 1936 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடக்க ஏற்பாடு ஆகி இருந்தது. அது நாசிச ஆட்சியில் அடாப் ஹிட்லர் தலைமையில் இருந்த ஜெர்மனியில் நடக்க இருந்தது. அலுவல் காரணமாக தியான் சந்த் அவர்களுக்கு பயிற்சி முற்றிலும் கிடைக்கவில்லை. தேர்ச்சி விளையாட்டிற்கு நேரம் அனுமதி அவரது படைப்பிரிவு கொடுக்கவில்லை. ஆனால் நேரடியாக ஒலிம்பிக்கில் விளையாட இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

      அதன்பின் அவர் ஜெர்மனிக்கு குழுவோடு அனுப்பப்பட்டார். அங்கு சென்று எல்லா நேரத்திலும் பயிற்சி மேற்கொண்டு தங்களை எதிர்த்த எல்லா நாட்டு அணிகளையும், அதிக கோல் வித்தியாசத்தில் நமது அணி வெற்றி பெற்று வந்தது. எல்லாவற்றுக்கும் முன் நமது அணியை உற்சாகப்படுத்த தியான் சந்த் அவர்கள் அன்றைய காலத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மூவர்ணக்கொடி முன் சபதம் ஏற்பார். மற்ற அணியினரும் அவரோடு சபதம் ஏற்பார்கள். சிறப்பாக விளையாடி நமது அணி இறுதிப்போட்டிக்கு வந்தது. 15 ஆகஸ்ட் 1936 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி அன்று மிகவும் சக்திவாய்ந்த ஜெர்மனியில், அதுவும் அவர்கள் நாட்டில் ஹிட்லர் போன்ற சர்வாதிகாரியின் கண்முன் நடக்க இருந்தது. இதுவே ஹிட்லருக்கு தனது பெருமையை உலகுக்கு காட்ட ஒரு வாய்ப்பாக அமைந்தது. .ஜெர்மனி வெற்றி பெற்று விடும் என்ற இருமாப்போடு  இருந்த நேரம் அது.
        
      விளையாட்டு தொடங்கியது முதல் காலப்பகுதியில் மிகவும் கடினமான போட்டி நிலவியது. நமது வீரர்களால் கோல் போட முடியவில்லை. ஆனால் ஜெர்மனி ஒரு கோல் போட்டு முன்னிலையில் சென்றது. இரண்டாவது காலப்பகுதியின் போது தனது வேகம் குறைந்து வருவதாக உணர்ந்த தியான் சந்த் அவர்கள் தான் அணிந்த காலணியை(sports shoe) கழற்றிவிட்டு ஆடுகளத்தில் ஓடி விளையாட ஆரம்பித்தார். வேகத்தை அதிகரிக்க ஆரம்பித்தார். அதை பார்த்த மற்ற வீரர்களுக்கு உற்சாகம் பிறந்தது. தியான் சந்த் அடுத்தடுத்து கோல்களைப் போட பாரதம் வெற்றியை நோக்கி செல்ல ஆரம்பித்தது. ஹிட்லர் உட்பட ஜெர்மானிய மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்திய அணி 8 க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஒலிம்பிக் தங்கத்தை வென்றது.

     தான் ஆடும் களம் எவ்வளவு ஆபத்தானதாக இருந்தாலும், தன் குழு மீதும் தேசத்தின் மீதும் தன் மீதும், முழு நம்பிக்கை மற்றும் பக்தியோடு விளையாடி வெற்றி மட்டுமே லட்சியமாகக் கொண்டு ஒலிம்பிக் தங்கத்தை பெற்றுத் தந்தவர் தியான் சந்த் அவர்கள். நாமும் சங்க வேலை செய்யும்போது கடினமான சூழ்நிலைகள் வரும் ஆனால் தன் திறமை மீது நம்பிக்கை, தன் சக கார்யகர்தர்களுக்கு நம்பிக்கை, தன் தேசத்தின் மீது முழு நம்பிக்கையோடு வெற்றியை லட்சியமாகக் கொண்டு வேலை செய்தால் சிறப்பான வெற்றி கிடைக்கும் என்பது தியான் சந்த் அவர்கள் வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்கிறோம். அவர் தன் திறமையை வளர்த்துக்கொள்ள செய்த சில முயற்சிகள்

1. போசிஷன் மட்டும் இல்லாமல் ஆடுகளத்தில் முழு நீள அகலத்தில் ஓடி செல்வார் அதன் மூலம் எதிரணியின் நிறை குறைகளை அறிந்து கொள்வார்.
 
2. ஹாக்கி மட்டையை விட்டு பந்து வெளியே செல்லாமல் இருக்கும் அளவிற்கு (dribbling) என்ற முறையை அதிகம் பழகுவார். ஒருமுறை நெதர்லாந்து  நாட்டினர்  அவருடைய மட்டையை வாங்கி அதில் காந்தம் உள்ளதா? என்று பரிசோதனை செய்தனர்.

3. கோல் சரியாக போடுவதற்கு ஒரு காலிடயர்  வைத்து அதனுள் பந்தை அடிக்க அதிக பயிற்சி எடுப்பார். அதன் மூலம் குறி மாறாமல் அடிக்கும் தன்மையை வளர்த்துக்கொண்டார்.

4. விளையாட்டின் அனைத்து விதிமுறைகளையும் சரியாக தெரிந்து வைத்திருந்தார். ஒரு முறை நடந்த விளையாட்டில் அவர் ஒரு கோல் கூட போட முடியாத நிலை ஏற்பட்டது. உடனே அவர் கோல் போஸ்ட் அளவு தவறாக உள்ளது, அதை அளந்து சரி செய்யுமாறு கூறினார். அவர்களும் பார்த்தபோது அவ்வாறே தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பின் சரி செய்தார்கள்.
 
       ஆகவே ஹாக்கி உலகத்தின் மெஜிசியன் என்ற பெயரைப் பெற்ற தியான் சந்த் நமது நாட்டிற்கு ஒலிம்பிக் சங்கத்தை அளித்த பெருமையை பெற்றார். சுதந்திரத்திற்கு பின் இந்திய ராணுவத்தில் மேஜர் என்ற நிலைக்கு வந்து பணி ஓய்வு பெற்றார். 1956 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது கொடுத்து கௌரவித்தது நமது அரசாங்கம். அவர் தன்னை பற்றி சொல்லும்போது “என்னிடம் இயற்கையான திறமை (Talent) இருப்பதை கண்டு கொண்டேன். ஆனால் அதை தக்கவைக்க கடும் உழைப்பை மட்டும் தான் நான் போட்டேன்” என்று அடக்கமாக கூறினார். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஒரு மனிதன், விளையாட்டு வீரர், தேசபக்தர், யோகி, தியான் சந்த் அவர்களைப் போல நாமும் தினசரி ஷாகா மூலம் நம் திறமைகளை வளர்த்து, தேசத்திற்காகவும் சமுதாயத்திற்காகவும் பல நல்ல செயல்களில் வெற்றி பெற தொடர்ந்து கடும் உழைப்பை காணிக்கையாக்குகிறோம்.

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...