Friday, May 17, 2013
உத்திராடம் 1ம் பாதம் (மட்டும்)
இது தனுசு ராசிக்கு உரிய நட்சத்திரம். அத்துடன் சூரியனுக்கு உரிய நட்சத்திரம்!
இந்த நட்சத்திரத்திற்கு
1. அஸ்விணி
2. பரணி
3. ரோகிணி
4. திருவாதிரை
5. பூசம்
6. ஆயில்யம்
7. மகம்
8. பூரம்
9. ஹஸ்தம்
10. சுவாதி
11. அனுஷம்
12. கேட்டை
13. மூலம்
14. பூராடம்
15. திருவோணம்
16. ச்தயம்
17. உத்திரட்டாதி
18. ரேவதி
ஆகிய 18 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.
அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi) வேண்டாம் என்பார்கள். தனுசு ராசிக்குக் கடகம் எட்டாம் வீடு. கடகத்திற்கு தனுசு ஆறாம் வீடு.. பூச நட்சத்திரமும், ஆயில்ய நட்சத்திரம் கடகத்திற்கு உரியது. ஆகவே அவற்றை விலக்கி விடுவது நல்லது.
தனுசு ராசிக்கு விருச்சிகம் 12ம் வீடு. விருச்சிகத்திற்கு இரண்டாம் வீடு. ( 1/12 & 12/1 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே விருச்சிக ராசிக்கு உரிய அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களையும் விலக்கிவிடுவது நல்லது.
கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 14 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.
கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.
பெண்ணிற்கும், பையனுக்கும் உத்திராடம் (1ம் பாதம்) ஒரே நட்சத்திரமாக இருந்தால் மத்திம (average) பொருத்தம் உண்டு!.
சித்திரை, அவிட்டம் ஆகிய இரு நட்சத்திரங்களும் பொருந்தாது.
மிருகசீரிஷம் நடச்த்திரம் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அதையும் தெரிவு செய்து கொள்ளலாம்!
Subscribe to:
Post Comments (Atom)
முத்துசாமி தீட்சிதர்
மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...
-
இது புதனின் நட்சத்திரம். 1. கார்த்திகை 2. மிருகசீரிஷம் 3. புனர்பூசம் 4. பூரம் 5. சித்திரை 6. சுவாதி 7. விசாகம் 8. அனுஷம் 9. திருவோணம் 10. அவ...
-
கந்தர்வ ராஜாய காயத்ரி மந்திரம் ஓம் கந்தர்வராஜாய வித்மஹே களத்ரதோஷ நிவர்த்தகாய தீமஹி தந்நோ யக்ஷ: ப்ரசோதயாத் கீழ்க்காணும் மந்திரங்களைய...
No comments:
Post a Comment