Friday, May 3, 2013
சூட்சுமம் திறந்த திருமந்திரம்
பிணி, திரை, மூப்பு இல்லாத வாழ்க்கை வேண்டும் என்பதே நீண்ட நெடுங்காலமாக மனித குலத்தின் ஆசையாக உள்ளது. அதற்கான வழிமுறைகளைத் தேடும் முயற்சிகளும் காலங் காலமாக நடைபெற்று வருகின்றன. நவீன மருத்துவ விஞ்ஞானமும் இதற்கான விடையை முனைந்து தேடி வருகிறது; இதுவரையில் வெற்றி கிடைக்கவில்லை.
ஆனால் நமது முன்னோர்கள் இதற்கான வழிமுறைகளைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்து விட்டனர். யோகாசனம், பிராணாயாமம், முத்திரைகள் என நம் முன்னோர்கள் வகுத்து வைத்த வழிமுறைகள் அனைத்துமே மூப்பு, திரை, பிணி என அனைத் தையுமே வெற்றி கொள்ளும் மார்க்கங்களாகும்.
திருமந்திரத்தின் மூன்றாம் தந்திரம் (மூன்றாம் பாகம்) முழுக்க முழுக்க "அஷ்டாங்க யோகம்' என்பதைக் குறித்தே விவரிக்கிறது. பல சூட்சும ரகசியங்களை விளக்குகிறது. "அஷ்டாங்கம்' என்ற வடமொழிச் சொல்லுக்கு "எட்டு பிரிவுகள்' என்பது பொருள். முழுமையான யோகக் கலையானது எட்டு அம்சங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. அவை முறையே-
1. இயமம்
2. நியமம்
3. ஆசனங்கள்
4. பிராணாயாமம்
5. பிரத்தியாகாரம்
6. தாரணை
7. தியானம்
8. சமாதி
இந்த ஒவ்வொன்றையும் குறித்து மிக விரிவாக திருமூலர் தனது திருமந்திரத்தில் விளக்கியுள்ளார். அவை அனைத்தையும் விவரிக்க வேண்டுமென் றால் பல பாகங்கள் கொண்ட ஒரு தனிப் புத்தகமே எழுத வேண்டியதிருக்கும். தற்போது "பிராணாயாமம்' எனும் மூச்சுப் பயிற்சி குறித்து திருமூலர் கூறியுள்ள சில உண்மைகளையும், சூட்சும ரகசியங்களையும் மட்டும் காணலாம்.
உயிருக்கு ஆதாரமாக இருப்பது மூச்சுதான். எனவேதான் அதை "உயிர் மூச்சு' என்கிறோம். மனிதன் உணவின்றி பல நாட்கள் உயிர் வாழ முடியும். நீர் இல்லாமற்கூட சில நாட்கள் உயிர் வாழலாம். ஆனால் காற்று (பிராணவாயு) இல்லாமல் போனால் எட்டு நிமிடங்களில் மரணம் நிச்சயம்! உடலின் இயக்கங்கள் அனைத்திற்கும் இந்த மூச்சுக் காற்றே ஆதாரம்.
"ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண்டு ஏறும் குதிரைமற்று
ஒன்றுண்டு
மெய்யர்க்கு பற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப்
பொய்யரைத் துள்ளி விழுந்திடும் தானே.'
(திருமந்திரம்)
நாம் நமது ஐம்பொறிகளாலேயே இந்த உலகை அளக்கிறோம். ஐம்பொறிகளின் வழியாகக் கிடைக்கும் செய்திகளின், உணர்வு களின் அடிப்படையிலேயே நமது செயல்பாடு களும் அமைகின்றன. கண், காது, மூக்கு, வாய், மெய் (தோல்) ஆகிய இந்த ஐம்பொறிகளையே திருமூலர் "ஐவர்' என்று குறிக்கிறார்.
இந்த ஐவர்க்கும் நாயகனாகவும், இந்த ஐம்பொறிகளும் உறையும் ஊருக்குத் (உடலுக்கு) தலைவனாகவும் ஒருவன் இருக்கிறானாம். நமது மனம்தான் (அல்லது சித்தம்) இந்தத் தலைவன்! தலைவன் வலுவாக இருந்தால் ஐம்பொறிகளும், இந்தப் பருவுடலும் அவனுக்கு அடங்கி நடக்கும். தலைவன் வலுவற்றவனாக இருக்கும் பட்சத்தில் ஐம்பொறிகளும் தம் இச்சைக்குச் செயல்படத் துவங்கிவிடும். உடலும் (ஊரும்) அந்தத் தலைவனின் கட்டுப்பாட்டிற்குள் இராது.
இந்த மனம் எனும் தலைவன் ஏறி வரும் குதிரை ஒன்று உள்ளதாம். சித்தர் இலக்கியங்க ளில் பல சங்கேத மொழிகள் உபயோகத்தில் உள்ளன. அவற்றுள் இந்த "குதிரை' என்பதும் ஒன்று. வேகம், உறுதி, இடைவிடாத ஓட்டம் ஆகியவை குதிரையின் தனிக்குணங்களாகும். குதிரைகள் தூங்கும்போதுகூட நின்று கொண்டேதான் தூங்கும்; படுப்பதில்லை. நோய்வாய்ப்படும்போது மட்டுமே குதிரைகள் படுத்துக்கொள்ளும். இந்த குணநலன்கள் அனைத்துமே நமது மூச்சுக் காற்றுக்கும் (பிராணன்) பொருந்துகின்றன. எனவேதான் சித்தர் இலக்கியங்களில் பல இடங்களில் மூச்சு அல்லது பிராணனைக் குறிக்க "குதிரை' என்ற சங்கேதச் (ரகசியம்) சொல்லை உபயோகப் படுத்துகின்றனர்.
குதிரை அடிப்படையில் ஒரு காட்டு விலங்கு. எளிதில் கட்டுப்படாது. ஒரு குதிரையைக் கட்டுக்குள் கொண்டு வருவது என்பது மிகவும் கடினமான ஒரு காரியம். அதில் தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் பல நாட்கள் போராடித்தான் குதிரையை அடக்கி அதன் மேல் ஏறி சவாரி செய்ய முடியும். ஒவ்வொரு முறையும் அதன் மேல் ஏற முயற்சி செய்யும்போதும் அது குப்புறத் தள்ளிவிடும். படிப்படியாகவே அதை அடக்க முடியும். ஒருமுறை அதை அடக்கி வெற்றி கொண்டு சேணத்தைப் பூட்டிவிட்டால், தனது வாழ்நாள் முழுவதும் அந்தக் குதிரை தனது எஜமானனுக்கு விசுவாசமுள்ள துணையாக இருக்கும். மூச்சுக் காற்றும் அவ்வாறே! அடக்குவதும் ஆள்வதும் மிக மிகச் சிரமமான காரியம். இந்த மூச்சு எனும் குதிரை யாருக்கு அடங்கும்?
இறைவனின் திருவடிகளையே பற்றிக் கொண்டு மெய்ஞ்ஞான வழியில் செல்லும் மனிதர்களுக்கே (மெய்யர்க்கு) இந்த குதிரை வசப்படுமாம்! உலக மாயைகளில் சிக்கி, இறை நாட்டம் கொள்ளாது வாழும் பொய்யர்களை இந்த சண்டிக் குதிரை கீழே தள்ளிவிடுமாம்.
இந்த ஒரு பாடலில் திருமூலர் பல சூட்சுமமான விஷயங்களை விளக்கியிருக்கிறார். அவற்றை சுருக்கமாகக் காண்போம்.
* ஐம்பொறிகளையும் ஆளும் தலைவன்- சித்தம் (மனம்).
* இந்த மனம் ஒருநிலைப்பட்டு உறுதியா னால் மட்டுமே ஐம்புலன்களும், பருவுடலும் அந்த சித்தத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
இதுவரையில் படைப்பின் சூட்சுமங்களை யும் கரு உருவாவதில் இருக்கும் ரகசியங்களையும் குறித்து திருமூலரின் சில கருத்துகளைக் கண்டோம். இனி வேறு சில சூட்சும ரகசியங் களைக் காணலாம்.
பிணி, திரை, மூப்பு இல்லாத வாழ்க்கை வேண்டும் என்பதே நீண்ட நெடுங்காலமாக மனித குலத்தின் ஆசையாக உள்ளது. அதற்கான வழிமுறைகளைத் தேடும் முயற்சிகளும் காலங் காலமாக நடைபெற்று வருகின்றன. நவீன மருத்துவ விஞ்ஞானமும் இதற்கான விடையை முனைந்து தேடி வருகிறது; இதுவரையில் வெற்றி கிடைக்கவில்லை.
ஆனால் நமது முன்னோர்கள் இதற்கான வழிமுறைகளைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்து விட்டனர். யோகாசனம், பிராணாயாமம், முத்திரைகள் என நம் முன்னோர்கள் வகுத்து வைத்த வழிமுறைகள் அனைத்துமே மூப்பு, திரை, பிணி என அனைத் தையுமே வெற்றி கொள்ளும் மார்க்கங்களாகும்.
திருமந்திரத்தின் மூன்றாம் தந்திரம் (மூன்றாம் பாகம்) முழுக்க முழுக்க "அஷ்டாங்க யோகம்' என்பதைக் குறித்தே விவரிக்கிறது. பல சூட்சும ரகசியங்களை விளக்குகிறது. "அஷ்டாங்கம்' என்ற வடமொழிச் சொல்லுக்கு "எட்டு பிரிவுகள்' என்பது பொருள். முழுமையான யோகக் கலையானது எட்டு அம்சங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. அவை முறையே-
1. இயமம்
2. நியமம்
3. ஆசனங்கள்
4. பிராணாயாமம்
5. பிரத்தியாகாரம்
6. தாரணை
7. தியானம்
8. சமாதி
இந்த ஒவ்வொன்றையும் குறித்து மிக விரிவாக திருமூலர் தனது திருமந்திரத்தில் விளக்கியுள்ளார். அவை அனைத்தையும் விவரிக்க வேண்டுமென் றால் பல பாகங்கள் கொண்ட ஒரு தனிப் புத்தகமே எழுத வேண்டியதிருக்கும். தற்போது "பிராணாயாமம்' எனும் மூச்சுப் பயிற்சி குறித்து திருமூலர் கூறியுள்ள சில உண்மைகளையும், சூட்சும ரகசியங்களையும் மட்டும் காணலாம்.
உயிருக்கு ஆதாரமாக இருப்பது மூச்சுதான். எனவேதான் அதை "உயிர் மூச்சு' என்கிறோம். மனிதன் உணவின்றி பல நாட்கள் உயிர் வாழ முடியும். நீர் இல்லாமற்கூட சில நாட்கள் உயிர் வாழலாம். ஆனால் காற்று (பிராணவாயு) இல்லாமல் போனால் எட்டு நிமிடங்களில் ப் மனதை இயக்குவது மூச்சுக் காற்று (பிராணன்).
*இந்த மூச்சுக் காற்றை வசப்படுத்து பவர்களுக்கு மட்டுமே மனம் ஒருமுகப்படும்.
* இறைவனைப் பற்றிக் கொண்டு மெய்ஞ் ஞான வழியில் செல்பவர்களுக்கு மட்டுமே மூச்சு கட்டுப்படும்.
* பொய்ஞானம் எனும் மாயைகளில் சிக்குண்டு உழலுபவர்களுக்கு மூச்சு, மனம், ஐம்பொறிகள், பருவுடல் ஆகிய எதுவுமே வசப்படாது. முக்தி நிலையும் இவர்களுக்கு சாத்தியப்படாது.
குருவின் துணை
நாம் பிறந்தது முதல் இறப்பது வரையில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொள்கிறோம். பல விஷயங்களைப் பிறர் சொல்லிக் கொடுக்கக் கற்றுக்கொள்கிறோம். சிலவற்றை பிறரைப் பார்த்துக் கற்றுக்கொள்கி றோம். இவை தவிர சிலவற்றை இயற்கையை உற்று நோக்கியும்கூட கற்றுக்கொள்கிறோம். புதிதாக ஒன்றைக் கற்றுத்தரும் ஒவ்வொருவருமே நமக்கு ஒரு குருதான்!
கல்விக்கு குருவின் துணை மிக அவசியம். அதைவிடவும் ஞானத் தேடலில்- ஞானம் தேடிய பயணத்தில் ஒரு குரு மிக மிக அவசியம். பிராணா யாமம் எனும் மூச்சுப் பயிற்சியை முறையாகக் கற்றுக்கொள்ள ஒரு குரு கட்டாயமாகத் தேவை. இதை கீழ்க்கண்ட திருமந்திரப் பாடல் வலியுறுத்துகிறது.
"ஆரியன் நல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகு அறிவார் இல்லை
கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.'
(திருமந்திரம்)
"மனம்' என்பதை "ஆரியன்' என்ற சொல்லால் திருமூலர் குறிப்பிடுகிறார். இந்த மனமானது மிக நல்லதாம். இந்த மனதிடம் இரண்டு குதிரைகள் உள்ளதாம். முதல் பாடலில் ஒரு குதிரை உண்டு எனக் கூறிய திருமூலர் அடுத்த பாடலிலேயே இரண்டு குதிரைகள் உள்ளதாகக் கூறுகிறாரே, இது என்ன முரண்பாடு என்ற கேள்வி எழுகிற தல்லவா? இங்கேதான் மூச்சு குறித்த அடுத்த சூட்சும ரகசியம் பொதிந்து கிடக்கிறது.
முதல் பாடலில் "குதிரை' என்பது மூச்சு அல்லது பிராணனைக் குறிக்கிறது. இந்தப் பாடலில் அது நமது இடது நாசி, வலது நாசி ஆகிய இரண்டையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளாம். இதுவே இரண்டு குதிரைகள். அல்லது இடது நாசி வழியாகச் செல்லும் மூச்சுக் காற்றை ஒரு குதிரை எனவும், வலது நாசி வழியாகச் செல்லும் மூச்சுக் காற்றை மற்றொரு குதிரை எனவும் பொருள் கொள்ளலாம்.
பிராணன் என்பது ஒன்றுதானே? வலது நாசியில் செல்லும் மூச்சுக்கும், இடது நாசியில் செல்லும் மூச்சுக்கும் வித்தியாசம் இருக்க முடியுமா என்ற கேள்வி உங்கள் மனதில் இப்போது எழுந்திருக்கும். ஆம்; இரண்டு நாசிகளிலும் செல்லும் மூச்சுக் காற்றுக்கு தனித்தனித் தன்மைகளும், செயல்பாடுகளும் உள்ளன. எனவேதான் திருமூலர் அதைப் பாகுபடுத்திக் காட்ட இரண்டு குதிரைகள் என்றார்.
நாம் நமது இரண்டு நாசித் துவாரங்களின் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிப்பதாக ஒரு தவறான கருத்து நம்மிடையே உள்ளது. உங்களது சுவாசத்தை உற்றுக் கவனித்துப் பாருங்கள். இதிலுள்ள உண்மை புரியும்.
ஒரு நேரத்தில் ஒரு நாசியின் வழியாகவே அதிகப்படியான காற்று உள்ளே செல்லும். (அடுத்த நாசியில் மிகச் சிறய அளவிலான காற்று உட்புகும்.) சற்று நேரத்திற்குப்பின் (இரண்டு மணி நேரத்திற்குப் பின்) அடுத்த நாசி வழியாக காற்று செல்லத் துவங்கும். இவ்வாறு ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என மொத்தம் 12 முறை இந்த இடம் மாறுதல் நடைபெறும். எந்த நேரத்தில் எந்த நாசியில் காற்று செல்லும் என்பதையும் நம் முன்னோர் கள் கணித்து வைத்துள்ளனர்.
நேரம் நாசி
காலை 6-8 மணி வரை வலது நாசி
காலை 8-10 மணி வரை இடது நாசி
காலை 10-12 மணி வரை வலது நாசி
மதியம் 12-2 மணி வரை இடது நாசி
மதியம் 2-4 மணி வரை வலது நாசி
மாலை 4-6 மணி வரை இடது நாசி
மாலை 6-8 மணி வரை வலது நாசி
இரவு 8-10 மணி வரை இடது நாசி
இரவு 10-12 மணி வரை வலது நாசி
இரவு 12-2 மணி வரை இடது நாசி
இரவு 2-4 மணி வரை வலது நாசி
அதிகாலை 4-6 மணி வரை இடது நாசி
வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்த இரண்டு சுவாசங்களுக் கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன.
வலது நாசிக் காற்று (சூரிய கலை)
* உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன் இதுவே.
* வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும்.
* உடல் சுறுசுறுப்படையும்; சோர்வு அகலும்.
* உடலின் வலிமை அதிகரிக்கும்.
* மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும்.
* இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும், வேகம் அதிகமாகவும் இருக்கும்.
இடது நாசிக் காற்று (சந்திர கலை)
* உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது.
* சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும்.
* இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும்.
* பரபரப்புத் தன்மை குறைந்து, மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும்.
* மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும்.
* அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும்.
இந்த இரண்டு வகையான மூச்சுகளையும் (குதிரைகளையும்) அடக்கி ஆளக் கற்றுக் கொண்டால், மனம், ஐம்பொறிகள், பருவுடல் ஆகிய அனைத்துமே நம் கட்டுப்பாட்டிற்குள் வரும். ஆனால் இவற்றை அடக்கும் சூட்சுமம் எவருக்கும் தெரிவதில்லை என்பதையே இந்தப் பாடலின் இரண்டாவது வரி தெரிவிக்கிறது.
"வீசிப்பிடிக்கும் விரகு (உபாயம், வழிமுறை) அறிவார் இல்லை.'
இந்த சூட்சுமங்களைக் கற்றுக்கொண்டு, பிராணன் எனும் குதிரைகளை வசப்படுத்த ஒரு குருவின் துணை வேண்டும். அந்த குருவும் நுண்ணறிவு படைத்தவராக, அந்தக் கலையில் முழுமை பெற்றவராக இருத்தல் வேண்டும். இந்தக் கருத்தே கடைசி இரு வரிகளில் வெளிப் படுகிறது.
"கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.'
இதில் "அருள் பெற்றால்' என்ற சொற்களிலும் ஒரு சூட்சுமம் உள்ளது. குருவிடம் சென்று கற்றுக்கொள்வது வேறு; அவரது அருளைப் பெறுவதென்பது வேறு. நீங்களே இதை ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். இதிலுள்ள சூட்சும ரகசியங்கள் புரியும்.
"புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்உண்ண வேண்டாம் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பர் தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.'
திருமந்திரம்- பாடல் எண்: 559
"புள்' என்பது பறவையைக் குறிக்கும் சொல்லாகும். "புள்ளினும் மிக்க புரவி' என்றால் பறவையைவிட வேகமாகப் பறக்கக் கூடிய குதிரை என்பது பொருள். பிராணனைக் குறிக்க குதிரை என்ற குறியீட்டை சித்தர்கள் பயன்படுத்தினர் என்பதை ஏற்கெனவே கண்டோம். ஆக, பறவையைவிட வேகமாகச் செல்லக்கூடிய இந்த பிராண னாகிய குதிரையை நம்வசப்படுத்திக் கொண்டால் (மேற்கொண்டால்) என்னென்ன நிகழும்?
"கள் உண்ண வேண்டாம்; தானே களிதரும்.'
ஒருவித ஆனந்தமான மனநிலையை அடையவே மனிதர்கள் கள் முதலிய போதைப் பொருட்களை உண்கிறார்கள் அல்லவா? ஆனால் திருமூலரின் கூற்றுப்படி, பிராணா யாமம் எனும் மூச்சுப் பயிற்சியின் மூலமாக நமது பிராணனை நாம் வசப்படுத்திவிட்டால், கள் உண்ணாமலேயே கள் உண்ட ஆனந்த நிலை உடலிலும் மனதிலும் உருவாகிவிடும்.
மூச்சுப் பயற்சியின் மூலமாக குண்டலினி சக்தி தட்டி எழுப்பப்பட்டு நமது தலையின் மேற்பகுதி யிலுள்ள "லலான சக்கரம்' தூண்டப்பட்டால், அந்த சக்கரத்திலிருந்து உருவாகும் "அமிர்தம்' ஒரு எல்லையற்ற ஆனந்த நிலையை உருவாக்கும். இதையே "பேரானந்தம்' என்கிறார்கள். இந்த ஆனந்த நிலையும் ஒருவகையான போதையே. ஒருமுறை அனுபவித்தவர்களுக்கு அந்த நிலை யிலிருந்து வெளியில் வரவே மனம் வராது. மீண்டும் மீண்டும் அந்த ஆனந்த நிலையையே மனம் நாடும். எனவேதான் வடமொழியில் இந்த நிலையை "ஆனந்த லகரி' என்கிறார்கள்.
ஆக, பிராணனை வசப்படுத்துவதால் விளையும் முதல் பலன்- ஆனந்தமான மனநிலை உருவாகும். இது ஒரு பேரானந்த நிலை.
"துள்ளி நடப்பிக்கும், சோம்பர் தவிர்ப்பிக்கும்.'
ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடையாக அமைவது அவனிடத்தில் காணப் படும் சோம்பல்! பலர் பல நல்ல வாய்ப்புகளைத் தவற விட்டுவிடுவதற்குக் காரணமாக அமைவது மனதில் அல்லது உடலில் ஏற்படும் சோம்பல் தான்! பிராணன் எனும் குதிரையை நமது வசப்படுத்திக் கொண்டால் சோம்பல் மறையும். மனதிலும் உடலிலும் ஒரு புதிய உற்சாகம் பிறக்கும். சுறுசுறுப்பும் துள்ளலும் தானே ஏற்படும். வாழ்க்கை சிறக்கும்.
"உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.'
இதுவே உண்மை. அதைச் சொல்லிவிட்டோம். ஆனால் உணர்வுடையோர்க்கு மட்டுமே இந்த ரகசியம் புரியும் என்கிறார் திருமூலர். உயிரோடி ருக்கும் (மரம், செடி, கொடி, விலங்குகள் உட்பட) அனைத்துமே உணர்வு கொண்டவை தானே என்ற சந்தேகம் எழும். இந்தப் பாடலில் திருமூலர் குறிக்கும் உணர்வு என்பது "உள்ளுணர்வு' அல்லது "மெய்ஞ்ஞானம்' என்பதைக் குறிக்கிறது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இனி அடுத்த பாடலைக் காணலாம்.
"பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்
பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை
பிராணன் மடைமாறிப் பேச்சு அறிவித்துப்
பிராணன் நடைபேறு பெற்று உண்டீரே.'
திருமந்திரம்- பாடல் எண்: 560
ஆன்மிகப் பாதையில் செல்பவர்களுக்கும், ஞானத் தேடலில் இறங்குபவர்களுக்கும் இறுதி யான குறிக்கோள் ஒன்றேயாகும். அது பிறப்பு- இறப்பு அற்ற முக்தி நிலை! வழிகள் வெவ்வேறாக இருந்தாலும் முக்தி நிலையை அடைவதே குறிக்கோளாக இருக்கிறது.
பிராணனும் மனமும் ஒன்றாக இணைந்து, ஒன்றில் ஒன்று அடங்கி ஒடுங்கும் நிலையை அடையும்போதுதான் பிறப்பு - இறப்பு இல்லாத நிலை உருவாகும் என்கிறார் திருமூலர்.
"பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்
பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை.'
"பேராது' என்ற சொல்லுக்கு "விலகாது' என்று பொருள். பிராணன் மனத்திலிருந்து விலகாமல் இரண்டும் ஒன்றாக இணைந்து அடங்க வேண்டும். பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சியின் வாயிலாகவே இது சாத்தியமாகும் என்கிறார் திருமூலர்.
நாம் சுவாசிக்கும்போது மூச்சுக் காற்றானது (பிராணன்) மேலிருந்து கீழாகவே செல்கிறது அல்லவா? இதுவே இயல்பான மூச்சு. ஆனால் இத்தகைய இயல்பான சுவாச முறையினால் முக்தி நிலையை அடைய இயலாது. பிராணன் தனது இயல்பான பாதையை விட்டு மாறி (மடைமாறி) மேல்நோக்கிச் சென்று ஆக்ஞை, லலானம், சகஸ்ராரம் ஆகிய உயர்நிலைச் சக்கரங்களை அடைய வேண்டும். அப்போதுதான் பிறப்பு- இறப்பு இல்லாத முக்தி நிலை உருவாகும்.
"மடைமாறி' என்ற ஒரு சொல்லில் பல சூட்சுமங்கள் உள்ளன. தண்ணீர் செல்லும் சிறிய வாய்க்காலையே (ஈட்ஹய்ய்ங்ப்) "மடை' என்பார்கள். மடை மாறி என்ற சொல்லுக்கு (மேலே கண்டபடி) கீழ்நோக்கிச் செல்லும் பிராணன் தனது பாதையிலிருந்து மாறி மேல்நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் பொருள் கொள்ளலாம். இது தவிர மேலும் இரு சூட்சுமங்கள் இந்த ஒற்றைச் சொல்லில் உள்ளன.
சுவாசம் என்பது இடது நாசி, வலது நாசி என மாறி மாறி வரும்; இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த மாற்றம் நிகழும் என்பதை கடந்த அத்தியாயத்தில் ஒரு திருமந்திரப் பாடலில் கண்டோம்.
இது இயல்பான சுவாச நிலை. தொடர்ந்த மூச்சுப் பயிற்சி, தியானம், யோகாசனங்கள் ஆகியவற்றின் மூலம் இந்த இயல்பான நிலை மாறி (மடை மாறி) இடது நாசியில் மட்டுமே சுவாசம் செல்லும் நிலை உருவாகும்போதுதான் பிறப்பு- இறப்பு அற்ற நிலை உருவாகும். இது ஒரு சூட்சுமம். மேலும் ஒன்று உள்ளது.
இடது நாசியில் சுவாசம் செல்லும்போது இடகலை நாடி தூண்டப்பட்டு அந்த நாடியில் அதிகப்படியான பிராணன் பாயும். வலது நாசியின் வழியாகச் சுவாசிக்கும்போது பிங்கலை நாடி தூண்டப்பட்டு அந்த நாடியில் அதிகப் படியான பிராணன் பாய்ந்து செல்லும். இதுவே இயல்பான சுவாச நடை.
இந்த இயல்பு நிலை மாறி (மடை மாறி) ஒவ்வொரு முறை சுவாசிக்கும் போதும் பிராணன் சுழுமுனை நாடியில் பாயத் துவங்கும்போதுதான் பிறப்பு- இறப்பு இல்லாத முக்தி நிலையை அடைய முடியும். தொடர்ந்து பிராணாயாமப் பயிற்சிகளை மேற்கொண்டு யோகக் கலையில் உயர்நிலையை அடைந்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும். பிராணன் தனது இயல்பான பாதையிலிருந்து "மடைமாறி' (ஈட்ஹய்ஞ்ங் ர்ச் ஈட்ஹய்ய்ங்ப்) சுழுமுனை நாடியில் பாயத் துவங்கும்போது எல்லையற்ற பேரானந்த நிலை உருவாகும். யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் மட்டுமே இது சாத்தியமாகும்.
இந்தப் பாடலின் மூன்றாவது வரியில் "பேச்சு அறிவித்து' என்ற ஒரு சொல் வருகிறதல்லவா? அந்தச் சொல்லிலும் ஒரு மிகப் பெரிய சூட்சுமம் ஒளிந்து நிற்கிறது. அதைச் சுருக்கமாகக் காணலாம்.
சாதாரண - இயல்பான சுவாசம் நடைபெறும் வரையில் பேச்சு நிற்காது. மனம் ஒடுங்காது பிராணனிலிருந்து தனியாக நிற்பதால் மனம் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டேயிருக்கும். வாயும் ஓயாமல் பேசிக்கொண்டேயிருக்கும். ஆனால் மூச்சு மடைமாறி பாயத் துவங்கும்போது சூட்சும உடலிலும் (சக்தி உடல்), பருவுடலிலும் சில மாற்றங்கள் நிகழும்.
* சுழுமுனை நாடியில் பிராணன் பாயும் போது மூலாதாரத்தின் அருகே உறங்கிக் கிடக்கும் குண்டலினி தட்டி எழுப்பப்படும்.
* இந்தக் குண்டலினி சக்தியானது சுழு முனை நாடி வழியே மேலெழும்பி சக்கரங்களை அதிக வலிமையுடன் இயங்கச் செய்யும்.
* முதலில் கீழ்நிலைச் சக்கரங்கள் தூண்டப் படும்.
* தொடர்ந்து யோகப் பயிற்சிகளைச் செய்து வரும்போது இடைநிலைச் சக்கரங்கள் தூண்டப் படும்.
* மேலும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வரும்போது உயர்நிலைச் சக்கரங்கள் தூண்டப்படுகின்றன.
* ஒவ்வொரு சக்கரத்தையும் குண்டலினி இயக்கும்போது அந்த சக்கரத்தோடு தொடர்பு டைய பல சித்திகள் சாதகருக்குக் கிடைக்கும்.
* கீழேயுள்ள ஐந்து சக்கரங்களையும் கடந்து ஆறாவது சக்கரமான ஆக்ஞை சக்கரத்தைக் குண்டலினி அடையும்போது, "திரிகால ஞானம்' எனும் சித்தி கிடைக்கும். கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய மூன்று காலங் களையும் உணர்ந்தவர்களையே, "முக்காலமும் உணர்ந்த முனிவர்கள்' அல்லது திரிகால ஞானி என்கிறோம்.
ஆறாவது சக்கரத்தையும் கடந்து, ஏழாவது சக்கரமான சகஸ்ரார சக்கரத்தை குண்டலினி அடையும்போதுதான் பரமாத்மாவும் ஜீவாத்மா வும் இணையும் நிகழ்வு நடைபெறும். இந்த நிலையை அடைந்த மனிதன் கடவுளுக்கு இணையான சக்திகளையும் திறமைகளையும் கொண்டவனாக இருப்பான்.
இங்கே ஒரு சிக்கல் எழுகிறது. "எட்டணா இருந்தால் எட்டூருக்கு எம்பாட்டு கேக்கும்' என்பதுதானே மனிதனின் அடிப்படைத் தன்மை? அவனிடத்தில் கடவுளுக்கு இணையான சக்திகள் வந்து சேர்ந்தால் என்னவாகும்? இறைவன் அல்லது இயற்கை மனிதனைப் படைக்கும்போதே, தானே முடிவெடுத்துச் செயல்படும் தன்மையையும் (எழ்ங்ங் ஜ்ண்ப்ப்) சேர்த்தே படைத்திருக்கிறது. தன்னிடத்திலுள்ள சக்தி களை, சித்திகளை ஒரு மனிதன் நல்ல வழியிலும் பயன்படுத்தலாம்; தீய வழிகளிலும் பயன்படுத்த லாம். அப்படியானால் கடவுளுக்கு இணையான சக்திகளைப் பெற்ற ஒருவன் அவற்றைத் தீய வழிகளில் பயன்படுத்தத் துவங்கினால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?
இங்கேதான் ஒரு அற்புதமான சூட்சுமம் உள்ளது. ஆறாவது சக்கரமான ஆக்ஞை சக்கரம் வரையில் ஒவ்வொரு சக்கரமும் குண்டலியினால் இயக்கப்படும்போது கிடைக்கப் பெறும் சித்திகளை ஒரு மனிதன் தன் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஆனால் ஆறாவது சக்கரத்தைத் தாண்டி குண்டலினி ஏழாவது சக்கரத்திற்குச் செல்லும் வழியில் ஒரு வேகத்தடை உள்ளது. அதன் பெயர் "தாமச நாடி'. குண்டலினி ஆறாவது சக்கரத்தைத் தாண்டிச் செல்லும்போது லலான சக்கரம் மட்டுமின்றி, இந்த தாமச நாடியும் தூண்டப் படுகிறது.
"தாமசம்' என்ற சொல்லுக்கு தாமதம், சோம்பல், சுறுசுறுப்பின்மை, உள்ளே ஒடுங்குதல் என பல அர்த்தங்கள் உண்டு. இந்த தாமச நாடி தூண்டப்படும்போது அந்த மனிதரிடம் ஒரு பற்றற்ற நிலை உருவாகி வரும். எதிலும் ஒரு ஈடுபாடு இராது. ஆரவாரங்கள் எல்லாம் அடங்கிப் போகும். சித்து விளையாட்டுகள் எல்லாம் மறைந்து, தன்னுள்ளே ஒடுங்கி, ஒரு குழந்தையைப் போன்ற தன்மை அவர்களிடம் உருவாகிவிடும். மறைந்த காஞ்சிப் பெரியவரை நினைத்துப் பாருங்கள். ஆரவாரங்கள் எதுவுமின்றி ஒடுங்கிப் போய், ஒரு குழந்தையின் சிரிப்புடன் அவர் பல வருடங்கள் இருந்தார் அல்லவா? அதுவே தாமச நாடி தூண்டப்பட்ட நிலை!
தாமச நாடி தூண்டப்பட்டு விட்டால் பேச்சும் அடங்கிப் போகும். மிகமிகத் தேவை யான தருணங்களில் மட்டுமே பேசுவார்கள். பிற மனிதர்களிடமிருந்தும் உறவுகளிடமிருந்தும் ஆசா பாசங்களிலிருந்தும் ஒதுங்கிப் போய் தன்னுள்ளே ஒடுங்கி, எல்லையற்ற ஆனந்த நிலையில் எந்நேரமும் திளைத்திருப்பார்கள். அவர்கள் நிறைந்த குடம்- இனிமேல் தளும்ப மாட்டார்கள்.
பிராணனும் மனமும் தனித்தனியே இருக்கும் வரையில்தான் "பேச்சு'. இரண்டும் ஒன்றிணைந்து தாமச நாடி தூண்டப்பட்ட பின் பேச்சு என்பதே இராது. இதையே "பேச்சு அறிவித்து' என்ற இரு சொற்களில் திருமூலர் சூட்சுமமாகக் கூறிச் சென்றுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
முத்துசாமி தீட்சிதர்
மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...
-
இது புதனின் நட்சத்திரம். 1. கார்த்திகை 2. மிருகசீரிஷம் 3. புனர்பூசம் 4. பூரம் 5. சித்திரை 6. சுவாதி 7. விசாகம் 8. அனுஷம் 9. திருவோணம் 10. அவ...
-
கந்தர்வ ராஜாய காயத்ரி மந்திரம் ஓம் கந்தர்வராஜாய வித்மஹே களத்ரதோஷ நிவர்த்தகாய தீமஹி தந்நோ யக்ஷ: ப்ரசோதயாத் கீழ்க்காணும் மந்திரங்களைய...
No comments:
Post a Comment