Monday, May 20, 2013

சண்டிகேஸ்வரர்

சிவாலயங்களில் இவருக்கு மட்டும் ஏன் இத்துனை சிறப்பு ???

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம் திருப்பனந்தாளுக்கு அண்மையில் விளங்கும் சிற்றூர் சேய்ஞ்ஞலூரில் எச்சதத்தன் என்பவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அவன் மனைவியாகிய பவித்திரை வயிற்றிலே விசாரசருமர் என்பவர் திருவவதாரஞ் செய்தார்.

அவருக்கு ஐந்து வயதிலே, வேதங்களையும், வேதாங்கங்களையும், சைவாகமங்களையும் பூர்வசன்மத்து அறிவுத் தொடர்ச்சியினாலே கற்பிப்பார் இன்றித் தாமே அறியமறிவு உண்டாயிற்று.

பாலியதசையிலே சான்றோர்க்கு உரிய குணத்தை அடைந்திருக்கின்ற அவ்விசாரசருமர். நமக்கு அம்பல சத்தியைக் கொடுத்து நித்தியமாகிய பேரின்பத்தைத் தரும் ஒரேபதி சிவபெருமானே என்பதை உணர்ந்தார். அவருக்குச் சிவபெருமானிடத்தே மெய்யன்பு கலைதோறும் வளர்வதாயிற்று.

ஒருநாள் ஓரிற்றுப் பசு ஒன்று மேய்ப்பனாகிய் இடையனைக் குத்தப் போயிற்று. அவ்விடையன் சிறிதும் பாவத்துக்கு அஞ்சாமல் அப்பசுவைக் கோலினால் அடித்தான். மெய்யறிவுடைய அவ்விசாரசருமர் அது கண்டு மிகுந்த பதைபதைப்போடும் அவன் சமீபத்திற் சென்று தடுத்தார். இப்பசுநிரையை இனி நீ மேய்க்க வேண்டியதில்லை. நானே மேய்பேன் என்றார். விசாரசன்மன், ஆநிரைகளைத் தாமே மேய்க்கும் பொறுப்பேற்று செய்துவரும் நாளில், மணலால் இலிங்கம் அமைத்து, மாடுகள் சொரிந்த பாலைக் கொண்டு அவ்விலிங்கத்துக்குத் திருமஞ்சனமாட்டி, வழிபட்டு வந்தார். இதனால் வீடுகளில் அம்மாடுகள் கொடுக்கும் பாலின் அளவு குறைந்து விடவில்லை. மாடுகள் மேய்க்கும் இடத்தில் தன் மகள் பாலைக் கறந்து விருதாவாக மணலிலே சொரிகிறான் என மறைந்து இருந்து கண்ட எச்சதத்தன், தன் மைந்தனின் சிவபூசைத் திறத்தினை உணராது, பூசனைக் கிடையூறாகக் காலால் உதைத்துச் சிதைக்க, சிவாபராதம் பொறுக்காத விசாரசன்மன், மாடு மேய்க்கும் கோலால் எச்சதத்தனின் காலில் அடிக்க, அது வாளாக மாறி அவன் காலைத் துணித்தது. சிவபூசைக்கு வந்த அவ்விடரை நீக்கியவராகிய விசாரசருமர், முன் போல அருச்சனை செய்ய; சிவபெருமான் உமாதேவியாரோடும் இடபாரூடராய்த் தோன்றி அருளினார். விசாரசருமர் அது கண்டு மனம் களித்து விழுந்து வணங்கினார். பரமசிவன் அவரைத் தம்முடைய திருக்கரங்களினால் எடுத்து, “நீ எம் பொருட்டு உன்னைப் பெற்ற பிதாவை வெட்டினாய்; இனி உனக்கு நாமே பிதா” என்று அருளிச் செய்து அவரை அணைத்து அவருடைய திருமேனியைத் தடவி உச்சிமோந்தருளினார். சிவபெருமானுடைய திருக்கரத்தினாலே தீண்டப்பட்ட அவ்விசாரசருமருடைய திருமேனி சிவமயமாகித் திவ்வியப் பிரகாசத்தோடு விளங்கிற்று. “நாம் நம்முடைய தொண்டர்களுக்கெல்லாம் உன்னைத் தலைவனாக்கி, நாம் ஏற்றுக் கொண்ட அமுதும் பரிவட்டமும் புஷ்பமும் உனக்கே கிடைக்கும்படி சண்டேசுரபதத்தைத் தந்தோம்” என்று திருவாய் மலர்ந்தார். தம்முடைய சடையிலே தரித்திருக்கின்ற கொன்றைமாலையை எடுத்து அவருக்குச் சூட்டியருளினார்.

அண்டர்பிரானும் தொண்டர் தமக்கதிபனாக்கி, அனைத்து நாம்
உண்டகலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச்
சண்டீசனுமாம் பதந்தந்தோம் என்றங் கவர் பொற்றடமுடிக்குத்
துண்டமதிசேர் சடைக் கொன்றைமாலை வாங்கிச் சூட்டினார்.

– சண்டிகேஸ்வர நாயனார் புராணம்

விசாரசன்மன் சண்டேச நாயனாராகி விட்டார். எச்சதத்தர் சிவத்துரோகஞ் செய்தும், சண்டேசுர நாயனாராலே தண்டிக்கப்பட்டமையால், அக்குற்றம் நீங்கிச் சுற்றத்துடன் சிவலோகத்தை அடைந்தார்.

சண்டேச நாயனாருக்குச் சிவபெருமான் அருள் புரிந்த கோலமே சண்டேச அனுக்கிரகமூர்த்தி என்று போற்றப்படுகிறடு.
அறிவோம் சண்டிகேஸ்வரர் ...சிவாலயங்களில் இவருக்கு மட்டும் ஏன் இத்துனை சிறப்பு ???

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...