புதன்.
சோதிடவியலில் நான்காவது கோளாய் கருதப் படும் புதனுக்கு பல்வேறு தமிழ் பெயர்கள் வழங்கப் படுகிறது.
அநூரு, அருணன், அனுவழி, கணக்கன், சௌமன், சலமன், சிந்தை, சூரியன், சௌமியன், துவன், தேர்ப்பாகன், நற்க்கொள், நிபுணன், பச்சை, பண்டதன், பாகன், புந்தி, புலவன், மதிமகன், மாலவன், மால்மேதை ஆகியனவாகும்.
உரிய பால் : அலி கிரகம்.
உரிய நிறம் : பச்சை நிறம்.
உரிய இனம் : வைசிய இனம்.
உரிய வடிவம் : உயரம்.
உரிய அவயம் : கழுத்து.
உரிய உலோகம் : பித்தளை.
உரிய மொழி : தமிழ், கணிதம், சிற்பம், ஜோதிடம்.
உரிய ரத்தினம் : மரகதம்.
உரிய ஆடை : நல்ல பச்சை நிற ஆடை.
உரிய மலர் : வெண்காந்தள்.
உரிய தூபம் : கற்பூரம்.
உரிய வாகனம் : குதிரை, நரி.
உரிய சமித்து : நாயுருவி.
உரிய சுவை : உவர்ப்பு.
உரிய பஞ்ச பூதம் : வாயு.
உரிய நாடி : பித்த நாடி.
உரிய திக்கு : வடக்கு.
உரிய அதி தேவதை : விஷ்ணு.
உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக் கோள்.
உரிய குணம் : தாமசம்.
உரிய ஆசன வடிவம் : அம்பு.
உரிய தேசம் : மகதம்.
நட்புப் பெற்ற கோள்கள் : சூரியன், சுக்கிரன்.
பகைப் பெற்ற கோள் : சந்திரன்.
சமனான நிலை கொண்ட கோள்கள் : செவ்வாய், வியாழன்,சனி, இராகு, கேது.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் ஒருமாதம்.
உரிய தெசா புத்திக் காலம் : பதினேழு ஆண்டுகள்.
புதனின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 3, 6, 8, 12ல் இருந்தால் மறைவு.
நட்பு வீடு : ரிஷபம், சிம்மம், துலாம்.
பகை வீடு : கடகம், விருச்சிகம்.
ஆட்சி பெற்ற இடம் : மிதுனம், கன்னி.
நீசம் பெற்ற இடம் : மீனம்.
உச்சம் பெற்ற இடம் : கன்னி.
மூலதிரி கோணம் : கன்னி.
உரிய உப கிரகம் : அர்த்தப்பிரகரணன்.
உரிய காரகத்துவம் : மாதுல காரகன்.
கல்வி, ஞானம், தனாதிபதி, தூதுவன், சங்கீதம், வாக்கு சாதுர்யம், ஜோதிடம், பிரசங்கம், சிற்பத்தொழில், வியாபாரங்கள், புத்திரக் குறைவு, வாத நோய், விஷரோகம் இவைகளுகு எல்லாம் புதன் தான் காரகன்.
தியான சுலோகம் (தமிழ்)..
"இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
புதந்தந்து ஆள்வாய் பண்ணொலியானே
உதவியே அருளும் உத்தமா போற்றி போற்றி"
தியான சுலோகம் (சமஸ்கிருதம்)..
"பிரியங்கு கலிகா ஸ்யாமம்
ரூபேணாப்ரதிமம் புதம்|
ஸெளம்யம் ஸெளம்ய குணோபேதம்
தம் புதம் ப்ரணமாம்யகம்||"
புதன் காயத்ரி..
"ஓம் கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத: ப்ரசோதயாத்||"
செவ்வாய்.
சோதிடவியலில் மூன்றாவது கோளான செவ்வாய்க்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப் படுகிறது.
அரத்தன், அழலோன், அழல், அறிவன், ஆரல், உதிரன், குசன், குருதி, செந்தி, வண்ணன், சேய், நிலமகள், பௌமன், மங்கலன், வக்கிரன் ஆகியனவாகும்.
உரிய பால் : ஆண் கிரகம்.
உரிய நிறம் : சிவப்பு நிறம்.
உரிய இனம் : சத்திரிய இனம்.
உரிய வடிவம் : குள்ள மான உயரம்.
உரிய அவயம் : கை, தோள்.
உரிய உலோகம் : செம்பு.
உரிய மொழி : தெலுங்கு, தமிழ்.
உரிய ரத்தினம் : பவளம்.
உரிய ஆடை : நல்ல சிவப்பு (பவள நிறம்) நிற ஆடை.
உரிய மலர் : செண்பகம்.
உரிய தூபம் : குங்கிலியம்.
உரிய வாகனம் : செம்போத்து, சேவல்.
உரிய சமித்து : கருங்காலி.
உரிய சுவை : உறைப்பு.
உரிய பஞ்ச பூதம் : பிருதிவி.
உரிய நாடி : பித்த நாடி.
உரிய திக்கு : தெற்கு.
உரிய அதி தேவதை : சுப்ரமண்யர்.
உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.
உரிய குணம் : ராசஜம்.
உரிய ஆசன வடிவம் : முக்கோணம்.
உரிய தேசம் : அவந்தி.
நட்புப் பெற்ற கோள்கள் : சூரியன், சந்திரன், வியாழன்.
பகைப் பெற்ற கோள்கள் : புதன், இராகு, கேது.
சமனான நிலை கொண்ட கோள்கள் : சனி, சுக்கிரன்.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை மாதங்கள்.
உரிய தெசா புத்திக் காலம் : ஏழு ஆண்டுகள்.
செவ்வாயின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 8, 12ல் இருந்தால் மறைவு.
நட்பு வீடு : சிம்மம், தனுசு, மீனம்.
பகை வீடு : மிதுனம், கன்னி.
ஆட்சி பெற்ற இடம் : மேஷம், விருச்சிகம்.
நீசம் பெற்ற இடம் : கடகம்.
உச்சம் பெற்ற இடம் : மகரம்.
மூலதிரி கோணம் : மேஷம்.
உரிய உப கிரகம் : தூமன்.
உரிய காரகத்துவம் : பிராத்ருக் காரகன்.
சகோதரன், பூமி, சுப்பிரமணியர், கோபம், குயவன், யுத்தம், இரத்தம், செம்பு, பவளம், அக்கினிபயம், கடன், உற்சாகம், அதிகாரம், அடுதி மரணம் இவைகளுகு எல்லாம் செவ்வாய் தான் காரகன்.
தியான சுலோகம் (தமிழ்)..
"சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாத ருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்குவாய் போற்றி போற்றி"
தியான சுலோகம் (சமஸ்கிருதம்)..
"தரணி கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத் காந்தி ஸமப்ரபம்|
குமாரம் ஸக்திஹஸ்தம் ச
மங்களம் ப்ரணமாம்யகம்||"
செவ்வாய் காயத்ரி..
"ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பௌம: ப்ரசோதயாத்||"
சந்திரன்.
சோதிடவியலில் இரண்டாவது கோளான சந்திரனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.
அமுக்கதிரோன்,
அமுதகிரணன், அம்புலி, அரி, அரிச் , அலவன், அல்லோன், ஆலோன், இந்து, இமகரன்,
இராக்கதிர், இவன், உடுபதி, உகுவின்வேந்தன், கலாநிதி, கலையினன், களங்கள்,
குபேரன், குமுதநண்பன், குரங்கி, சசி, சீதன், சுதாகரன், சோமன், தண்சுடர்,
கண்ணவன்,தாராபதி, தானவன், திங்கள், தெவ்வு, நிராசரன், நிசாபதி, நிலவு,
பசுங்கதிர், மதி, மதியம், மனேந்தி, முயலின் கூடு, விது, விபத்து,
வெண்கதிரோன், வேந்தன் ஆகியனவாகும்.
உரிய பால் : பெண் கிரகம்.
உரிய நிறம் : வெண்மை நிறம்.
உரிய இனம் : வைசிய இனம்.
உரிய வடிவம் : குள்ள மான உயரம்.
உரிய அவயம் : முகம், வயிறு.
உரிய உலோகம் : ஈயம்.
உரிய மொழி : இல்லை.
உரிய ரத்தினம் : முத்து.
உரிய ஆடை : வெண்மை (முத்து வெண்மை) நிற ஆடை.
உரிய மலர் : வெள்ளை அலரி.
உரிய தூபம் : சாம்பிராணி.
உரிய வாகனம் : முத்து விமானம்.
உரிய சமித்து : முருக்கு.
உரிய சுவை : உப்பு.
உரிய பஞ்ச பூதம் : அப்பு.
உரிய நாடி : சிலேத்தும நாடி.
உரிய திக்கு : வடமேற்கு.
உரிய அதி தேவதை : பார்வதி.
உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.
உரிய குணம் : வளர் பிறையில் சாந்தம், தேய்பிறையில் கொடூரம்.
உரிய ஆசன வடிவம் : சதுரம்.
உரிய தேசம் : யமுனா.
நட்புப் பெற்ற கோள்கள் : சூரியன், புதன்.
பகைப் பெற்ற கோள்கள் : இராகு, கேது.
சமனான நிலை கொண்ட கோள்கள் : செவ்வாய், வியாழன், சனி, சுக்கிரன்.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் இரெண்டேகால் நட்சத்திர அளவு.
உரிய தெசா புத்திக் காலம் : பத்து ஆண்டுகள்.
சந்திரனின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 3,6,8,12ல் இருந்தால் மறைவு.
நட்பு வீடு : மிதுனம், சிம்மம், கன்னி.
பகை வீடு : எல்லா வீடுகளும் நட்பு ( பகைவீடு கிடையாது).
ஆட்சி பெற்ற இடம் : கடகம்.
நீசம் பெற்ற இடம் : விருச்சிகம்.
உச்சம் பெற்ற இடம் : ரிஷபம்.
மூலதிரி கோணம் : ரிஷபம்.
உரிய உப கிரகம் : பரிவேடன்.
உரிய காரகத்துவம் : மாத்ரு காரகன்.
மேலும்
பராசக்தி, கணபதி, சுகபோசனம், வஸ்திரம், நித்திரை, சித்த சுவாதீனமின்மை,
சயரோகம், சீதளநோய்கள், இடக்கண், புருவம், குடை, உத்தியோகம், கீர்த்தி,
முத்து, வெண்கலம், அரிசி, உப்பு, மச்சம், உழவன், சத்திரம், சாமரம் , பலம்,
ஸ்நானாதிகம் இவைகளுக்கு எல்லம் சந்திரன் தான் காரகன்.
தியான சுலோகம் (தமிழ்)..
"எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சத்குரு போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி போற்றி"
தியான சுலோகம் (சமஸ்கிருதம்)..
"ததிஸங்க துஷாராபம்
க்ஷீரோதார்ணவ ஸம்பவம்|
நமாமி ஸஸிநம் ஸோமம்
ஸம்போர் மகுட பூஷணம்||"
சந்திர காயத்ரி..
"ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி
தந்நோ ஸோம: ப்ரசோதயாத்||"
சோதிடவியல் கோள்களின் நகர்வுகளை வைத்தே
தீர்மானிக்கப் படுகிறது. நவீன அறிவியல் வசதிகள் ஏதுமில்லாத ஒரு
காலத்திலேயே நமது முன்னோர்கள் கோள்களைப் பற்றியும் அவற்றின்
குணாதிசயங்களைப் பற்றியும் அவற்றின் பாதிப்புகள் குறித்தும் அறிந்து
தெளிந்து அருளியிருக்கின்றனர்.
அத்தகைய தெளிவுகளில் இருந்து ஒவ்வொரு கோளின் தன்மைகளை பட்டியலிடும் முயற்சியில், தலைமைக் கோளான சூரியன் பற்றி இன்றைய பதிவில் காண்போம்.
சூரிய குடும்பத்தின் முதன்மை கோளான சூரியனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.
அண்டயோனி, அரி, அரியமா, அருக்கன், அருணன், அலரி, அழரவன், அனலி, ஆதவன், ஆதவன், ஆயிரஞ்சோதி, இதவு, இருள்வலி, இனன், உதயம், எல், எல்லை, எல்லோன், என்றுள், எழ்ப்ரியோன் , ஒளி, ஒளியோன் , கதிரவன், கனவி, கிரணமாலி, சண்டன், சவிதா, சான்றோன், சித்ரபானு, சுடரோன், சூரன், செங்கதிரோன் , சோதி, ஞாயிறு ,தபணன், தரணி, திவாகரன், தினகரன், தனமணி, நாபாமணி, பகலோன், பகல், பங்கயன், பதங்கன், பரிகி, பர்க்கன், பனிப்பகை, பானு, மார்த்தாண்டன், மித்திரன், விசுரத்தனன், விண்மனி, விரிச்சிகன் , விரோசனன் , வெஞ்சுடர், வெயில், வேய்யோன் ஆகியனவாகும்.
உரிய பால் : ஆண் கிரகம்.
உரிய நிறம் : வெண்மை நிறம்.
உரிய இனம் : சத்திரிய இனம்.
உரிய வடிவம் : சம உயரம்.
உரிய அவயம் : தலை.
உரிய உலோகம் : தாமிரம்.
உரிய மொழி : சமஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளாம்.
உரிய ரத்தினம் : மாணிக்கம்.
உரிய ஆடை : சிவப்பு (இரத்த சிவப்பு) நிற ஆடை.
உரிய மலர் : செந்தாமரை.
உரிய தூபம் : சந்தனம்.
உரிய வாகனம் : மயில், தேர்.
உரிய சமித்து : எருக்கு.
உரிய சுவை : துவர்ப்பு.
உரிய பஞ்ச பூதம் : தேயு.
உரிய நாடி : பித்த நாடி.
உரிய திக்கு : கிழக்கு.
உரிய அதி தேவதை : சிவன்.
உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : நிலையான கோள்.
உரிய குணம் : மந்தம்(தாமஸ்ம்).
உரிய ஆசன வடிவம் : வட்டம்.
உரிய தேசம் : கலிங்கம்.
நட்புப் பெற்ற கோள்கள் : சந்திரன், வியாழன், செவ்வாய்.
பகைப் பெற்ற கோள்கள் : சுக்கிரன், சனி, ராகு, கேது.
சமனான நிலை கொண்ட கோள் : புதன்.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம்.
உரிய தெசா புத்திக் கா லம்: ஆறு ஆண்டுகள்.
சூரியனின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 8,12ல் இருந்தால் மறைவு.
நட்பு வீடு : விருச்சிகம், தனுசு, கடகம், மீனம்.
பகை வீடு : ரிஷபம், மகரம், கும்பம்.
ஆட்சி பெற்ற இடம் : சிம்மம்.
நீசம் பெற்ற இடம் : துலாம்.
உச்சம் பெற்ற இடம் : மேடம்.
மூலதிரி கோணம் : சிம்மம்.
உரிய உப கிரகம் : காலன்.
உரிய காரகத்துவம் : சூரியன் பித்ருகாரகன்.
மேலும்
பிதா, ஆத்மா, சிராசு, தந்தம், வலது நேத்ரம், பித்தம், ஒருதலை நோவு போன்ற
சிரசு ரோகங்கள், சித்தசுவாதீனம், சௌரியம், பிரதாபம், தைரியம், இராஜசேவை,
அரச உத்தியோகம், யாத்திரை, கிராம சஞ்சாரம், இரசவாதம், யானை, மலை, காடு,
தபசு, சைவானுஷ்டானம் இவைகளுக்கு எல்லாம் சூரியன்தான் காரகன்.
தியான சுலோகம் (தமிழ்).
"சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள்
களைவாய் போற்றி போற்றி"
தியான சுலோகம் (சமஸ்கிருதம்).
"ஜபாகுஸும ஸங்காஷம்
காஸ்யபேயம் மஹாத்யுதிம்|
தமோரிம் ஸர்வ பாபக்நம்
ப்ரணதோஸ்மி திவாகரம்||"
சூர்ய காயத்ரி.
"ஓம் அச்வ த்வஜாய வித்மஹே; பாசஹஸ்தாய தீமஹி
தன்நோ ஸூர்ய: ப்ரசோதயாத்||"
"ஓம் பாஸ்கராய வித்மஹே; மஹத்யுதிகராய தீமஹி
தந்நோ ஆதித்ய: ப்ரசோதயாத்||"
No comments:
Post a Comment