இலங்கையில்,
இராமாயணம் சம்பந்தப் பட்ட 59 இடங்களை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டு
காட்டியுள்ளனர். அவற்றில் சில இடங்களை இங்கு காண்போம்.
காவல் தெய்வம்
இராவணன் ஆட்சிக் காலத்தில் இலங் கைக்கு ஒரு காவல் தெய்வம் இருந்ததாக வும்;
அதை வென்ற பின்னரே இலங்கைக் குள் இராமபிரானின் படைகள் நுழைந்த தாகவும்
இராமாயண காவியம் கூறுகிறது. அதை நினைவுபடுத்தும் விதமாக பயங்கரமான
தோற்றத்துடன் ஒரு காவல் தெய்வ சிற்பத்தை அமைத்துள்ளனர். ஆனால் இது பிற்காலத்தில் அமைக்கப்பட்ட சிலையே.
இராவணனின் கோட்டை
சுற்றிலும் மலைத்தொடர்களும், நடுவே அடர்ந்த காடுகளும் அமைந்த அகன்ற
பகுதியை, இராவணனின் கோட்டை இருந்த பகுதியாகச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இதற்கு "நக்கார்லா' மலைப்பகுதி என்று பெயர். இங்கே நூறு அடி அகலமுள்ள வாய்
போன்ற குகையும் இன்னும் சில குகைகளும் உள்ளன. "பண்டர்வெலா' என்று
அழைக்கப்படும் இவற்றை இராவணன் குகைகள் என்றும் குறிப்பிடுகின்றனர்.
இராவணன் நீர்வீழ்ச்சி
இதே பகுதியில் ஒரு பெரிய அருவி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியும் இராவணன் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
சீதை கோட்டை
இராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதை சிறை வைக்கப்பட்ட இடம் "சீதா கொடுவா'
என்று வழங்கப் பெறுகிறது. தற்போது இவ்விடத்தில் விமான நிலையம்
அமைந்துள்ளது.
ராம - இராவண யுத்த களம்
இங்கே
முற்காலத்தில் ஒரு ஏரியும் அதை யொட்டி அகன்ற வெட்ட வெளிப் பரப்பும் இருந்
திருக்கிறது. இங்கேதான் இரு தரப்புப் படை களும் மோதியிருக்கின் றன.
இராவணன்மீது பிரம்மாஸ்திரம் எய்யும் போது, அதன் வெப்பம் தன்னைத் தாக்காமல்
இருக்க ஏரி நீருக்குள் மூழ்கி நின்று அஸ்திரத்தை எய்தாராம் ராமர்.
"டுனுவிலா' என்று அழைக்கப்படும் இப்பகுதி யில் தற்போது ஏரி இல்லை.
இராவணனின் உடல் வைக்கப்பட்ட இடம்
போர் நிகழ்ந்த பகுதிக்கு அருகே ஒரு உயரமான மலை இருக்கிறது. இறந்த
இராவணனின் உடல் அம்மலை உச்சியில் தான் வைக்கப்பட்டதாம். ஆனால் அந்த மலைமீது இதுவரை யாரும் சென்று பார்த்ததில்லை என்கிறார்கள்.
சீதை தவம் செய்த குன்று
இப்பகுதிக்கு அருகில் சிறிய நதி ஒன்று ஓடுகிறது. இதன் அருகே உள்ள
குன்றில்தான் சீதை அழுதவண்ணம் தவம் செய்தாளாம். அவள் கண்ணீர் இந்த நதியில்
கலந்ததால் நதி நீர் உப்பாகி எதற்கும் பயன்படாமல் போய் விட்டதாம். இந்த நதி
வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.
அசோகவனம்
சீதை
சிறைவைக்கப்பட்ட பகுதியை அசோகவனம் என்று இராமாயணம் கூறுகிறது. அதை
ஆராய்ச்சியாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர். இப்பகுதியில் தற்போதும் சில
அசோக மரங்கள் உள்ளன.
சீதை கோவில்
பல ஆண்டுகளுக்குமுன்
இப்பகுதியில் வாழ்ந்த மலைவாழ் மக்கள் ஒரு சிலையைக் கண்டெடுத்தனர். அது பெண்
சிலையாக இருந்ததால் சீதையின் சிலை என்று எண்ணிய அவர்கள், அங்கேயே ஒரு மேடை
அமைத்து அந்தச் சிலை யைப் பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர். பின் னாளில்
அதே இடத்தில் தென்னிந்திய முறைப்படி ஒரு ஆலயத்தை அமைத்த அந்த மக்கள், சீதை
திரு வுருவத்துடன் ராமர், லட்சுமணர் திருவுருவங் களையும் பிரதிஷ்டை செய்து
வணங்கி வருகின் றனர். அக்கோவிலுக்கு "சீதா இலாயா' என்று பெயர். அதாவது சீதை
கொலுவிருக்கும் கோவில்.
இக்கோவிலுக்கு அருகே ஒரு பகுதியில்
சிறிதும் பெரிதுமான பாதச் சுவடுகள் காணப்படுகின்றன. இவற்றை அனுமனின்
பாதங்கள் என்கிறார்கள். இதற்கு அருகில் அகன்ற தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.
இதை அனுமன் ஓய்வெடுத்த பகுதி என்று குறிப்பிடுகின்றனர்.
சீதையின் அக்னிப் பிரவேசம்
இந்தத் தோட்டப்பகுதிக்கு அருகே ஒரு புத்தர் கோவில் உள்ளது. இதில்
புத்தரின் பல் இருப்பதாகக் கூறுகிறார்கள். கோவிலை நன்றாக மூடிவிட்டு,
இருண்டு காணப்படும் கோவிலுக்குள் துளை வழியாகப் பார்த்தால் அந்தப் பல்
பிரகாசமாகத் தெரிகிறதாம். அந்த இடத்தில்தான் இராமாயண காலத்தில் சீதை
அக்னிப் பிரவேசம் செய்தாளாம். தற்போது அங்கே ஒரு பௌத்த ஸ்தூபி உள்ளது.
இதுபோல இன்னும் பல அடையாளங் கள் இங்கே உண்டு. இலங்கையின் தலைநகர்
கொழும்புவிலிருந்து 260 கி.மீ. தொலை விலுள்ள நுவரேலியாவைச் சுற்றியுள்ள
பகுதிகளில்தான் மேற்கண்ட அடையாளங் கள் காணப்படுகின்றன.
சீதை கோவிலுக்கு மலைத் தோட்டத் தமிழர்களும், உலக சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர்.
Friday, May 24, 2013
Subscribe to:
Post Comments (Atom)
முத்துசாமி தீட்சிதர்
மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...
-
இது புதனின் நட்சத்திரம். 1. கார்த்திகை 2. மிருகசீரிஷம் 3. புனர்பூசம் 4. பூரம் 5. சித்திரை 6. சுவாதி 7. விசாகம் 8. அனுஷம் 9. திருவோணம் 10. அவ...
-
ஸ்ரீ பைரவர் 3000 ஆண்டுகளாக இந்துக்களாலும் , கிறிஸ்துவர்களாலும் , புத்தமதத்தினராலும் , சைவம் மற்றும் வைணவ மார்க்கத்தினராலும் பல்வேறு பெயர்களி...
No comments:
Post a Comment