Wednesday, May 29, 2013

நெற்றிக் கண்




மக்களின் ஆன்மீக நிலை பஞ்சபுதங்களாலும், நட்சத்திரங்களாலும் அடிப்படையில் மாறுபடுவதால் ஒரே வித்தை (பயிற்சி) பலருக்கு பலவிதமான அனுபவத்தைக் கொடுக்கும். ஆனால் முடிவு ஒன்று தான்

ஆண்கள் பாதரச அம்சம். பெண்கள் கந்தக அம்சம். பெண்களின் சக்தி மாதம் ஒரு முறை குறைந்து விடுகிறது. அதனால் யோகமுறையில் அவர்களால் முன்னேறிச் செல்ல முடியவில்லை.


யோக நிலையில் மிக உயர்ந்த நிலையாகக் கருதப் படுவது நெற்றிக் கண் திறப்பது. நெற்றிக் கண் திறப்பது என்பது பெரிய செயல்.



நெற்றிக்கண்ணைத் திறக்க ஒரு எளிய பயிற்சி முறை:
நாட்டு மருந்துக் கடையில் சுருமாக்கல் அல்லது அஞ்சனக்கல் எனக் கேளுங்கள். 5 கிராமிற்குக் குறையாமல் 10 கிராமிற்கு மிகாமல் ஒரே கல்லாக வாங்கவும். கோணல் மாணலாக இருக்கும். அதைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். வாங்கிய கல்லை உப்புத் தாளில் தேய்த்துக் கொள்ளவும்.

அதிலுள்ள ஒளிக்கற்றை சூட்சுமமாக வெளிப்படும். தரையில் விரிப்பு விரித்துத் தலையணை வைக்காமல் விளக்குகளை அணைத்து இருளில் படுக்கவும். வடக்கு தவிர இதரப் பக்கம் தலை வைத்து மல்லாந்து படுக்க வேண்டும்.

இரவில் சுமார் 7 மணிக்குப் பால் சிறிது சாப்பிட்டு 10 மணிக்கு மேல் இப்பயிற்சியை ஆரம்பிக்கலாம். அஞ்சனக் கல்லை கண்களை மூடியோ அல்லது மூடாமலோ இரு புருவங்களுக்கு மத்தியில் வைக்கவும். சுருமாக்கல்லில் உள்ள கண்ணுக்குத் தெரியாத தெய்வீக ஒளிக்கற்றைகள் நெற்றிக் கண் ஜவ்வை சிறிது சிறிதாக கிழிக்கும். ஒளி சிறிது சிறிதாக வெளிவரும்.
அதே கல்லை உபயோகித்துப் பின் மறுநாளும் பயிற்சி செய்யலாம். அவசரப் பட வேண்டாம். பொறுமையும் நிதானமும் அடக்கமும் தேவை.

ஒளி நிலை கூடுதலாகி நெற்றிக்குள்  பு+ரண சந்திரன் போல் காட்சி கொடுக்கும். அருள்நிலை பெருகும். 90 நாள் பயிற்சியில் வெற்றி பெறுவீர்கள் .

பொதுவாக ஏதாவது ஒரு பொருளைப் படுத்த நிலையில் நெற்றி நடுவில் வைத்தால் அதில் ஒரு உறுத்தல் ஏற்படும். பின் அங்குள்ள இருள் விலகும்.

சங்கரன் கோவிலில் அம்பாளுக்கு மாவிளக்குச் செய்து நெய்யு+ற்றித் தாமரை நுhல் போட்டு மல்லாந்து படுத்து நெற்றியில் வைத்து நோன்பு நோக்கின்றனர். இதுவும் ஒரு முறையாக செய்கின்றனர்.

குண்டலினி யோகப் பயிற்சிக்கு மட்டும் கால வரையறை கிடையாது. மற்ற எல்லா வித்தைகளையும் 90 நாள் தொடர்ச்சியான சாதனையால் முடித்து விடலாம். இந்த காலத்தில் முடிக்க முடியாதவர்கள் மன ஊக்கத்துடன் பயிற்சியைத் தொடரலாம்.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...