கடுகில் இரண்டு வகை உண்டு. 1) கருங்கடுகு, 2) வெண்கடுகு,
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. இதிலிருந்து இதன் காரத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.
இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும்.
கடிப்பகை யெனவரு கடுகின் நாளு
மிளகில் வணத்தோடு மூன்றுமொன்றாக்கி
யடுபுன லருந்துமு னயிலவை கறைதொறும்
வளிமுதன் மூலிகை வலியெலா மகலும்
பச்சடி முதற்கறி பண்பினா லயிலினு
நிச்சய மாயுணி கழ்பிணி யறுக்குமே
(தேரையர் குணபாடம்)
குணம்
வாந்தியுண்டாக்கி
வெப்பமுண்டாக்கி
தடிபுண்டாக்கி,
கொப்புளம் எழுப்பி
செரிப்புண்டாகி ,
சிருநீர்பெருக்கி ,
செரிமானத்தைத் தூண்ட
செரிமானத்தைத் தூண்டும் சக்தி கடுகுக்கு உண்டு. தினமும் உணவில் கடுகை சேர்த்துக் கொள்வது நல்லது. கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகு பொடி, உப்பு சேர்த்து காலையில் ஒரு ஸ்பூன், அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறைப் போக்கும்.
இருமல் நீங்க
கடுகுப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்த இருமல் நீங்குவதுடன் தலைவலியுடன் உண்டாகும் இருமல், மூக்கில் நீர் வடிதல், அதிக உமிழ்நீர் சுரத்தல் போன்றவை குறையும்.
வயிற்றுவலி குணமாக
அஜீரணக் கோளாறால் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றில் வலியை உண்டாக்கும். இந்த வயிற்று வலி நீங்க கடுகை பொடி செய்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும்.
நஞ்சு உண்டவர்களுக்கு
சிலர் தெரிந்தோ தெரியாமலோ நஞ்சை உண்டிருந்தால் அவர்களுக்கு முதலில் கடுகை அரைத்து நீரில் கலந்து கொடுத்தால் வாந்தி உண்டாகும் இந்த வாந்தியுடன் உள்ளிருக்கும் நஞ்சானது வெளியேறும். சில வகையான காணாக்கடிகளுக்கு கடிபட்ட இடத்தில் கடுகு அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.
இடிகாச நாசிக்கு ரீளைகபம் பித்தங்
கடிவாத சீதங் கடுப்போ-குடலிற்
படுகோட்டு நோயென்னும் பங்கிவைக ளைப்புண்
கடுகோட்டு மேன்மருந்த காண்.
மந்தமயக் கம்வாதம் வாய்நீர்ச் சுழற்றலறு
முந்து சுகப்பிரச வங்களுண்டா-மிந்துஙதன்
மானே கிராணிகுன்ம மாறுமுத் தோடமும்போம்
தானே கடுகிற்குத் தான்
(அகத்தியர் குணபாடம்)
கடுகுத்தூள், அரிசிமாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களிபோல் கிளறி அதை இருமல், இரைப்பு இருப்பவர்கள் மார்பு, தொண்டைப் பகுதிகளில் தடவி வந்தால் இருமல் இளைப்பு நீங்கும். தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப் போடலாம்.
சிறுநீர் பெருக்கி
கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.
கடுகு எண்ணெய்
கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வட இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். கொழுப்பு சத்து அதிகமில்லாத இந்த எண்ணெய் இதய நோயை தடுக்கும்.
விக்கல் நீங்க
வெந்நீர் - 130 மி.லி. எடுத்து அதில் கடுகுத்தூள் - 8 கிராம் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கடுகு, மிளகு, உப்பு மூன்றையும் ஒரே அளவு சேர்த்து சாப்பிட்டுவிட்டு அதன்பிறகு வெந்நீர்
குடிக்க வேண்டும். இப்வபடி செய்வதால் பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்வபடும் உடல் உபாதைகள் நீங்கும்.
விஷம், பூச்சி மருந்து, தூக்க மாத்திரை போன்றவற்றை சாப்பிட்டவர்களுக்கும
உட்தகொள்ளக் கொடுத்தால் உடனடியாக வாந்தி எடுத்து விஷம் வெளியேறும்.
தேனில் கடுகை அரைத்து உட்உகொள்ளக் கொடுக்க இருமல், கபம், ஆஸ்துமா குணமாகும்.
கடுகை தூள் செய்து வெந்நீரில் ஊற வைத்து வடித்து கொடுக்க விக்கலை குணமாக்கும்.
கடுகை அரைத்து பற்றிட ரத்தக்கட்டு, மூட்டு வலி தணியும்.\
கை, கால்கள் சில்லிட்டு விரைத்துக் காணப்பட்டால் கடுகை அரைத்து துணியில் தடவி கை, கால்களில் சுற்றி வைக்க வெப்பத்தை
உண்கடாக்கும். உடனடியாக விரைப்பு சீராகும்.
கடுகு, பூண்டு, வசம்பு, கருவாப்பட்டை, கழற்சிக்காய், கடுகு, ரோகிணி ஆகியவற்றை சம அளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி
இருவேளை வீதம் ஒரு வாரம் குடித்து வர வாதம், வாய்வு, குத்தல் பிரச்சினை குணமாகும்.
கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிக் காதில் சில சொட்டுகள் இட தலைவலிக்கு நிவாரணம் கிட்டும்.
No comments:
Post a Comment