Thursday, May 30, 2013

கசகசா



கசகசாவின் மருத்துவக் குணம்

தேரையர் கசகசாவின் மருத்துவக்குணம் பற்றிக் குறிப்பிடுகையில்

‘கிருமி நமச்சல் கிராணி அதிசாயம்
சிரநீர் நித்திரைபங்கம் போம் செப்பில்
உருவழகும் காந்தியும் உண்டாகும் கசகசாவின்
குணத்தை தேர்ந்நவர்க்கு விள்துவமாம் தேர்’
என குறிப்பிடுகின்றார்.

இங்கு கிருமி என்பது நுன் கிருமி யைக் கருது கின்றார். கிருமியை அழிக்க வல்லது இது மட்டு மல்ல கடியுடன் கூடிய கிரந்தியை கட்டுப்படுத்த வல்லது.

சிரசிலே ஏற்படும் நீர் கோருப்பதால் ஏற்படும் தலை வலி தலைப்பாரம் போன்றவற்றை போக்குவதுடன் ஆழ்ந்த நித்திரைக்கு தடையாவற்றை நீக்கி நித்திரை செய்யக் கூடியதாக இருக்கும்.

அதுமட்டுமல்ல உருவழகும் காந்தியும் உண்டாகும் என்கின்றார். கசகசாவை பயன் படுத்துவதனால் உடல் அழகு பெறுவதுடன் மற்றவர்களைகவரும்தன்மையுடையதாக கருகின்றார்.

இவ்வாறு சிறப்பு மிக்கது கசகசா இதை பொதுவாக சருமத்தைப் பாதுகாக்க பயன்படுத்ப்படுகின்றது. வறன்ட சருமத்தைப் பாதுகாக்க பொன் வறுவலாக வறுத்து அரைத்து முகத்தில் பூசலாம். என்னை பசையான சருமத்துக்கு பயத்தம் மா சேர்த்;து அரைத்து பூசலாம். இதனால் சருமம் பளபளப்பாகும். குளிப்பானங்களில் கசகசாவை இட்டும் அருந்த முடியும். உடலுக்கு குளிர்ச்சி தரும். உணவுப் பொருட்களை தயாரிக்கும் போதும் கசகசாவைப் பயன்படுத்து கின்றனர் (பொதுவாக அசைவ உணவுதயார்ப்பின்போது) இதில் போதையும் உண்டு இதனாலேயே ’நித்திரைபங்கம் போம்’ என தேரையர் குறிப்பிட்டுள்ளார்.

கசகசா சில திண்பண்டங்களில் ருசிக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இது தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது. எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும். ஓயாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை மைபோல் அரைத்து, குழந்தையின் தோப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறையும். 10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த இடத்தில் தடவினால் அம்மை வந்த தடம் மறைய தொடங்கும்

வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...