Friday, May 3, 2013
Jeeva Samadhi in and around Pondicherry
புதுவை -சித்தர்கள் வாழ்ந்த ஒரு சித்த பூமி.
புதுவை - தவசீலர்களுக்கு ஞானத்தை வாரி வழங்கிய ஒரு ஞான பூமி. புதுவை - பரம்பொருளின் அருள் பெற்ற ஒரு புண்ணிய பூமி.
புதுச்சேரி என்ற இச்சிறு நிலப்பகுதியில் ஐந்நூறு ஆண்டுகளுக்குள் சுமார் 32 ஆத்ம ஞானிகள் சமாதி எழுந்தருளியுள்ளார்கள்.அவர்கள் இவ்வுலகின் எல்லா
பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து கடுந்தவம் மேற்கொண்டு இறை தரிசனம் பெற்று இறைவனோடு ஐக்கியமாகி விட்டார்கள்.
ஆத்ம ஞானிகளை தன்னகத்தே அன்போடு அழைத்து அவர்களின் ஆத்ம சாதனைக்கு உதவியும் செய்து அவர்களுக்கு வெற்றியும் தருகிறது புதுவை என்ற இப்புண்ணிய பூமி. ஞானம் விளைகின்ற காரணத்தால், ஞானிகள் தவம் புரியும் இடமாக இருப்பதால்-இப்புதுவையை ஞான பூமி என்றே அழைக்கிறார்கள்.
புதுவையில் சித்தர்களின் ஜீவசமாதி அமைவிடங்கள்
1. ஸ்ரீ சித்தானந்தா சுவாமிகள்:-கருவடிகுப்பம் (முத்தியால்பேட்டை- லாஸ்பேட்டை போகும் வழியில்)
2. ஸ்ரீ தொள்ளைக்காது சுவாமிகள்:-ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயம்.
3. ஸ்ரீ அக்கா பரதேசி சுவாமிகள்:-வாழைக்குளம்-வைத்திக்குப்பம் போகும் வழியில்.
4. ஸ்ரீ நாராயண பரதேசி சுவாமிகள்:-ஸ்ரீ அக்காமடம் சாமி கோவிலினுள்.
5. ஸ்ரீ கம்பளி ஞானதேசிக சுவாமிகள்:-தட்டாஞ்சாவடிதொழிற்பேட்டை பின்புறம்-வடக்கில்.
6. ஸ்ரீ பெரியவர்க்கு பெரியவர்:-ஸ்ரீ கம்பளி சாமி மடத்தினுள்.
7. ஸ்ரீ யாழ்ப்பானம் கதிர்வேல் சுவாமிகள்:-பிருந்தாவனம் 3வது தெரு-சித்தன்குடி அருகில்.
8. ஸ்ரீ மண்ணுருட்டி சுவாமிகள்:-திருவள்ளூவர் பஸ்நிலையம் பின்புறம் தென்னஞ்சாலை வீதியில் -கோவிந்தசாமி தோட்டத்தில் உள்ளது.
9. ஸ்ரீ தேங்காய் சுவாமிகள்:-அரும்பார்த்தபுரம் ரயில்வே கேட் தாண்டி மின் துறை எதிரில்.
10. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்:-வில்லியனூர் பைபாஸ் அருகில்.
11. ஸ்ரீ தட்ஷிணாமூர்த்தி சுவாமிகள்:-பள்ளிதென்னல்,ஐயனார் கோவில் பின்புறம் உள்ளது.
12. ஸ்ரீ குருசாமி அம்மாள்:-அரியூர் சர்க்கரை ஆலை தாண்டியவுடன் உள்ளது.
13. ஸ்ரீ மகான் படே சாஹிப் சுவாமிகள்:-கண்டமங்களம் ரயில்வே கேட்டில் வலது புறம் திரும்பினால் 2.5கி.மீ தொலைவில் உள்ளது.
14. ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்:-ஏம்பலம்(நல்லாத்தூர்-சிவன் கோவில்) அருகில் உள்ளது ..வில்லியனூரிலிருந்து 8 கி மீ தொலைவு.
15. ஸ்ரீ அம்பலத்தாடப்பர் சுவாமிகள்:-
16. ஸ்ரீ அழகர் சுவாமிகள். (சாம்பசிவ சுவாமிகள்):- தென்னம்பாக்கம்(ஏம்பலம்) ஸ்ரீ ஐயனார் கோவில் அருகில் உள்ளது.
17. ஸ்ரீ வண்ணாரப் பரதேசி சுவாமிகள்: -ஒதியம்பட்டு-வில்லியனூர் சாலையில் உள்ளது.
18. ஸ்ரீ சக்திவேல் பரமானந்த சுவாமிகள்:-AFT மில் பின்புறம், காராமணிகுப்பம் ரயில்வே கேட் அருகில் உள்ளது.
19. ஸ்ரீ மௌலா சாஹிப் சுவாமிகள்:-ரயில் நிலையம் அருகில், முல்லா வீதியில் உள்ளது.
20. ஸ்ரீ சடையப்பர் சுவாமிகள்:-முத்திரையர்பாளையம், ராணி மருத்துவமணை அருகில் 2 வது தெருவில் உள்ளது.
21. ஸ்ரீ சுப்ரமணிய அபிரதா சச்சிதானந்த பாரதி சுவாமிகள்: -எல்லைபிள்ளை சாவடி
ஸ்ரீ சாராதாம்பாள் கோவிலில் உள்ளது.
22. ஸ்ரீ லஷ்மண சுவாமிகள்:-புத்துப்பட்டு ஐயனார் கோவில் பின்புறம் 300மீ தொலைவில்
ஓடைக்கு அருகில் உள்ளது.
23. ஸ்ரீ நாகலிங்க சுவாமிகள்:-அம்பலத்தாடையார் தெருவில்,காந்தி வீதி-பாரதி
வீதி இடையில் உள்ளது.
24. ஸ்ரீ அரவிந்தர்:-அகத்தியர் தவம் செய்த இடமான செட்டி தெருவில்( ஸ்ரீ மணக்குள
விநாயகர் கோயில் அருகில்) உள்ளது.
25. ஸ்ரீ அன்னை:-ஸ்ரீ அரவிந்தர் சமாதி அருகில்.
26. ஸ்ரீ பவளக்குடி சித்தர்.(பவழங்கு சித்தர்):- சோம்பட்டு(மண்ணாடிபட்டு) கிராமம்.
27. ஸ்ரீ வேதாந்த சுவாமிகள்:-அம்பிகா தியேட்டர்- கருவடிகுப்பம் போகும்
சாலையில் -வசந்த் நகரில் உள்ளது.
28. ஸ்ரீ கோவிந்த சுவாமிகள்:-
29. ஸ்ரீ சட்டி சுவாமிகள்:-கதிர்காமம்.
30. ஸ்ரீ சந்தானந்த சுவாமிகள்:-எல்லைப்பிள்ளை சாவடி, சிருங்கேரி மடம்(சேரத்தோப்பு எதிரில்)
31.ஸ்ரீ கணபதி சுவாமிகள்:-கருவடிகுப்பம்,இடையன்சாவடி போகும் பாதையில் --(விமான தளம் பின்புறம்) கடைசியில் உள்ளது.
32. ஸ்ரீ வியோமா சுவாமிகள்.(திருக்காஞ்சி சாமியார்):- கணுவாப்பேட்டை(வில்லியனூர்).
33. ஸ்ரீலஸ்ரீ அருள் சக்தி அன்னையின் சித்தர் பீடம்:- (ஸ்ரீ ரெட்டியப்பட்டி சுவாமிகள் சீடர் ) பிள்ளையார்குப்பம்(கிருமாம்பாக்கம்)
34. ஸ்ரீ ஞானகுரு குள்ளச்சாமிகள்:-
சித்தர்கள்-புதுவைக்கு அருகில் உள்ள ஊர்களில்.
1. ஸ்ரீ சிவஞான பாலைய சுவாமிகள்:-பொம்மையார்பாளையம்
2. ஸ்ரீ சிவஞான பால சித்தர்:-மைலம் முருகர் கோவிலில்.
3. ஸ்ரீ கழுவெளி சித்தர்.(குண்டலினி சித்தர்):-திருசிற்றம்பலம் கூட்டு ரோட்டிலிருந்து
- இடையன்சாவடி போகும் வழியில்,இரும்பை மாகாளத்தில் உள்ளது.
4. ஸ்ரீ தேவராசு சுவாமிகள்:-சூணாம்பேட்டிலிருந்து 8 கி மீ தொலைவில் உள்ள வன்னிய நல்லூரில் உள்ளது.
5. ஸ்ரீ பகவந்த சுவாமிகள்:-கடலூர்,புதுபாளையம் கடைத்தெரு அருகில்.
6. ஸ்ரீ தயானந்த சுவாமிகள்:-ஸ்ரீ பகவந்த சுவாமிகள் சமாதிக்கு பின்புறம்.
8. ஸ்ரீ சற்குரு நித்யானந்த சுவாமிகள்:-பட்டாம்பாக்கம்-(அண்ணா கிராமம்) அருகில்
கோழிபாக்கம்.
9. ஸ்ரீ சுப்ராய பரதேசி சுவாமிகள்:-மைலம்(மூலவர் இருக்கும் இடத்தில்).
10. ஸ்ரீ ரஙகசாமி சித்தர் சுவாமிகள்:-சோம்பட்டு (திருக்கனூர் வழி).
11. ஸ்ரீ அப்பர் சுவாமிகள்:-ஏம்பலம்.
12. ஸ்ரீ உலகநாத களரானந்த சுவாமிகள்:-சோரியாங்குப்பம் பள்ளி (பாகூர்).
13. ஸ்ரீ காந்தசாமி சுவாமிகள்:-காரணப்பட்டு.
Subscribe to:
Post Comments (Atom)
முத்துசாமி தீட்சிதர்
மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...
-
இது புதனின் நட்சத்திரம். 1. கார்த்திகை 2. மிருகசீரிஷம் 3. புனர்பூசம் 4. பூரம் 5. சித்திரை 6. சுவாதி 7. விசாகம் 8. அனுஷம் 9. திருவோணம் 10. அவ...
-
ஸ்ரீ பைரவர் 3000 ஆண்டுகளாக இந்துக்களாலும் , கிறிஸ்துவர்களாலும் , புத்தமதத்தினராலும் , சைவம் மற்றும் வைணவ மார்க்கத்தினராலும் பல்வேறு பெயர்களி...
No comments:
Post a Comment