மந்திரம் என்ற சொல் நினைபவனை காப்பது என்ற பொருள் தரும்.
மந் - என்றால் நினைதல், அறிதல் என்றும், திரம் - காத்தல் என்றும் பொருள்படும்.
எனவே மந்திரம் என்பது நினைப்பவனை காப்பது என்று பொருள்படும்.
1. மூல மந்திரம்,
2. பீச மந்திரம்,
3. பஞ்ச மந்திரம்,
4. சடங்க மந்திரம்,
5. சங்கிதா மந்திரம்,
6. பத மந்திரம்,
7. மாலா மந்திரம்,
8. சம்மேளன மந்திரம்,
9. காயத்திரி மந்திரம்,
10. அசபா மந்திரம்,
11. பிரணாப்பிரதிட்டா மந்திரம்,
12. மாதிருகா மந்திரம்,
13. மோன மந்திரம்,
14. சாத்திய மந்திரம்,
15. நாம மந்திரம்,
16. பிரயோக மந்திரம்,
17. அத்திர மந்திரம்,
18. விஞ்சை மந்திரம்,
19. பசிநீக்கு மந்திரம்,
20. விண்ணியக்க மந்திரம்,
21. வேற்றுரு மந்திரம்,
22. துயில் மந்திரம்,
23. திரஸ்கரிணீ மந்திரம்,
24. சட்கர்ம மந்திரம்,
25. அஷ்ட கர்ம மந்திரம்,
26. பஞ்சகிருத்திய மந்திரம்,
27. அகமருடண மந்திரம்,
28. எகாஷர மந்திரம்,
29. திரயஷரி மந்திரம்,
30. பட்சாஷார மந்திரம்,
31. சடஷர மந்திரம்,
32. அஷ்டாஷர மந்திரம்,
33. நவாக்கரி மந்திரம்,
34. தசாஷர மந்திரம்,
35. துவாதசநாம மந்திரம்,
36. பஞ்சதசாக்கரி மந்திரம்,
37. சோடஷாஷரி மந்திரம்,
38. தடை மந்திரம்,
39. விடை மந்திரம்,
40. பிரசாத மந்திரம்,
41. உருத்திர மந்திரம்,
42. சூக்த மந்திரம்,
43. ஆயுள் மந்திரம்,
44. இருதய மந்திரம்,
45. கவச மந்திரம்,
46. நியாச மந்திரம்,
47. துதி மந்திரம்,
48. உபதேச மந்திரம்,
49. தாரக மந்திரம்,
50. ஜெபசமர்பண மந்திரம்,
51. ஜெப மந்திரம் என பலவகைப்படும்.
இவையன்றி
52. நீலகண்ட மந்திரம் ,
53. மிருத்யுஞ்சய மந்திரம் ,
54. தஷிணாமூர்த்தி மந்திரம் ,
55. சரப மந்திரம் ,
56. வீரபத்ர மந்திரம் ,
57. பைரவ மந்திரம் ,
58. விநாயக மந்திரம் ,
59. சண்முக மந்திரம் ,
60. நரசிங்க மந்திரம் ,
61. நவகிரக மந்திரம் ,
62. வாலை மந்திரம் ,
63. புவனை மந்திரம் ,
64. திரிபுரை மந்திரம் ,
65. துர்க்கை மந்திரம்,
66. அசுவாரூடி மந்திரம்,
67. சப்தமாதர் மந்திரம்,
68. முப்பத்துமுக்கோடி தேவர்கள் மந்திரம்,
69. பதினெண் கண மந்திரம்,
70. யோகினியர் மந்திரம்,
காலக் கடவுளர் முதலாக உள்ள எல்லாக் கடவுளருக்கும் தனித் தனியே சிறப்பாய்
உள்ள மந்திரங்களும், சல்லிய தந்திராதி சித்த மந்திரங்களும், திராவிடாதி
லௌகீக தேசத்தில் ( நமது பாரத தேசத்தில் ) உள்ள பாஷைகளில்
( மொழிகளில் ) உள்ள மந்திரங்கள் என்று எண்ணிறைந்த கணக்கில் அடங்காத மந்திரங்கள் உள்ளன.
இவ்வாறு பல திறன் உள்ளதாகவும், எண்ணிரைந்ததாகவும் உள்ள மந்திரங்கள் அனைத்தும் ஏழுகோடி மந்திரங்களில் அடங்கும்.
இதனை வடநூலார் சப்த கோடி மகா மந்திரம் என்பர்.
ஏழு கோடி மந்திரம் - ஏழு வகையான முடிபினை உடைய மந்திரம் என்பது பொருள்.
அவையாவன
1. நம,
2. சுவதா,
3. சுவாகா,
4. வௌஷடு,
5. வஷடு,
6. உம்,
7. படு என்பனவாம்.
இதற்க்கு இவ்வாறு இல்லாமல் ஏழுகோடியாகிய எண்களை கொண்ட மந்திரங்கள் என்றும்
அவை இது இதுவென்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கல்பம் என்னும் வட நூலில் பொருள்
கூறப்பட்டிருக்கிறது