ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று மாலை 6 மணியில் இருந்து 8 மணிக்குள் இதைச் செய்ய வேண்டும்.
ஒரு பித்தளைத் தாம்பாளத்தின் நடுவில் சிறிது பச்சரிசி மாவும், கற்கண்டுப் பொடியும் கலந்து வைத்து, அதைச் சுற்றிப் பதினொரு வெற்றிலைகளைத் தாமரை போலப் பரப்பி வைக்க வேண்டும்.
வெற்றிலைகள் ஒவ்வொன்றிற்கும் மஞ்சள், குங்குமம் கொண்டு பொட்டிட வேண்டும்.
தட்டின் இடப்புறமாக சர்க்கரை போடாத காய்ச்சிய பசும்பாலை ஒரு டம்ளரில் வைக்க வேண்டும்.
தட்டின் வலப்புறமாக மஞ்சள் நிறத் துணி கொண்டு திரி போட்ட நெய் தீபமேற்றி வைக்க வேண்டும்.
பச்சரிசியில் மஞ்சள் கலந்து அட்சதை தயார் செய்து கொள்ள வேண்டும். பின்னர்,
‘ஓம் நமோ யதி வதீம்ஸ
வஸீகா வாக் விலாஸினி
காமேஸி மாங்கல்ய தாரிணி
தேவி ஸகல ஸெளபாக்ய
யோகினி ஸ்வயம்
ஸித்தம் விஜயீ பவ’
இந்த மந்திர ஸ்துதியை 9 முறை உச்சாடனம் செய்ய வேண்டும். அப்போது நெய் தீபத்திற்கு அட்சதையைக் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். மந்திர அர்ச்சனையை நிறைவு செய்தபின்பு கற்கண்டுப் பொடி கலந்த பச்சரிசி மாவை, நைவேத்தியப் பசும்பாலுடன் சிறிது கலந்து கணவன்– மனைவி இருவருமே பிரசாதமாக அருந்தினால், குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும். தம்பதியர் இருவருக்குள்ளும் அன்யோன்யம் வலுப்பெறும்.
No comments:
Post a Comment