Thursday, September 4, 2014

எடுத்த காரியம் முடிய எல்லா நன்மைகளும் பெற




ஸிவ: ஸக்த்யா யுக்தோ யதி பவதி ஸக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குஸல: ஸ்பந்திது-மபி
அதஸ்-த்வா-மாராத்த்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத-மக்ருத-புண்ய: ப்ரபவதி

இன்ப அலைப்பெருக்கு (தமிழ்)

சிவன் எனும் பொருளும் ஆதி சக்தியொடு சேரின் எத்தொழிலும் வல்லதாம்;
இவள் பிரிந்திடின் இயங்குதற்கு அரிதரிது என மறை இரைக்குமால்
நவபெரும் புவனம் எவ்வகைத் தொழில், நடத்தி யாவரும் வழுத்து தாள்,
அவனியின் கண், ஒரு தவம் இலார், பணியல் ஆவதோ? பரவல் ஆவதோ?

பொருள்: அன்னையே! பராசக்தியான உன்னுடன் பரமசிவன் சேர்ந்திருந்தால்தான் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் (ஆக்கல், காத்தல், அழித்தல்) என்னும் முத்தொழில்களையும் செய்ய முடியும். அவ்வாறில்லையேல் அவரால் அசையவும் இயலாது. எனவே ஹரி, ஹரன், பிரம்மன் ஆகியோர் அனைவரும் போற்றித் துதிக்கும் பெருமை பெற்றவளான உன்னைத் துதிக்க முற்பிறவிகளில் புண்ணியம் செய்யாதவனால் எப்படி முடியும்?

ஜபமுறையும் பலனும்

12 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து இந்த ஸ்லோகத்தை 1000 தரம் தொடர்ந்து ஜபித்தால், தடைகளெல்லாம் நீங்கி, எடுத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். எல்லா நன்மைகளையும் பெறலாம்

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...