தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண-பங்கேருஹ-பவம்
விரிஞ்சி: ஸஞ்சிந்வந் விரசயதி லோகா-நவிகலம்
வஹத்யேநம் ஸெளரி: கதமபி ஸஹஸ்ரேண ஸிரஸாம்
ஹர: ஸம்ட்சுத்யைநம் பஜதி பஸிதோத்தூளந-விதிம் டி
பாத துளியின் சிறப்பு (தமிழ்)
பாத தாமரையின், நுண்துகள், பரம அணுவினில், பல இயற்றினால்,
வேத நான்முகன் விதிக்க, வேறுபடு விரிதலைப் புவனம் அடைய; மால்,
மூது அரா வடிவு எடுத்து, அனந்தமுது கணபணாடவி பரிப்ப; மேல்
நாதனார், பொடிபடுத்து, நீறணியின் நாம் உரைத்தது என்? அவள் பாண்மையே!
பொருள்: தாயே! தாமரை மலர்களைப் போன்று சிவந்த உன் திருவடிகளிலிருந்து எழுந்த மிக நுண்ணிய தூளியை சேர்த்து வைத்துக் கொண்டு பதினான்கு உலகங்களையும் பிரம்மா விசாலமாகப் படைக்கிறார். அதுபோன்றே, மகாவிஷ்ணுவும் ஆதிசேஷன் என்னும் உருவில் பதினான்கு உலகங்களையும் மிகுந்த சிரமத்துடனாவது தாங்குகிறார். பரமசிவனோ, இதை நன்றாகப் பொடி செய்து கொண்டு, விபூதி பூசுவதைப் போன்று உடல் முழுவதும் பூசிக் கொள்கிறார்.
ஜபமுறையும் பலனும்
55 நாட்கள் தினமும் காலையில், வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் ஞானம், செல்வம், புத்ர ஸந்ததி, பதவி, புகழ் முதலிய ஸகல நன்மைகளும் உண்டாகும். ஜடப்பொருள்களால் ஏற்படும் தடைகள் நீங்கும்.
No comments:
Post a Comment