.
சிரஞ்சீவியான ஹனுமனை வழிபட்டால், சனியின் சஞ்சாரத்தால் ஏற்படும் துன்பங்கள் குறையும் என்பார்கள்.
ஆற்றல், அறிவு, துணிவு, வெற்றி ஆகியவற்றை அருளும் ஹனுமன், சதா சர்வ காலமும் ‘ஸ்ரீராம் ராம், ஜெய ராம், ஜெய, ஜெய ராம்’ என ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திவ்ய நாமத்தையே சொல்லிக் கொண்டிருப்பவர்.
அந்த மந்திரத்தைச் சொல்லாவிட்டாலும், ராம ராம என்று ராம நாமத்தைச் சதா ஜபித்துக் கொண்டிருந்தாலும், தாமே தேடி வந்து அருள்பவர்
ஹனுமன். உலகத்தோருக்கு ஒரு மந்திரம் உபதேசித்திருக்கிறார்.
அந்த மந்திரம் இதுதான்…
ஓம் ஸ்ரீ யோகீஸ்வர யாக்ஞவல்க்ய குருவே நமஹ’
இந்த மந்திரத்தில், ‘ஓம்’ பிரணவத்தையும், ‘ஸ்ரீ’ சக்தியையும், ‘யோகீஸ்வர’ பரமேஸ்வரனையும், ‘யாக்ஞவல்க்ய’ பரந்தாமன் மகா விஷ்ணுவையும், ‘குரு’ நான்முகனையும் குறிப்பதாகும்.
ஹனுமனின் முதல் குரு சூரிய பகவான். ஆதவனின் முக்கியச் சீடர் யாக்ஞவல்கியர், சுக்ல யஜுர் வேதத்தை சூரியனிடமிருந்து கற்றவர். இவர் ஆஞ்சநேயரின் இரண்டாவது குருவாவார்.
மேற்கண்ட மந்திரத்தை முறையாக உபதேசம் பெற்று ஜபித்தால், சகல நன்மைகளையும் அடையலாம்.
No comments:
Post a Comment