நமச்சிவாய ருத்ராய நமஸ்தே விஸ்வமூர்த்தயே
நமஸ்தே நீலகண்டாய நமஸ்தே சந்த்ர மௌள்யே
த்ரிவர்கபலதாத்ரேச த்ரயீமூர்த்தே நமோ நம
நமோ ஜீவாத்மநே துப்யம் நமஸ்தே பரமாத்மநே
ஸார முனிவர் இயற்றிய தாயுமானவர் ஸ்தோத்திரம்
துயரத்தைப் போக்கும் ருத்ர மூர்த்தியாக விளங்கும் தாயுமானவரே, நமஸ்காரம். மங்களத் திருவுருவே நமஸ்காரம். (தொண்டையில் விஷம் தாங்கியதால்) நீலகண்டராக விளங்கும் கருணைப் பரம்பொருளே நமஸ்காரம். சந்திரனை தலையில் தரித்த பெருந்தகையே நமஸ்காரம். எல்லா நன்மைகளையும் அளிப்பவரும், வேதரூபமாகத் திகழ்பவருமான ஈசனே நமஸ்காரம். அனைத்து ஜீவன்களுக்கும் பரமாத்மாவே நமஸ்காரம்.
இம்மந்திரத்தை 21 முறை ஜெபித்து வர உங்கள் குடும்பத்தில் நிம்மதி நிலவும். வியாபாரம், உத்யோக இனங்களில் மேன்மை கிட்டும்; மனதில் அமைதி நிறையும்.
No comments:
Post a Comment