Wednesday, January 6, 2016

வள்ளியூர் ஸ்ரீசுப்ரமண்யர் கோயில்



  திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில், சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது வள்ளியூர். இங்கே, குன்றில் இருந்தபடி கோலோச்சுகிறார் குமரக் கடவுள்.

  அசுரர்களை அழித்து, ஜெயித்து, துயரங்கள் துடைத்தார் கந்தபிரான். அதில் மகிழ்ந்த இந்திரன் தன் மகளான தெய்வானையை ஸ்ரீசுப்ரமண்யருக்கு மணம் முடித்து வைத்தார். அதையடுத்து, வேடர்களின் தலைவனான நம்பிராயனின் மகள் சுந்தரவள்ளி என்பவளை கிழவனாக வந்து, மணம் புரிந்தார் கந்தபெருமான். அந்தத் திருத்தலம் இதுவே என்கிறது ஸ்தல புராணம்! இதனால் இந்த ஊர் வள்ளியூர் என அழைக்கப்பட்டது என்று தெரிவிக்கிறது ஸ்தல வரலாறு.

  குன்றின் மேல் கோயில் கொண்டிருக்கிறார் முருகப்பெருமான். ஸ்ரீவள்ளியின் சந்நிதி, குகையில் அமைந்துள்ளது. திருச்செந்தூரில் தரிசிப்பதற்கு முன்பு இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீசுப்ரமண்யரையும் ஸ்ரீவள்ளியையும் வணங்கிச் செல்வார்கள் பக்தர்கள்!

  அகத்தியரும் அருணகிரிநாதரும் தரிசித்த, அழகிய குடைவரைக் கோயில் இது. திருமணக் கோலத்தில் முருகக்கடவுள் காட்சி தருவதால், திருமணத் தடையால் கலங்கும் பக்தர்கள், இங்கு வந்து, கல்யாணக் கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீசுப்ரமண்யரையும் ஸ்ரீவள்ளியையும் தரிசித்தால், விரைவில் கல்யாண வரம் கைகூடும் என்பது ஐதீகம்!

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...