Saturday, January 23, 2016

ஸ்ரீகுற்றாலநாத சுவாமி கோயில்



நெல்லையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது தென்காசி. இந்த ஊருக்கு அருகிலேயே உள்ளது குற்றாலம். சலசலவென அருவியில் சப்தமும் பச்சைப்பசேல் எனும் மரங்களின் குளுமையும் ஓங்கி உயர்ந்த மலைகளின் பேரழகுடனும் சூழ, அழகுற அமைந்திருக்கிறது ஸ்ரீகுற்றாலநாத சுவாமி  கோயில். சுவாமியின் பெயர் ஸ்ரீகுற்றாலநாத சுவாமி. அம்பாள் ஸ்ரீகுழல்வாய்மொழி அம்மன்!

  புராணம் மற்றும் இலக்கியத்திலும் தொடர்புகள் பல கொண்ட அற்புதமான ஆலயம் இது. பிருகு மன்னனுக்கு இருந்த ஒரே வருத்தம்... சுருசி என்பவன் சிவனாரை நிந்தித்து வந்ததுதான்! இதுகுறித்து அகத்தியரிடம் முறையிட்டான். மேலும் இந்த ஆலயம், வைணவக் கோயிலாக இருந்தது. அருகில் உள்ள இலஞ்சி தலத்துக்குச் சென்று முருகக்கடவுளை வேண்டினார் அகத்தியர். பிறகு கந்தனின் ஆணைக்கிணங்க, வைணவ அடியார் போல உள்ளே நுழைந்து, திருமாலை வணங்கி, ‘குறுகுக குறுகுக குற்றால நாதா’ என்று சொல்லி, திருமாலின் தலையில் தன் கையை வைத்து, அழுத்த... குற்றாலநாதராக திருமேனி மாறியது என்கிறது புராணம்!

 இதனால் குற்றாலநாதருக்கு தீராத தலைவலி ஏற்பட்டதாம். ஆகவே தினமும் காலசந்தி பூஜையில், 64 வகையான மூலிகைகள் கொண்ட சந்தனாதித் தைலம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.

அம்பாளும் சக்திவாய்ந்தவள். 64 சக்தி பீடங்களில் பராசக்தி பீடமாக இந்தத் தலம் போற்றப்படுகிறது.

 கோயில் நேரம் :
 காலை 6 முதல் மதியம் 12.30 வரை.
 மாலை 4.30 முதல் இரவு 8 வரை.

- வி.ராம்ஜி

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...