Friday, January 8, 2016

அனுமனை வணங்கினால் சனீஸ்வர பயமில்லை!



  இலங்கைப் போரின்போது, இந்திரஜித்தின் அஸ்திரத்தால் மயங்கி வீழ்ந்து உயிருக்குப் போராடிய லட்சுமணனையும் வானர சேனைகளையும் காப்பாற்ற, அனுமன் சஞ்ஜீவி மலையைப் பெயர்த்தெடுத்து வந்தார். அப்போது, ராவணனின் ஆணைக்கு இணங்க, அப்போது அவனுடைய கட்டுப்பாட்டில் இருந்த சனி பகவான், அனுமனைத் தடுத்து நிறுத்த முற்பட்டார்.

   தன்னை வழிமறித்த சனியிடம், ‘‘போர்க்களத்தில் மலையைச் சேர்த்து விட்டுத் திரும்பும்போது நாம் பலப்பரீட்சை செய்யலாம். இப்போது வேண்டாம்’’ என்றாராம் அனுமன். ஆனால் சனி, அனுமனின் வேண்டுகோளை ஏற்கவில்லை. ஆவேசத்துடன் அனுமன் மீது பாய்ந்தார். இதனால் கோபம் கொண்ட அனுமன், சனியைத் தன் காலில் சுற்றிக் கட்டிக்கொண்டு போர்க்களத்தை நோக்கிப் பறந்தாராம். பிறகு, அவர் மீண்டும் அதே இடத்துக்குத் திரும்பி வந்து, சனி பகவானுக்கு விமோசனம் தந்ததாக புராணம் உண்டு!

 விமோசனம் பெற்ற சனிபகவான், ‘இனி தங்களை வணங்கும் அடியார்க்கு என்னால் பாதிப்பு இருக்காது’ என்று வாக்கு தந்தாராம். இங்கே அனுமன் நின்ற இடத்தில்தான் தற்போது கோயில் அமைந்திருக்கிறது.

  தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ளது ஹனுமந்தன்பட்டி. இங்கே, சுரபி நதிக்கரையில் கோயில் கொண்டிருக்கிறார் சனிபந்தன ஹனுமந்தராயப் பெருமாள். மிகுந்த வரப்பிரசாதி இவர்!

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...