Wednesday, January 6, 2016

கூன் முதுகை நிமிர்த்திய சிவவிபூதி!



 சைவமும் சமணமும் தழைத்தோங்கியிருந்த காலம் அது. கூன்பாண்டியன் என்றும் நெடுமாறன் என்றும் அழைக்கப்பட்ட பாண்டிய மன்னன் மதுரையை தலைநகராகக் கொண்டு, ஆட்சி செய்தான். சமணத்தில் ஈடுபாடு கொண்டிருந்தான். அதேநேரம் அவன் மனைவி மங்கையர்க்கரசியார் சைவநெறி பிறழாமல், சிவாலயங்களுக்கு திருப்பணி செய்தும் சிவனாரைத் துதித்தும் வந்தாள்.

  கணவன் மனைவிக்கு இடையே கடவுள் பக்தியால் பிரச்னை வந்தாலும், மதுரையையும் மக்களையும் குறைவின்றி காபந்து செய்வதில் குறிக்கோளாக இருந்தார்கள் இருவருமே! 
  நான் பிறந்த சோழ தேசம் போல, புகுந்த வீடான இந்த பாண்டியநாடும் சைவ தேசமாகத் திகழ வேண்டும் என மங்கையர்க்கரசியார் விரும்பினார். திருமறைக்காட்டில் இருந்த திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து, விபரங்கள் தெரிவித்தார். இங்கே சமணத்தின் பிடியில் இருந்து மன்னரை மீட்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

 அப்போது கூன்பாண்டிய மன்னனிடம், நமசிவாய மந்திரங்களை ஓதினார் ஆளுடையப்பிள்ளை. திருமறைக்காடு எனும் வேதாரண்யத்தில் இருந்து எடுத்து வந்த விபூதியை வழங்கினார். அந்த விபூதியை வேண்டாவெறுப்பாக, நெற்றியில் பூசிக்கொண்டார் மன்னர். அந்த விநாடியே, மன்னனின் முதுகு நிமிர்ந்தது. அவருக்கு இருந்த வியாதிகளும் நீங்கின! அப்போது அனல்வாதம் புனல்வாதம் எனும் தர்க்கம் சமணத்துக்கும் சைவத்துக்கும் நடந்தது. ஆளுடையப்பிள்ளை, ‘வேந்தனும் ஓங்குக’ என்று பாட... மன்னனின் கூன் முதுகு நிமிர்ந்ததாகச் சொல்கிறது வரலாறு.

அதில் நெகிழ்ந்த நெடுமாற மன்னன், சிவத்தொண்டுகள் புரியத் துவங்கினார். சிவனார் அவருக்கு தரிசனம் தந்து ஆட்கொண்டார். நின்ற சீர் நெடுமாற நாயனார் என்று இன்றளவும் போற்றப்படுகிறார்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...