Saturday, January 23, 2016

கால சம்ஹாரர்!



   சிவனடியார்களை கவருவதற்கு எமதருமன் வரும் போது,  அந்தக் காலனையே அழித்து அருள் புரிவதால், சிவனாருக்கு கால சம்ஹாரர், எம சம்ஹாரர் எனும் திருநாமம் அமைந்தது. ‘மிருத்யுஞ்ஜயர்’ என்றும் சொல்வார்கள்!

  கௌசிக முனிவரின் புதல்வர் மிருகண்டு. அவர் மனைவி மருத்துவதி. அவர்கள், ஆண் குழந்தை வேண்டி தவம் செய்தனர். அப்படி அவதரித்த மைந்தன் மார்க்கண்டேயன். அவனுக்கு வயது 16 மட்டுமே என்பது பிரம்மாவின் கணக்கு! ஆனால் அவனோ சிவபக்தன்! 16 வயதை அடையும் வேளையில், அவன் உயிரைக் கவர்ந்து செல்ல எமதருமன் வந்தான்.

  அப்போது சிவபூஜையில் இருந்தான் மார்க்கண்டேயன். எமன் அழைக்க, அப்படியே சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டான். மார்க்கண்டேயனுடன் சிவலிங்கத்தையும் சேர்த்து பாசக்கயிற்றால் இழுத்தான் எமன். சிவபெருமான் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு காலனை உதைத்தார். காலன் வீழ்ந்தான். மார்க்கண்டேயன் ‘என்றும் பதினாறு’ எனும் வரம் பெற்றான்.

  இறைவன் மார்க்கண்டேயருக்கு வரங்கள் தந்த பின் அந்த லிங்கத்திலேயே மறைந்து அருளினார். இதனால், சிவபெருமான், கால சம்ஹாரர், எம சம்ஹாரர் என்று திருவடிவம் கொண்டு அருள் புரிந்து வருகிறார்!

- வி.ராம்ஜி

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...