Saturday, January 23, 2016

ஸ்ரீசங்கரநாராயண சுவாமி கோயில்



நெல்லையில் இருந்து 54 கி.மீ. தொலைவிலும் ராஜபாளையத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது சங்கரன்கோவில். சைவ வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக சிவனாரும் திருமாலும் ஒன்று சேர்ந்து அருள்பாலிக்கும் அற்புதமான திருத்தலம். அம்பாளின் திருநாமம் ஸ்ரீகோமதி அம்பாள்!

சங்கரன்கோவில் மட்டுமின்றி நெல்லை மாவட்டத்தில் பிறக்கும் பெண் குழந்தைக்கு கோமதி என்றே பலரும் பெயர்சூட்டுவார்கள்.

சைவ வைணவ வேறுபாடு நீங்காதா என்று உமையவள் கேட்க, பூலோகத்தில், புன்னைவனத்தில் நீ தவம் செய். அதற்கான விடை கிடைக்கும் என அருளினார் சிவபெருமான். அதன்படி இங்கு வந்து தவமிருந்தாள் அம்பிகை. ஆடி மாத உத்திராட நட்சத்திர நாளில், ஹரியும் ஹரனும் ஒன்றே என திருக்காட்சி தந்தருளினார் சிவனார். அன்று அம்பிகைக்குக் காட்டிய திருக்கோலத்தில், ஸ்ரீசங்கரநாராயணராக இன்றைக்கும் காட்சி தந்து அருள்பாலித்து வருகிறார்கள் சங்கரன்கோவிலில்!

சிருங்கேரி பீடாதிபதி வழங்கிய ஸ்படிக லிங்கம், திருவாவடுதுறை ஆதீனம் அமைத்த ஸ்ரீசக்கரம், புற்று மண் பிரசாதம், எனப் பலபெருமைகள் கொண்ட திருத்தலத்துக்கு வந்து வேண்டிக் கொண்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். கல்யாண வரன் அமையும். வீட்டில் தடைப்பட்ட மங்கல காரியங்கள் நிகழும் என்பது ஐதீகம்!

 கோயில் நேரம் :
 காலை 6 முதல் மதியம் 12.30 வரை.
 மாலை 4 முதல் இரவு 9 வரை.

- வி.ராம்ஜி

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...