Wednesday, January 6, 2016

செப்பறை அழகியகூத்தர் ஆலயம்



  திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள ராஜவல்லிபுரத்தில், தாமிரபரணிக் கரையில் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீஅழகியகூத்தர். அம்பாளின் பெயர் ஸ்ரீசிவகாமி அம்பாள்.

  நெல்லையப்பர் சந்நிதியில் உள்ள அழகிய கூத்தரின் சிலை, ஹிரண்யவர்மன் எனும் சோழ மன்னன் காலத்தில், தில்லை சிதம்பரத்துக்கு முன்னதாகவே அமைக்கப்பட்டது. தஞ்சையில் வடித்து, சிற்பிகள் சிலையை எடுத்துக் கொண்டு தெற்கு நோக்கி இங்கே வந்தார்கள். இரண்டாவதாக செய்த சிலையே சிதம்பரத்தில் உள்ளது.

  இந்த நிலையில், மணப்படைவீடு எனும் சிற்றூரை முழுதுங்கண்ட ராமபாண்டிய மன்னன் ஆட்சி செய்து வந்தான். சிறந்த சிவபக்தன். தாமிரபரணியில் வெள்ளம் வரவே மன்னனால், மறுகரைக்கு வர முடியவில்லை. நெல்லையப்பரை தரிசிக்கமுடியவில்லை. தஞ்சையில் இருந்து வரும் நடராஜர் திருமேனியை உன் ஊரில் உள்ள நதியின் கரையில், சாரைசாரையாகச் செல்லும் எறும்புகள் நிற்கும் இடத்தில் ஆலயம் அமைப்பாயாக என அசரீரி கேட்டது.

  அதன்படி, நெல்லையப்பரும் காந்திமதி அன்னையும் தனிச்சந்நிதியில் இங்கேயும் எழுந்தருள... அழகியகூத்தனாக நடராஜர்பெருமான் இன்றைக்கும் காட்சி தருகிறார். செப்பால் செய்யப்பட்ட சபா மண்டபம் (தாமிர சபை) இங்கே உள்ளது. எனவே செப்பறை என்பது தலத்தின் பெயராயிற்று!

  அழகிய கூத்தர் குடிகொண்டிருக்கும் அழகிய ஆலயம், அமைதியும் நல்லதொரு அதிர்வும் கொண்ட அற்புதமான தலமாகப் போற்றப்படுகிறது!

  கோயில் நேரம் :
  காலை 6 முதல் மதியம் 11.30 வரை.
  மாலை 4 முதல் இரவு 8 வரை.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...