1902ம் வருடத்தில் பெங்களூரு மல்லேஷ்வரம் பகுதியில் வாழ்ந்த மக்களால் இவ்வாலயம் கட்டப்பட்டது. மைசூர் மகாராஜா அவரது நிலத்தையும், அதிகபட்ச நன்கொடையையும் வழங்கினார். பஞ்சராத்திராகம சாஸ்திர விதி முறைப்படி இவ்வாலயம் கட்டப்பட்டது. வேத மந்திரங்கள், தமிழ் வேதங்கள் முழங்க இங்கே பூஜைகள், ஆராதனைகள் நடைப்பெறுகின்றன.
நூறு வருடத்திற்கு முன்பு கருங்கல்லால் கட்டப்பட்ட ஆலயம் இது. எல்லா விக்கிரகங்களும் வெவ்வேறு இடங்களிலிருந்து வரவழைக்கப்பட்டது. மூலவரின் சிலை ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்தது. திருக்கடலூர் எனும் இடத்தில் ஒரு இடிப்பாடான கோவிலிலிருந்து இச்சிலை கொண்டு வரப்பட்டது.
No comments:
Post a Comment