Sunday, July 8, 2018

பகவத் கீதை கூறுவதென்ன ?


போர்க்களத்தில்   தன் உறவினர்களையே  எதிர்த்துப்  போர்  புரிவதா?  எனக்  கலங்கி நின்ற  அர்ஜுனனின்   மனதை   அமைதிப்படுத்தப்     பற்பல விதமாக   யோகங்களைக்  கூறி    அர்ஜுனனின்  கடமையை  எடுத்துரைத்தார் கிருஷ்ணர். "கடமையைச் செய்; பலனை எதிராபாராதே" என்றார்  கிருஷ்ணர். உனது கடமை   போர் செய்வது மட்டுமே;  அதன் பலனை  எதிர்பார்க்க உனக்கு   உரிமையில்லை  என்றார் கிருஷ்ணர்.   இவ்வாறு கிருஷ்ணர்   அர்ஜுனனுக்கே போதித்ததே "கீதை" என்ப்படுகிறது.   அர்ஜுனனின் கொடியில் இருந்த  ஆஞ்சநேயரும்,    போரைப் பற்றி பார்வையற்ற  திருதராஷ்டிரனுக்கு எடுத்துக் கூறுவதற்காகத்   திவ்விய திருஷ்டியைத்    திருதராஷ்டிரனின்  தேரோட்டியான    சஞ்சயனுக்கு வழங்கியிருந்தார்  வேதவியாசர். எனவே  போர்க்களத்தில் நடப்பதை     அரண்மனையில் இருந்தவாறே   பார்த்து, திருதராஷ்டிரனுக்குக்  கூறிக்கொண்டிருந்தார்   சஞ்சயன். எனவே அவரும் கீதையை  உடனுக்குடன் கேட்கும் பாக்கியத்தைப் பெற்றார்; மன்னனுக்கும் கூறினார்.   இந்த கீதையில் அப்படி என்ன சிறப்பு  என்றால்,    கீதை  ஒரு உபநிஷதம்.   மனதை  அடக்குவதற்கு   யோகம் முதலியவற்றைக் கூறி  ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றே! என அத்வைதக் கருத்துகளை  அதிகம் கூறும் நூல். "நானே எல்லா உயிருள்ள, உயிரற்றவைகளிடமும் இருக்கிறேன்" எனக் கண்ணன்  கூறியது.   போர்க்களத்தில் எவாவாறு கீதையைக் கூற முடியும் என்றால்,  அர்ஜுனன்  மிக முக்கியமானவன்;அவன் போரைத் துவங்காதவரைப்   பாண்டவர்களின்  பக்கத்தில்    பிறரும் போரைத் துவங்கமாட்டார்கள்.எனவே போர்,  துவங்கும் முன்னர்  போர்க்களத்தின் நடுவே  தேரை நிறுத்தியபடி,  கிருஷ்ணர், அர்ஜுனனுக்குக்  கீதையைப்    போதித்தார்.   இவர்  சுலோகங்களாகவே  கீதையைக்  கூறியிருப்பதால் அனைத்தையும் 20 நிமிடங்களிலேயே அர்ச்சுனனுக்கு கூறிவிடமுடியும்.  பிறகு வருணாசிரமம் என்றால் என்ன எனத் தெரியாமலே பல அறிவுஜீவிகள்  கீதை, வருணாசிரமக்  கொள்கையை   உயர்த்திப் பிடிக்கும்  நூல் என்கின்றனர்.  அதென்ன வருணாசிரமம் எனப் பார்க வேண்டும்.  எதையும்  சரிவரத்   தெரிந்துக்  கொள்ளாமலேயே  அதைக் கண்மூடித்தனமாகச் சில அறிவிலிகள் கூறுவதைக் கேட்டு எதிர்ப்பதுத் தானே  சில   பிற்போக்குச்  சிந்தனையாளர்களின்  முக்கிய பணி.  நிற்க.    இன்னென்ன தொழிலைச் செய்வோர்   இவரிவர்,எனப் பிரித்ததே வருணங்கள் என்பது. அதையே வருணாசிரமக் கொள்கை என்கின்றனர்.  இது பிறப்பின் அடிப்படையில் பிரித்ததில்லை.  வேதம் ஓதுபவன் அந்தணன்.  நாட்டைஆளுபவன்  சத்ரியன்(  அரசன்),   வியாபாரம் செய்பவன் வணிகன், விவசாயம் செய்பவன் வேளாளன்   என்பதே  நால்வகை வருணங்கள்.  தமிழிலக்கணத்திலும் இதுவே  நால்வகை வருணங்கள்.  தொல்காப்பியரும் தொழிலை வைத்து பிரித்ததே வருணங்கள் என்கிறார்.  மிகவும் பிற்காலத்திலேயே அவை சாதி என்றானது.  காலப்போக்கில் மக்கள் அவற்றை சாதி எனத் தவறுதலாகப் புரிந்துக்கொண்டு, அதுவே  பின்னாளில் நிலையானது.   கீதையை எழுதியதும் பாரதத்தை எழுதிய வியாசரே. அவர் மீனவப்பெண்ணான   மச்சகந்திக்குப்  பிறந்து தவம் செய்து பிராமணரானவர்.   கீதையைப் படித்தறியாமலேயே  பிறர் கூறுவதைக் கேட்டு,  கீதையைச்  சிலர் பழிக்கின்றனர். அவ்வாறவர்களைப் பார்த்து பரிதாபப்படவே முடியும். ஏனெனில் கீதையைப் படிக்கவோ, கேட்கவோ  செய்ய  பூர்வத்தில்  புண்ணியம்  பலவும் செய்திருக்கவேண்டும்.   'வருணங்களை  நான் உருவாக்கினேன்' எனக் கிருஷ்ணர்  கீதையில் உண்மையாகவே கூறியிருக்கிறாரா? என்றால் இல்லை!  என்பதே  அறிஞர்களின் கருத்து.    கீதைக்கு விளக்கம் எழுதிய  சிலர் சரியாக மொழிப்பெயர்க்காது இருந்திருக்கலாம்.உண்மையில்  கிருஷ்ணர்,  'பிறப்பின்  அடிப்படையில்  வருணங்களை உருவாக்கினேன்'  என எங்கேயும் கூறவில்லை.  "நான் கர்மம்  செய்யாவிட்டால்  இவ்வுலகங்கள் அழிந்துபோம்.    அனைத்துவிதக்  குழப்பங்களுக்கும்   நானே கர்த்தாவாக  மக்களைப்  பாழாக்கியவனாவேன்"  ( கர்மயோகம்_ 24 வது சுலோகம்)   என்கிறார் கிருஷ்ணர்.  இங்கே கர்மம் என்பது    அவரவர் கடமை.
'"ஆத்மா அழியாதது"  என  ஆத்மாவைப் பற்றியும்,  கடமையைச் சரிவரச் செய்வதன் முக்கியம் பற்றியுமே கீதை அதிகம் பேசுகிறது.   'இந்த பிரபஞ்சமே  எனது படைப்பு; ஒவ்வொரு  உயிரினத்திலும், அசைகின்ற, அசையாதவற்றிலும்  நானே இருக்கிறேன்' என்பதையே கிருஷ்ணர்  கீதையில்  கூறுகிறார்.
கீதையின்  மகாத்மியம் அளப்பரியது;  பல பிறவிகளில்  புண்ணியம் செய்தோரே கீதையைப் படிக்கும் பாக்கியத்தைப் பெறுவர்.

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...