Saturday, July 7, 2018

தாமஸும் கட்டு கதைகளும்

அக்காலத்தில் ஆசியா என்றொரு பெயர் அந்த கண்டத்துக்கு வழங்கப்படவில்லை. பாரதமோ, இந்த பக்கம் ஈரான் வரை, அந்த பக்கம் திபெத் வரை நீண்டிருந்தது. அதனால் இந்த கண்டத்தில் கால் வைத்தாலே பாரதத்திற்கு சென்றேன் என்று கூறிவிட்டார்கள்.
அடுத்து, வாஸ்கொடகாமா 1498 ஆம் ஆண்டுதான் வந்தார் என்று வரலாறுகள் கூறுகின்றன. அவர்தான் இந்தியாவுக்கான வழியை கண்டுபிடித்தார் என்று கூறிக்கொள்கிறார்கள். கொலம்பஸ் எங்கு கால் வைக்கிறோம் என்று தெரியாமலே போன இடத்துக்கெல்லாம் இந்தியா என்றும் அங்குள்ளவர்களை செவ்விந்தியர்கள், மேற்கிந்தியர்கள் என்று பெயர் வைத்தார்கள்.
தைரியம் இருந்தால் கிருஸ்தவர்கள், சர்ச்சில் இருக்கிறது என்று சொல்லப்படும் பிணத்துக்கான வயதை கண்டறியும் CARBON DATING முறையை பின்பற்றி வயதை நிரூபிக்கட்டும். அந்த இடத்தில் ஒரு 2000 ஆண்டுகள் பழமையான பிணம் இருப்பதற்கான சாத்தியக்கூறே இல்லை என்கிறார்கள். வராத ஆளை வந்ததாக கூறி, இல்லாத பிணத்தை இருப்பதாக கூறி, அந்த இடத்திலிருந்து ஹிந்துக்களை விரட்டியுள்ளார்கள். இதற்காக போர்த்துகீசியர்கள் போராடினார்கள் என்றெல்லாம் நினைக்கவே வேண்டாம். ஒரு பிணத்தை சவப்பெட்டியோடு கோவிலின் உள்ளே கொண்டு வந்தால் போதும். மொத்த ஹிந்துக்களும் தீட்டு பட்டுவிட்டது என்று கோவிலை காலி செய்துகொண்டு போய்விடுவார்கள். சிலசமயம் இவர்கள் கோவிலுக்கு உள்ளே வந்தால் கூட போதும். ஒருவரும் கோவிலுக்குள் வரமாட்டார்கள். கிட்டத்தட்ட மொத்த கோவாவின் கோவில்களும் இப்படித்தான் கைப்பற்றப்பட்டது.
கிருஸ்தவர்கள் சொல்லும் எல்லா ஆதாரங்களும் 'இருக்கலாம்', 'நம்பப்படுகிறது', 'நடந்திருக்கவேண்டும்' போன்ற சொற்களே உள்ளன. அதனால்தான் போப் பெனடிக்ட் அன்று புனிதர் தாமஸ் இந்தியா வந்ததற்காக ஆதாரங்கள் எதுவும் இல்லை. அதனால் அவர் இந்திய வரவில்லை என்று கூறினார். இது இங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தாமஸ் இந்தியா வரவில்லையென்றால் புனித தாமஸ் மலையை வைத்துக்கொண்டு என்ன செய்ய? சின்ன மலை சர்ச்சை வைத்துக்கொண்டு என்ன செய்ய? மயிலை புனித தாமஸ் சர்ச்சை வைத்துக்கொண்டு என்ன செய்ய? எல்லாமே பொய்யென்று இப்படி போட்டு உடைத்துவிட்டாரே, இத்தனை நாட்களாக நாம் மக்களை ஏமாற்றியது போச்சா எனும்போது, ஊடகங்கள் அந்த செய்தியை பரப்பாமல் அப்படியே மறக்கடித்து, மேலும் மேலும் சினிமா, பலாத்காரம் செய்திகளை தந்து உதவின. மக்கள் மறந்தார்கள்.

புனிதர் தாமஸ் இந்தியா வந்தார் என்று சொல்வதற்கு இவர்கள் காட்டும் ஒரே ஆதாரம் ACTS OF THOMAS என்ற புத்தகம். அதில் இரண்டே இடங்களில் இந்தியா வந்ததாக கூறப்படுகிறது. அதுவும் இப்போதைய இந்தியா அல்ல. சொல்லப்போனால் நமது நாட்டுக்கு இந்தியா என்ற பெயரே 1835க்கு பிறகுதான் திணிக்கப்பட்டது. “Fear not, Thomas. Go away to India and proclaim the Word, for my grace shall be with you.” இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா என்ற பெயரே இல்லாத தேசத்துக்கு எப்படி தாமஸின் கனவில் வந்து இயேசு சொன்னார்?
இந்தியர்கள் பல நாடுகளில் பரவி வாழ்ந்துள்ளனர். அவ்வாறு அங்கும் ஒரு கூட்டம் இருந்து, ஒரு காலனியாக உருவாகியுள்ளது. இன்றும் முருகன் வழிபாடு செய்யும் ஏஸிதி இனத்தவர் ஈராக்கில் வாழ்வதை காண்கிறோம்.

கிபி 304இல் புனிதர் கிரெகோரி என்பவர் அவர்கள் வாழும் பகுதியில் இருந்த இந்தியர் காலனிக்கு வந்துள்ளார். அங்கு இந்தியர்கள் இப்போது மலேஷியா, டிரினிடாட், அமெரிக்கா சென்று கோவில்கள் கட்டுவது போல அங்கும் சென்று கட்டியுள்ளார்கள். அவர்கள் மீது போர் தொடுத்து, அவர்களது கோவில்களை அழித்துள்ளார்.
அங்கிருந்த 18 மற்றும் 22 அடி உயர விக்கிரகங்களை உடைத்து அழித்துள்ளார் கிரெகோரி.
மேற்கண்டவாறு, HISTORY OF HINDU CHRISTIAN ENCOUNTERS என்ற புத்தகத்தில் திரு சீதா ராம் கோயல் எழுதுகிறார். இவர்கள் வந்து சென்ற இடம் அன்றைய பார்த்தியா, இன்றைய ஆப்கனிஸ்தான். இதை நடுநிலை வரலாற்றாசிரியர்கள் கிளெமென்ட், ஒரிஜென் மற்றும் யுசெபியஸும் ஊர்ஜிதம் செய்கிறார்கள்.

கிருஸ்தவர்கள் தாமஸ் இந்தியா சென்றார் என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை என்கிறார்கள். நீதிபதி C B WAITE என்பவர் தன்னுடைய HISTORY OF THE CHRISTIAN RELIGION TO THE YEAR TWO HUNDRED எனும் புத்தகத்தில் எல்லோரும் வாக்குமூலங்களை, சத்தியங்களும் செய்கிறார்களே ஒழிய யாரும் ஆதாரம் தரவே இல்லை என்கிறார். கிறிஸ்தவர்களின் ACTS OF THOMAS எனும் புத்தகம் நம்பகத்தன்மை வாய்ந்ததே அல்ல என்று முடிக்கிறார்கள்.

இந்த நிலையில், யாராவது ஒருவர் வழக்கு தொடுத்து, சாந்தோம் சர்ச்சில் இருப்பதாக சொல்லப்படும் மொத்த பிணத்தின் வயது என்ன என்று கார்பன் டேட்டிங் செய்ய வழக்கு தொடுத்தால் வெளி வரும் உண்மை. ஏதோ ஒரு துணியை எடுத்து வந்து, ஏதோ ஒரு பிணத்தை எடுத்து வந்து, நானூறு ஆண்டுகள் பழையதாக இருந்தாலும் யாருக்கு தெரியும் அது நானூறு ஆண்டு பழையதா 2000 ஆண்டு பழையதா என்று. அப்படி ஏதாவது எலும்புகள் இருந்தால் மொத்த எலும்பையும் ஆராய்ச்சி செய்யவேண்டும். காரணம், இவர்கள் ஏதாவது ஒரு எலும்பை நாங்களே எடுத்து தருகிறோம் என்று எடுத்து தந்தால், அந்த பகுதி ஏதோ ஒரு 2000 ஆண்டு பழைய பிணமாக இருக்கவே வாய்ப்பு அதிகம். காரணம், ஏதோ ஒரு இடத்தில் புதைக்கப்பட்ட அந்த நிஜ தாமஸின் ஒரு முழங்கை எலும்பை எடுத்து வந்ததாக இதே புத்தகம் கூறுகிறது.

வழக்கு தொடுக்கவேண்டும்.
போராட வேண்டும்.
கோவிலுக்கு இடம் கிடைக்கிறதா என்பது ஒரு புறம். எது உண்மை என்று தெரிய வேண்டும்.
அது முக்கியம்.

சாந்தோம் சர்ச், சின்னமலை சர்ச், செயின்ட் தாமஸ் சர்ச்சுகளை காலி செய்துவிட்டு, ஹிந்துக்களிடம் ஒப்படைத்துவிட்டு, தவறு நடந்துவிட்டது, சரி செய்கிறோம் என்று கூறி ஒதுங்குவதுதான் கிறிஸ்தவர்களுக்கு அழகு. மாற்று நிலம் கூட ஹிந்துக்கள் விட்டு தருவார்கள். ஆனால், எங்கு முன்பு இறைவன் ஸ்தூலமாக வீற்றிருந்தாரோ அதே இடத்தில் திரும்ப கொண்டு வந்து ஸ்தாபிக்க வேண்டும்.

Anand Venkat

No comments:

Post a Comment

முத்துசாமி தீட்சிதர்

மிகபெரும் பக்திமான்களை, நாயன்மார் ஆழ்வார் வழிவந்த அதிதீவிர பக்தர்களை ஒருவலையில் ஞான சித்தர்களை வெறும் சங்கீத மும்மூர்த்திகள் என அடக்கிவிட்ட ...